ராயல்டி ராயல்டி

பத்ரியின் பதிவில் இன்று ராயல்டி பற்றிப் படித்தேன். ஜெயமோகன், சாரு, ராகவன் ஆகியோர் ராயல்டி பற்றிப் பேசியிருப்பதையும் படித்தேன். அவர்கள் மனம் திறந்து உண்மை சொல்லியிருக்கிறார்கள். அந்த நேர்மையை நினைத்து சந்தோஷமாகவும் அந்த உண்மையை நினைத்து வருத்தமாகவும் உள்ளது.

வெள்ளித்திரை படம் பார்க்கத் தேவைப்பட்ட 200 ரூபாய்கூட இல்லாமல் இருந்த சூழ்நிலையை சாரு அவருக்கே உரிய பாணியில் விவரித்திருக்கிறார். அதோடு அவருடைய நூல்களின் பெயர்களைக் கொடுத்து எத்தனை நூல்கள் எவ்வளவு பிரதிகள் ஒரு ஆண்டில் விற்றுள்ளன என்றும் காட்டியிருக்கிறார். எல்லாமே 500-க்குக் குறைவாகவே உள்ளன. ஒரு ஆண்டுக்கான ராயல்டி தொகையான முப்பதாயிரம் ரூபாய் கிடைத்த மகிழ்ச்சியையும் அது ஒரு ஆண்டைக் கழிக்கப் போதாது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

தனக்கு பதினான்காயிரம் ரூபாயே ராயல்டியாகக் கிடைத்ததாக ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் எனக்கு கிழக்கு வழங்கும் ராயல்டி பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. காரணம், கிழக்கு சரியாக நடக்கவில்லை, அது நஷ்டத்தில் போய்க்கொண்டிருக்கிறது, அதில் இருப்பவர்களெல்லாம் கும்பலாகக் கழன்று வேறு வேறு இடங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று என்னிடம் பலர் அல்லது சிலர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதில் உண்மை விரலில் ஒட்டும் ஊறுகாய் அளவுக்குக்கூட இல்லை என்பது எனக்குத் தெரியும். ஒன்று அவர்கள் விபரம் தெரியாமல் சொல்கிறார்கள். அல்லது தெரிந்தே பொறாமையில் புலம்புகிறார்கள். இந்த ஆண்டு எனக்குக் கிடைத்த ராயல்டி தொகை — வருமான வரி முறையாகக் கழித்துக் கொண்ட பிறகு — ரூபாய் 54841 ரூபாய் 13 பைசாக்கள். இப்படித்தான் நான் கடந்த சில ஆண்டுகளாக வாங்கிக் கொண்டிருக்கிறேன். என் அடுத்த விநாடி நூல் மட்டுமே இதுவரை 25000 பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது. ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்ற எனது நூல்கள் பல உண்டு. மொத்தமான இலியட், சூஃபி வழி, இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் போன்ற நூல்களும் 500-க்கு மேல்தான். இதற்கெல்லாம் காரணம் நான் இல்லவே இல்லை என்று சொல்லிவிட முடியாது (நான் அப்படிச் சொன்னாலும் ராகவனோ பத்ரியோ அதை ஒத்துக் கொள்ளமாட்டார்கள்). ஆனால் நியூ ஹொரைசன் மீடியா (கிழக்கு) வின் மார்க்கட்டிங் உத்திகள்தான் 90 விழுக்காட்டுக்கு மேல் இதற்குக் காரணம் என்று சொல்லலாம். பதிப்புத் துறையில் பழம் தின்று கொட்டை மட்டும் போட்டுக் கொண்டிருக்கிற பல பதிப்பகத்தார் கிழக்கிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளன. பத்ரியின் வலைப்பதிவுக்கு அடிக்கடி சென்று வந்தாலே இது விளங்கும்

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

One Response to ராயல்டி ராயல்டி

  1. pradeep says:

    மிகச் சரியான பதிவு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s