ஆண்-மிகம்?!

ஆண்-மிகம்?!

கடந்த இரண்டு நாட்களாக தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தாலே நித்தியானந்தர்தான் ஹீரோ. ஹீரோயின் ரஞ்சிதா. நித்தியானந்தரின்மீது மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டிருந்த சாருநிவேதிதா அவருடைய பாணியில் நித்தியானந்த நீல லீலைகளைப் பற்றி ஒரு மஞ்சள் கட்டுரை வரந்துள்ளதையும் ரசித்துப் படித்தேன்.

இதோ உங்களுக்கு ஒரு சாரு சாம்பிள்:

நித்யானந்தரோ ஊருக்கெல்லாம் பிரம்மச்சரியத்தை உபதேசம் செய்து விட்டு நடிகையின் குண்டியை நக்கிக் கொண்டிருக்கிறான்.  அப்படிப்பட்ட அயோக்கியனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் கண்டீர்கள்?  அந்தக் கபட சாமியாரின் வார்த்தைகளை நம்பி என் இணைய தளத்தில் அவருடைய புகைப்படத்தைப் போட்டு விட்டதால் நானும் அவரும் ஒன்றா?

எனக்கு ஒரு வருத்தமிருக்கிறது.

அது பரஹமஹம்ச நித்தியானந்தா என்று அவர் தன் பெயரை வைத்துக்கொண்டது பற்றியது. ஒரு உண்மையான மகானின் பெயரை தன் பெயருக்கு முன்னால் சேர்த்துக்கொண்ட நித்தியானந்தா அந்தப் பெயருக்கு அவமரியாதை செய்து விட்டதை நினைத்துத்தான் எனக்கு வருத்தம்.

பல காவிகள் ’காம’கோடிகளாக இருப்பது தெரிந்ததுதான். ஆனால் நித்தியானந்தர் இப்படியானது கொஞ்சம் எனக்கு ஆச்சரியமே. அவருடைய பல உரைகளை நான் குறுந்தகடுகள் மூலமாக பல ஆண்டுகளுக்கு முன்பு கேட்டு ஆச்சரியப்பட்டுள்ளேன். உதாரணமாக சக்கரங்கள் என்று சொல்லப்படும் ஆன்மிக மையங்களை நாம் எப்படி எழுப்புவது என்பது பற்றிய அவரது பேச்சு எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது எனக்குக் கொஞ்சம் புதுமையாக இருந்தது. மனப்பண்புகளை மாற்றிக் கொள்வதன் மூலம் சக்கரங்களை எழுப்ப முடியுமென்று அவர் அதில் சொன்னார். உதாரணமாக கோபம், பொறாமை இவை கொள்ளாதிருந்தால் குறிப்பிட்ட சக்கரம் எழும் என்றார். என்னை விட இருபது வயது இளையவர். அவர் ஒரு child prodigy -யாக இருக்க வேண்டும் என்றே நினைத்தேன். சாரு நிவேதிதா எழுதியிருப்பதுன் என் கருத்துக்கு வலு சேர்ப்பதுபோலவே இருக்கிறது:

இப்போதும் சொல்கிறேன், நித்யானந்தர் எழுதிய புத்தகங்கள் 300 இருக்கும்.  அத்தனையும் நம் இந்திய ஆன்மீகத்தின் சாரம்.  கீதைக்கு அவர் எழுதியிருக்கும் பிரம்மாண்டமான உரை ஒரு அற்புதம்.  நித்யானந்தர் ஒரு முட்டாள் அல்ல; நூறு மேதைகளுக்கு சமமான அறிவுத் திறன் கொண்டவர்.  அந்த அறிவுத் திறனை அவர் சொத்து சேர்க்கவும், நடிகைகளுடன் சல்லாபம் செய்யவும் பயன்படுத்திக் கொண்டு விட்டார்.

நித்யானந்தர் கிடுகிடுவென்று மிகக்குறுகிய காலத்திலேயே புகழடைந்து போனார். 33 நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியான மையங்கள் நிறுவப்பட்டிருப்பதாக விக்கி கூறுகிறது.

