பாட் பூரி — 1

கொஞ்ச நாள் எழுதாம இருந்தா நண்பர்கள் திட்டுகிறார்கள். ஆடிக்கொரு தரம் அமாவாசைக் கொருதரம் எழுதினா எப்படீன்னு…

எனவே இனிமே வாரா வாரம் எழுதலாம்னு முடிவு…

இப்ப முதல் பாட்-பூரி

அசத்தும் அல்கா

நான் விரும்பிப் பார்க்கும் டிவி ப்ரோக்ராம்களில் ஒன்று ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியரும் ஒன்று. இந்த ஆண்டு பரிசை வென்றவர் அல்கா அஜித் என்ற 12 அல்லது 13 வயதுச் சிறுமி. கேரளாவைச் சேர்ந்தவர். தமிழில் அழகாகப் பாடுகிறார். பாவம், ஸ்வரம், சுதி சுத்தம் எல்லாமே பிரமாதம். ஆசியா நெட், அம்ருதா போன்ற ச்சானல்களைப் பார்க்கும் என் நண்பர்கள், விஜய் டிவி நிகழ்ச்சியைவிட அற்புதமாகப் பாடும் குழந்தைகளைக் காட்டுகிறார்கள் என்பது வேறு விஷயம். ராகவன் அம்ருதாவில் பாடிய அனாகாவைக் காட்டினார். நான் பார்வதியைப் பார்த்தேன். என்றாலும் அல்கா, நித்யஸ்ரீ போன்ற குழந்தைகள் பாடுவது மிகவும் ரசிக்கத் தக்கதாக இருந்தது.

அதிலும் க்ராண்ட் ஃபினாலேயில் அல்கா பாடிய சிங்கார வேலனே தேவா பாடல் அற்புதம். பாடி முடித்தவுடன், நீதிபதிகளாக இருந்த சித்ரா, மால்குடி ஷுபா, மனோ, மஹதி, சீனிவாஸ், உன்னி மேனன் போன்ற எல்லாப் பாடகர்களும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினார்கள். அல்கா பாடிய விதம் மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது.  http://www.techsatish.net சென்று ஏர் டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் க்ராண்ட் ஃபினாலே என்று அடித்துப் பார்த்துக் கொள்ளவும்.

இந்த நிகழ்ச்சிகளில் சகித்துக் கொள்ள முடியாத ஒன்று தொடர்ந்து இருந்தது என்றால் அதுதான் மனோ.

3 இடியட்ஸ்

சமீபத்தில் நான் பார்த்த அருமையான இரண்டு படங்களில் இதுவும் ஒன்று. (இன்னொன்று அங்காடித் தெரு). கல்வி நிறுவனங்களில், கல்லூரிகளில், பள்ளிக்கூடங்களில், பல்கலைக் கழகங்களில் என்ன நடக்கிறது, எவ்வளவு முட்டாள்தனாமாக கல்வி ஆகிவிட்டது என்பதையெல்லாம் அற்புதமாகச் சொல்லும் படம். எனது வெகு நாளைய வருத்தம் இந்தப் படத்தில் விமர்சனமாக காட்சி ரூபத்தில் வந்ததைப் பார்க்க ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. ஆமிர் கான் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல, சமுதாயத்தை நோக்கிச் சிந்திக்கத் தெரிந்தவராகவும் இருக்கிறார்.

காலத்தால் அழியாத காதல் பாடல்

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறுக்கவில்லை…

நிஜமும் காதல் உணர்வும் மிக அழகாக இணைந்து வரும் நா முத்துக்குமாரின் இந்தப் பாடலைவிட சிறந்த ஒரு காதல் பாடலை இதுவரை யாரும் எழுதவில்லை. என் நண்பர் யுகபாரதிகூட. நா முத்துக்குமாருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

இந்தப் பாடலுக்கான மெட்டும் இசையும் மனதை விட்டு நீங்காதவை. காலத்தால் அழியாத காதல் பாடல்களில் இதுவும் ஒன்று.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

9 Responses to பாட் பூரி — 1

 1. Karthikeyan says:

  அன்பு ரூமி சார்,

  இனி நீங்கள் வாரா வாரம் எழுதுவது குறித்து மகிழ்ச்சி.

