நல்லி-திசை எட்டும் விருது — 2009

Nalli -- 01

கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி அலைபேசியில் அழைத்தார். அவர் எப்போதாவதுதான் — முக்கியமான விஷயமாக இருந்தால் மட்டும் — அழைப்பார். என்னவென்று கேட்டேன். வாழ்த்துச் சொன்னார். நல்லி திசை எட்டும்  2009-க்கான மொழியாக்க விருதுகள் பெற்ற பத்து பேரில் நானும் ஒருவன் என்றும், நான் தமிழாக்கம் செய்த ஹோமரின் இலியட் காவியத்துக்காக அந்த விருது என்றும் சொன்னார்.

கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் இரவு பகல் பாராமல் செய்த வேலை அது. அதற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பது குறித்து சந்தோஷம்தான். பத்ரி பேசிய பிறகு பாரா பாராட்டினார். பின்னர் மறுநாள் திசை எட்டும் ஆசிரியரும் விருது வழங்கும் விழா பொறுப்பாளருமாக இருந்த குறிஞ்சி வேலன் பேசினார். விழாவுக்கு நான் நண்பர்கள், குடும்பம் சகிதமாகச் சென்றேன். விழா சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் கீழேயே இருந்த பெரிய குளிர்பதனம் செய்யப்படாத அறை எண் மூன்றில் நடந்தது. நாள் ஆகஸ்ட், 09, 2009. ஞாயிறு.

நான் முன்னமேயே சென்று விட்டேன். பகலில் மொழிபெயர்ப்பாளர்களுடன் கலந்துரையாடல் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் விருது பெற்ற நாங்கள் பத்து பேரும் ஒருவருக்கொருவர் மொழிபெயர்ப்பு தொடர்பாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எஸ்.ராமகிருஷ்ணன் தலைமையில் அவர் அழைக்க அழைக்க ஒவ்வொருவராக ஒலிபெருக்கி முன் சென்று மொழியாக்கம் செய்வது பற்றிய எங்கள் கருத்துக்களைச் சொன்னோம்.

100_2704

முதலில் பேசியவர் ஒரு பேராசிரியராம். பேசுவது அவர் தொழில் என்பதால் குறைந்த நேரம் தன்னால் பேசமுடியாது என்று கிண்டலாகவும் நகைச்சுவையாகவும் சொல்லிவிட்டு உண்மையிலேயே ரொம்ப நேரம் பேசி எல்லாரையும் டென்ஷனாக்கினார். அடுத்து பேசியவரும் பேரசிரியர் என்று சொன்னார். அவர்கள் பேசிய பேச்சில் சில சரியான கருத்துக்கள் இருந்தாலும் அதைச் சொல்ல அவர்கள் எடுத்துக் கொண்ட நேரம் களைப்பூட்டுவதாக இருந்தது. மொழி பெயர்ப்பும் ஒரு மறுபடைப்பே என்ற கருத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

என்னுடைய கருத்துக்கூட கிட்டத்தட்ட அதுதான். கிட்டத்தட்ட என்று ஏன் சொல்கிறேன் என்றால் பத்து பக்க மூலத்தை தமிழ்ப்படுத்தும்போது அந்த பத்து பக்கமும் மறுபடைப்பாக மாறிவிடாது. ஒரு சில இடங்கள் மூலத்தை விட சிறப்பாகவும், ஒரு சில இடங்கள் மூலத்தைவிட சிறப்பு குறைந்ததாகவும் இருக்கும். மொழிகளின் பிரத்தியேக தன்மைகள் காரணமாக இப்படி அமைவதுதான் சாத்தியம். எப்படிப் பார்த்தாலும் மொழிபெயர்ப்பு என்பது ஒரு பயனுள்ள சவால் என்பதில் சந்தேகமில்லை.

நான் ஐந்து நிமிடங்களுக்குள் என் பேச்சை முடித்துக் கொண்டேன். அதற்குக் காரணங்கள் பல. பேச்சை சீரியஸாக கேட்கும் மனநிலையில் உட்கார்ந்திருந்தவர்கள் இல்லை. சிலர் பேசிக்கொண்டிருந்தபோதே பலர் எழுந்து பக்கத்தில் கொடுக்கப்பட்ட காபி பிஸ்கட்டை சுவைக்கச் சென்று விட்டனர். பேச வேண்டும் என்ற எண்ணமோ, முன் தயாரிப்போ என்னிடமில்லை. Impromptu Oratorical Competition — மாதிரி இருந்தது என்று வைத்துக் கொள்ளுங்களேன். என்றாலும் திருமதி மதுமிதாவும், திருமதி ஜெயந்து சங்கரும் ‘நாகூர் ரூமி சொன்னதுபோல’ என்று சொன்னது என்னை நிச்சயமாக சந்தோஷப்படுத்தியது. அடடா, வெற்றி, வெற்றி என்று மனம் குதூகலித்தது…

