குருட்டுக் கழுதை

போபாலில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் இறந்தும் — 15000 என்று சொல்லப்படுகிறது — போய் 25 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அந்த பாதிப்புக்குக் காரணமாக அல்லது அதைக் கண்டு கொள்ளாமல் இருந்த குற்றவாளிகள் என்று ஏழு பேரை நீதிமன்றம் முடிவு செய்து அவர்களுக்கு இரண்டு வருட சிறைத் தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இன்று வரை விஷ வாயுக் கசிவினால் கற்பனைக்கு எட்டாத அளவிலான பாதிப்புகள் இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கும்கூட ஏற்பட்டுக் கொண்டுதான் உள்ளது. யூனியன் கார்பைட் நிறுவனத்தில் கைவிடப்பட்டுக் கிடக்கும் 390 டன் எடை கொண்ட பல விஷ வாயுக்கள் இன்றளவும்கூட கசிந்து கொண்டு சுற்றுப் புறச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திக்  கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

விஷ வாயு ஏற்படுத்திய பாதிப்பைவிட அதிகமான வலியை இந்த தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தீர்ப்பு குற்றத்திற்குப் போதுமானதாக, அதாவது proportionate-ஆக இல்லை என்று முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்கூட நேற்று ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

அடுத்தது காலதாமதம். (எட்டாவது குற்றவாளி தீர்ப்பு வருமுன் இறந்தே போய்விட்டார்). ஒரு கணத்தில் நிகழ்ந்து விடும் துன்பங்களுக்கும் வன்முறைகளுக்கும் காரணமான குற்றவாளிகளுக்குத் தீர்ப்பு வழங்க பல யுகங்கள் எடுத்துக் கொள்வதன் பின்னணிதான் என்ன? சட்டத்துக்கு கண்தான் இல்லை, ஆனால் மனசாட்சியுமா இல்லை? Justice delayed is justice denied என்பதுதான் எவ்வளவு அழகான உண்மை!

பாபர் மசூதி இடிக்கப்பட்டு ஒரு மாமாங்கத்துக்கும் மேல் போன பிறகு 68 பேரைக் குற்றவாளிகள் என்று லிபர்ஹான் கமிஷன் அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது?

ஒன்றும் நடக்கவில்லை. ஒன்றும் நடக்கவும் போவதில்லை.

மும்பை தாஜ்மஹால் ஓட்டல் வன்முறையில் பிடிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டு அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்ட போது ஒரு தொலைக்காட்சியில் மக்களை அது பற்றி பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு தூக்கு தண்டனை கொடுக்கக் கூடாது, அவன் கை, கால்கள உடைத்து, கண்னை நோண்டி எடுத்துவிட்டு, ரயில்வே ப்ளாட்ஃபார்மில் விட்டுவிட வேண்டும். அதுதான் அவனுக்கு சரியான தண்டனையாக இருக்கும் என்று ஒரு பெண் கூறினார்.

அந்த நீதியுணர்வை, நாட்டுப் பற்றை நான் மதிக்கிறேன். ஒரு சாதாரண இந்தியப் பெண்ணுக்கு இருக்கும் நியாய உணர்வுகள்கூட நீதிபதிகளுக்கும், நீதியரசர்களுக்கும் இருக்காதா? அல்லது இருக்கக் கூடாதா?

சட்டப்படி இவ்வளவுதான் செய்ய முடியுமென்றால் சட்டத்தை முதலில் மாற்ற வேண்டியது அவசியம்.

ஜனநாயகம் என்ற குருட்டுக் கழுதையின் மீது இன்னும் எவ்வளவு காலம்தான் பொறுமையாக சவாரி செய்து கொண்டிருக்க வேண்டும்? கழுதை எப்போது பார்வையுள்ள குதிரையாகும்!

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

3 Responses to குருட்டுக் கழுதை

 1. Karthikeyan says:

  அன்பு ரூமி சார்,

  நான் உங்களின் கருத்தை முற்றிலுமாக ஆதரிக்கிறேன்.நம் நாட்டில் சட்டம் என்பது சாமான்யனுக்கு ஒரு மாதிரியும்,பணம் படைத்தவர்க்ளுக்கு வேறு மாதிரியும் இருக்கிறது.
  இந்த குறிப்பிட்ட வழக்கில் நீதி என்பதே மருந்துக்குக் கூட இல்லை.
  நம் நாட்டில் சராசரி மனிதனின் உயிருக்கு எநத மதிப்பும் இல்லை என்பதே இதிலிருந்து புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது.
  15000 மனிதர்கள் உயிர் இழந்தது,2 தலைமுறையாய் மக்கள் மோசமான பக்கவிளைவுகளுடன் வாழ்வது – இதைப் பற்றி நம் சட்டம் கவனத்தில் கொள்ளாது என்றால்,அந்த சட்டத்தினால் என்னதான் உபயோகம் என்று என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

  அரசியல்வாதிகள்தான் மக்களைப் பற்றி அக்கறை கொள்வதில்லை என்றால்,நீதிமன்றமும் அவ்வாறே இருந்தால் அப்பாவி மனிதர்கள் காரணமே இல்லாமல் உயிரிழப்பது தொடர்கதையாகத்தான் இருக்கும்.

  நம் முன்னோர்களைப் பற்றி நாம் பெருமை கொள்வதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன.ஆனால் எதிர்கால தலைமுறையினர் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.

 2. நீதி என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு, நீதி துறை கேவலப்பட்டு போய்வுள்ளது. இன்றைக்கு நீதி மன்றங்கள் அம்பானி சகோதரர்கள் சண்டையை தீர்த்து வைப்பது எப்படி ,
  என்று கேள்வி கேட்டால் சொல்வார்கள். அப்பாவி மக்கள் எல்லாம் பாவிகளாக தான் அவர்களுக்கு தெரிகின்றது. படைத்தவனிடம் ஒரு நாள் இவர்கள் பதில் கூறியே ஆகா வேண்டும்

 3. abulbazar says:

  தங்களின் இந்த பதிவு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு சாட்டையடியாக இருக்கும்.
  அழுத்தமான,ஆழமான பதிவு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s