ஆனால் நித்தியானந்தா ஓஷோ கம்யூனிலிருந்து உருவானவர் என்று சிலர் என்னிடம் கூறியுள்ளனர். ஆனால் அவர் பரமஹம்சரின் பெயரை ஏன் தன் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டார்? காரணம் ஓஷோவுக்கு செக்ஸ் சாமியார் என்ற ஒரு (தவறான) பெயர் இருந்தது. ஆனால் பரமஹம்சரோ அப்படிப்பட்ட எந்த பிரச்சனைகளுக்கும் உட்படாத தங்கம். எனவே நித்தியானந்தர் பரமஹம்ச நித்தியானந்தரானார். ஆனால் ஓஷோவின் நேர்மையையும், துணிச்சலையும் பாராட்ட வேண்டும். அவர் என்ன சொன்னாலும் நேரடியாக, யாருக்கும் பயப்படாமல் சொன்னார். ஆனால் ஓஷோவிடமிருந்து உருவாகி வந்த யாருமே ஓஷோவை தன் மூலமாகக் காட்டுவதில்லை. (ஓஷோ இறந்ததைக் கொண்டாடும் பக்தர் கூட்டத்தில் ஒரு ஓரமாக ரவிஷங்கர் அமர்ந்திருந்தது நினைவுக்கு வருகிறது).

முற்றும் ’துறந்த’வர் என்ற போர்வையில் சற்றுத்  ’திறந்துவிட்ட’ நித்தியானந்தர் செய்ததைப் பார்க்கும்போது ஓஷோமீது எனக்கிருந்த மதிப்பு இன்னும் கூடுகிறது.

சன் நியூஸ் தொலைக்காட்சியில் காட்டியதைவிட கூடுதலான சில காட்சிகள் நக்கீரனின் வலைத்தளத்தில் உள்ளது. அதில் ‘எடிட்’ செய்யப்பட்ட பல விஷயங்களை நக்கீரனில் வருகிறது. உதாரணமாக, ரொம்ப மகிழ்ச்சியுடன் ரஞ்சிதாவை அணைத்துக் கொள்ளும் நித்தி ஒரு கட்டத்தில் துள்ளிக் குதித்து எழுகிறார். அப்போதுதான் அவர் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி! அவர் ஆன்மிகம் பேசும்போதெல்லாம் வராத மகிழ்ச்சி அது! அப்போது அவர் லங்கோடு அணிந்திருப்பது தெரிகிறது! (உபயம் நக்கீரன் வலைத்தளம்). அது மட்டுமல்ல, ரஞ்சிதா குனிந்து அவர் தொடைகளுக்கு நடுவில் முகத்தை வைத்து கருமம், கருமமே கண்ணாயினிணியாக காரியம் செய்கிறார் (என்ன காரியம் என்று கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்). நக்கீரனில் இன்னொரு காரியம் செய்திருக்கிறார்கள். அது தமிழனுக்கே உள்ள குசும்பு. காட்சிக்கு ஏற்ற பாடல்களையும் சேர்த்திருக்கிறார்கள்! (வீடியோ முடிந்த பிறகு முழு வீடியோவையும் பார்க்க வேண்டுமென்றால் பணம் கட்ட வேண்டும் என்று ஒரு விளம்பரம் வேறு வருகிறது. இப்படிக்கூட பிழைக்க வேண்டுமா ஒரு பத்திரிக்கை?)!

நித்தியும் ரஞ்சியும் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும். அது அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சனை. அவர் ரஞ்சியைத் திருமணம் கூட செய்திருக்கலாம். கல்கியைப் போல. ஆனால் பிரம்மச்சரியம், துறவறம் என்றெல்லாம் பேசிவிட்டு வெப் கேமரா (?) ’ஆனில்’இருப்பது தெரியாமல் மல்லாக்கப் படுத்துவிட்டார் பாவம். சம்பாதித்த கோடிகளெல்லாம் உதவாது. ‘தம்பி’புண்ணியத்தில் கம்பி எண்ணப் போகிறார்!