முத்தாய்ப்பாக எஸ்.ராமகிருஷ்ணன் பேசினார். நான் பாவண்ணன் அருகில் உட்கார்ந்து அதை ரசித்தேன். Nalli Award Booklet Introபயனுள்ள அர்த்தமுள்ள பேச்சு. ரஷ்ய எழுத்து எப்படி அவரை பாதித்தது என்று தொடங்கி பேச ஆரம்பித்தார். தாஸ்தவஸ்கியின் நாவலில் கதாநாயகன் எஸ்.தெருவில் நின்று கொண்டிருந்தான் என்று தொடக்கத்தில் எழுதியிருப்பதை ஒருவர் மட்டுமே சக்கிலியர் தெரு என்றோ, தையல்காரர்கள் தெரு என்றோ சரியாக மொழி பெயர்த்திருந்தார் என்றும், மொழி பெயர்ப்பாளனுக்கு மூல ஆசிரியனின் வரலாறும், கதையின் வரலாறும், அது உருவான சூழலும் தெரிந்திருந்தால்தான் சரியாக மொழி பெயர்க்க முடியும் என்று கூறினார். எபிரேய மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட பைபிள்தான் தன்னை இன்றுவரை கவர்ந்த மிகச்சிறந்த மொழியாக்கம் என்றும் கூறினார்.

மாலை நான்கு மணியளவில் காயத்ரி என்பவரின் கர்நாடக கச்சேரி நடந்தது. ஆறு மணி வாக்கில் புரவலரான நல்லி குப்பு சாமி வருகை தந்தார். அந்த பெரிய ஹாலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேடையில் கொஞ்ச நேரம் நல்லி புகழ் பாடப்பட்டது. தவறென்று சொல்ல முடியாது.

Nalli Award-2இரண்டு பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் பத்து பேருக்கு மொழியாக்க விருதும் தாமதமின்றி வழங்கப்பட்டன. ஒரு பொன்னாடை, பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலை, ஒரு பட்டயம் ஆங்கிலத்திலும் தமிழில் ஒன்றும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டன. நிறைய நிழல்படங்கள் எடுக்கப்பட்டன.(ஒன்றுகூட எனக்கு யாரும் அனுப்பவில்லை) நான் பத்திரிக்கையிலும், இணையத்தளத்திலும், நண்பர் ஷங்கர நாராயணன் மூலமும் ஒரே நிழல் படத்தைப் பெற்றுக் கொண்டேன்.

படைப்பாளிகள் அறிமுகம் என்று ஒரு சின்ன புக்லெட் கொடுத்தார்கள். அது அழகாக இருந்தது.Nalli Award-02

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

8 Responses to நல்லி-திசை எட்டும் விருது — 2009

 1. yazhan aathi says:

  உங்கள் விருது வாங்கும் விழா மிகவும் சிறப்பாக இருந்தது. அதைவிட சிறப்பாக உங்கள் பதிவு அமைந்திருக்கிறது.

 2. nagoorumi says:

  நன்றி நண்பரே, ம்ஹும், தோழரே!

  அன்புடன்
  ரூமி

 3. என். சொக்கன் says:

  வாழ்த்துகள் ரூமி 🙂

  – என். சொக்கன்,
  பெங்களூர்.

 4. nagoorumi says:

  ரொம்ப நன்றி சொக்கன்

  அன்புடன்
  ரூமி

 5. வாழ்த்துக்கள் சார்..

 6. baby says:

  very nice images, articles and ur reality of writings. but this generation should’nt make an full stop should make a commas, one small news ur mamas daughter called baby also a small budding (not a writer but a learner) got a prize in “kumudam snegedthi” of Rs.1000 for two stories. and in “aval vikadan” small thunukku regarding “Kutties kurumbu” and one or two etc in 2004.

 7. nagoorumi says:

  Dear Baby, very nice to hear of your writings also. We all have that potential. Congrats. Keep it up.

  anbudan
  rumi

 8. அன்புள்ள ரூமி,

  மொழிபெயர்ப்பு என்பது “மெய்வருத்தக் கூலி தரும்” ! இரவு பகல் பாராத உழைப்புக்கு உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த விருதுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  தாரா கணேசன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s