  பாட் பூரி என்றால் என்னவென்று எனக்கு விளங்க வில்லை.

  நீங்கள் குறிப்பிட்டவாறு அல்காவின் பாடும் திறன் மெச்சத் தகுந்ததுதான்.அவருடைய வயதுக்கும்,பாடும் திறமைக்கும் சம்பந்தமே இல்லை.

  அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திவ்யாவைத்தான் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.தொகுத்து வழங்கவே தெரியாத ஒரு தொகுப்பாளினி.அவர் பேசும் போதெல்லாம் நான் தொலைக்காட்சியை மியூட் செய்து விடுவேன்.இல்லாவிட்டால் காதில் ஈயத்தை காய்த்து ஊற்றுவதைப் போன்ற ஒரு உணர்வு.

 2. nagoorumi says:

  அன்பு கார்த்திகேயன், பாட்-பூரி என்றால் சாப்பிடும் பொருள் இல்லை! எல்லாமாகச் சேர்ந்த ஒரு கூட்டு என்று பொருள்.. நிற்க, திவ்யா பேசுவதுதானே பிடிக்கவில்லை? அவரது அழகை ரசித்துக் கொண்டு இருந்திருக்கலாமே! (நான் அதைத்தான் செய்தேன்).

  அன்புடன்
  ரூமி

 3. தோமா says:

  இனி வாரவாரம் ஆராவரம் தான்……

  அவரது அழகை ரசித்துக் கொண்டு இருந்திருக்கலாமே!
  (நான் அதைத்தான் செய்தேன்).

  முடியல!@#

 4. Karthikeyan says:

  பாட் பூரி பற்றிய விளக்கத்திற்கு நன்றி ரூமி சார்.

 5. Pushparaj says:

  //இந்த நிகழ்ச்சிகளில் சகித்துக் கொள்ள முடியாத ஒன்று தொடர்ந்து இருந்தது என்றால் அதுதான் மனோ//

  பிடிக்காத திவ்யாவின் அழகை ரசித்ததுபோல், பிடிக்காத மனோவின் பாடலை மட்டும் ரசித்து விட்டிருக்கலாம். அதற்காக இப்படி அது, இது என்று அஃறிணையில் விளித்திருக்க வேண்டாம் 😦

  😉

  • nagoorumi says:

   நீங்கள் மனோ ரசிகரா? நல்லது. என் கருத்தில் மனோ ஒரு நல்ல பாடகரே அல்ல. அவர் பாடுவதும் சகிக்க முடியவில்லை.

   • Pushparaj says:

    நான் ஒரு பகடிக்காகவே அப்படி எழுதியிருந்தேன். இந்த நிகழ்ச்சியை பொருத்த மட்டில் மனோ பற்றிய தங்கள் கருத்து எனக்கு முழு உடன்பாடே. மனோ ஒரு பாடகராக, சில நல்ல பாடல்களும் பல அவர் குரலுக்கு பொருத்தமற்ற பாடல்களும் பாடி படுத்தியிருக்கிறார் என்பதும் உண்மை. ஆனால் ஏனோ இளையராஜா அவரை ஒரு காலத்தில் போஷித்து வந்தார்.

    மனோ ஒரு பக்கம் எரிச்சல் என்றால், இன்னொரு பக்கம் மால்குடி சுபா படு எரிச்சல். இருவரிடமும் எதுவுமே எதார்த்தமாக இல்லை. இந்த ஜட்ஜ் வேலையை தக்க வைத்துக்கொள்ளும் ஒருவித பதட்டமே தென்பட்டது.

    3 idiots படமும், Chetan Bhagat -ன் Five point someone நாவலும் இரண்டும் ஒரே நேரத்தில் என் கைக்கு வந்தன. முதலில் நாவலையே படிக்க தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

 6. ரூமி says:

  நீங்க சொல்வது சரியே. ஆனால் மனோவை விட சுபா பரவாயில்லை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s