வீடியோக் காட்சியில் அவர் நடந்து கொண்ட விதத்தைப் பார்க்கும்போது, ஒரு சராசரியான, சாதாரண மனிதனைவிட அநாகரீகமான மனம் கொண்டவராக அவர் இருப்பது புரிந்தது. முட்டாள்தனமாகவும், அப்பாவித் தனமாகவும், நேரத்தையும் பணத்தையும் அவர் காலடியில் வைத்துக் காத்திருந்த மக்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். நமது வாழ்க்கை யார் கையிலும் இல்லை.

உண்மையான ஞானிக்குத் தெளிவான அடையாளங்கள் உண்டு. அவர் மக்கள் மத்தியில் எப்படி நடந்து கொள்வாரோ அப்படியே தனிப்பட்ட வாழ்விலும் நேர்மையாக இருப்பார். அவர் பணத்தை மதிக்கவோ கேட்கவோ மாட்டார். அனுமதிக்கப்பட்ட உணர்ச்சிகளுக்குக்கூட அடிமையாக இருக்க மாட்டார். பிரத்தியேகமாகத் தோன்றக்கூட மாட்டார், உங்களில் ஒருவராக இருப்பார். உண்மையை சுட்டிக் காட்டுவார். உங்களுக்கு அந்த அனுபவம் ஏற்பட நிச்சயம் உதவுவார்.

நித்தி அப்படிப்பட்டவரல்ல. அவரது சக்தி எப்படிப்பட்டதாக இருந்திருந்தாலும். அவர் நித்தியானந்தாவாக இருந்துவிட்டுப் போகட்டும். இனியாவது மக்கள் புத்தியானந்தாவாக மாற வேண்டும்.

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

16 Responses to ஆண்-மிகம்?!

 1. snegithan says:

  nice sir idu patri neram kidaithal vivadippom

 2. வீ.புஷ்பராஜ் says:

  சாருவின் கருத்துக்களை quote செய்திருக்கும் விதம் தனித்து தெரியாமல் இருப்பது, புதிதாக படிப்பவர்களுக்கு அதையும் நீங்கள் எழுதியதாகவே கருதும்படி இருக்கிறது. வேண்டிய மாற்றம் செய்யவும்.

  ஓஷோவின் கருத்துக்களுக்கு வர்ணம் பூசி தமதாக்கிக் கொண்டு பிழைப்பு நடத்துபவர்களே இங்கு அதிகம்.

 3. Pingback: நித்யானந்தாவும் நாகூர்க்காரர்களும் « நாகூர் மண்வாசனை

 4. nagoorumi says:

  நன்றி புஷ்பராஜ். மாற்றிவிட்டேன்.
  அன்புடன்
  ரூமி

 5. nagoreakbar says:

  சாரு தன்னை இஸ்லாமிய கலாச்சார பின்னணி உடையவன் என்று கூறுகிறார் ,அது பற்றி உங்கள் கருத்தை கூற முடியுமா ? இஸ்லாம் எந்த சாமியார் பின்னாலயம் போக சொல்லவில்லை

 6. nagoorumi says:

  எங்களைப் போன்றவர்களோடு பழகியதையும், அசைவ உணவு சாப்பிடுவதையும்தான் அவர் அப்படிக் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன். இஸ்லாம் இல்லறத்தையே பரிசுந்துரைக்கிறது என்பது சாருவுக்கு நன்றாகத் தெரியும்.

 7. Kollu Nadeem says:

  As we noticed for the past 2 weeks this (Nithiya vs. Ranjitha) is the hot topic. In “Pathivikkaga” novel Sujatha narrated similar story in mid 80’s. Some of the top politician caught red handed with one call girl etc, etc. Our society never changed and will not going to be change. Everybody wants to beep on some one’s window and our entire society wants some sensational news. Defiantly this so called our common man will going to forget and they doesn’t have the memory power at all. Superstar said once “Aandavanaliyum Kappatra Mudiyathu”
  From homeland

 8. பெருசு says:

  நல்ல படமாய் தான் போட்டு இருக்கீக! ஒரு கல்லூரி பேராசிரியருக்கே இந்த குறும்பு இருக்கும் போது கல்லூரி மாணவர்கள் எப்படி இருப்பாய்ங்க்களோ?

 9. nagoorumi says:

  அன்புள்ள மாற்றுப் பிரதி, வசிக்கிறேன் / வாசிக்கிறேன் என்பதன் மூலமாக என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை.

 10. Karthikeyan says:

  அன்பு ரூமி சார்,
  கிழக்கு பதிப்பகத்தின் மூலமாகத்தான் உங்கள் எழுத்துக்கள் எனக்கு பரிச்சயம்.குறிப்பாக “அடுத்த வினாடி” புத்தகம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.அதைப் பற்றி கிழக்கு பாட்காஸ்ட்டில் நீங்கள் உரையாடிய ஒலிப்பதிவும் எனக்கு நெருக்கமான் ஒன்று.
  உங்கள் எழுத்துக்கள் என்னிடம் சில நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.அதற்கு மிகவும் நன்றி.

  உங்கள் புத்தகத்தையும்,இந்த ஒலிப்பதிவையும் என்னுடைய நண்பர்களுக்கு பரிந்துரைத்தும்,பரிசளித்தும் மகிழ்ந்திருக்கிறேன்.உங்கள் வலைப்பதிவையும் தொடர்ந்து படித்து வருகிறேன்.

 11. nagoorumi says:

  ரொம்ப நன்றி கார்த்திகேயன் உங்களைப் போன்றவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் என்னைத் தொடர்ந்து எழுத வைத்துக் கொண்டிருக்கிறது

  அன்புடன்
  ரூமி

 12. சுந்தர் says:

  இந்து மதம் யார் ஒருவரையும் நம்பி இருக்கவில்லை. ஒரு நித்தியானாலும் ஒன்பது நித்தியானந்தன் வந்தாலும் இந்து மதம் இகழ்ச்சியடைவதில்லை. கடவுள் (உள்ளத்தை கடந்தவன்) இதனால் காணாய்போய்விடுவதில்லை. இவைபோன்ற நிகழ்ச்சிகள் ஒருவரை பாதிக்கிறதா என்பது அவரவர் மனத்தை பொறுத்தது. நித்தி கேட்டு குட்டிசெவுரானால் அது அவனுடையது. அவன் சொன்ன நன்னெறி (அவனுக்கே உபயோகம் இல்லாமல்) என்னை நல்லவனாக்கினால் அது என்னுடையது. இந்நிகழ்ச்சி என்னை கோபமூட்டினாலோ அதன் பாதிப்பும் என்னுடையதே. ஏன் பிறர் மீது ஏளனமும் இளகாரமும்? நம் செயலால்தான் நம்மை நல்லவனாக எடுத்து காட்ட வேண்டும். அடுத்தவனின் ஏளனத்தினால் அல்ல.

 13. nagoorumi says:

  அன்பு சுந்தர்,

  நான் இங்கே மதம் பற்றியே பேசவில்லை. அது என் நோக்கமும் அல்ல. மக்களை ஏமாற்றும் நித்தியாயனந்தர்களைப் பற்றித்தான் பேசியிருக்கிறேன். யாரையுமே குறை சொல்லக் கூடாது, கிண்டல் செய்யக் கூடாது என்கிறீர்களா? அது சரியல்ல. நம் கருத்தை நம் பாணியில் சொல்வதற்கு நமக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. யார் மனதும் புண்படாமல்.

  அன்புடன்
  ரூமி

 14. Pingback: 2010 in review « பறவையின் தடங்கள்

 15. Kallooran says:

  There are still unholy men in holy order.here are people who speak something and do some other things.Nithiyanantha is one of them.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s