திருக்குர்’ஆனை அழிக்க முடியுமா?

திருக்குர்’ஆனை அழிக்க முடியுமா?


சில நாட்களாக இந்த பிரச்சனை பலரின் மனதை ஆக்கிரமித்துள்ளது. இது எப்படி முடியப் போகிறது என்று நமக்கெல்லாம் தெரியும்.

ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கெய்ன்ஸ்வில் என்ற பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தின் பாஸ்டர் டெரி ஜோன்ஸ் என்பவர்மீதுதான் இன்று உலகத்தின் கவனம் பூராவும் இருக்கிறது.

வரும் செப்டம்பர் 11 அன்று, மாலை 6-லிருந்து 9 வரை குரானுடைய பிரதிகளை எரிக்கப் போவதாக அவர் பிரகடனப் படுத்தியிருக்கிறார். உலக வர்த்தக மையக் கட்டிடத்தை அழித்தற்கு எதிரொலியாகவாம். யார் யாரோ எவ்வளவோ சொல்லியும் அவர் இன்னும் பிடிவாதமாகவே இருக்கிறார்.

இதுபற்றி முன்னால் அமெரிக்க அதிபரின் மனைவி ஹிலரி க்ளிண்டன் தன்னுடைய கண்டனத்தை கடுமையான வார்த்தைகளில் கூறியிருக்கிறார். இந்த திட்டம் “அராஜகமானது, கேவலமானது, அவமானப்பட வேண்டியது” என்றும், “உலகத்தின் கவனத்தைக் கவருவதற்காக 50 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஒரு தேவாலயத்தின் பாஸ்டர் இப்படிச் செய்திருக்கிறார். அவர் செய்ய நினைக்கும் காரியம் அமெரிக்காவையோ, அமெரிக்கர்களையோ பிரதிநிதித்துவப் படுத்தும் செயலல்ல” என்று கூறியிருக்கிறார்.

அதிபர் ஒபாமா இது பற்றிய தொலைக்காட்சி நேர்காணலில், இது ஒரு ”ஸ்டண்ட்” (விளம்பரத்துக்காகவும் பகட்டுக்காகவும் செய்யப்படும் வித்தை) என்று வர்ணித்துள்ளார். “அமெரிக்க முப்படைகளின் தளபதி என்ற முறையில் நான் சொல்கிறேன், இச்செயல் நிச்சயமாக ஈராக், ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க வீரர்களின் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்தும்” என்றும், அவர் செய்ய நினைக்கும் காரியம் “அமெரிக்கர்கள் என்ற முறையில் நாம் வைத்திருக்கும் மதிப்பீடுகளுக்கு முற்றிலும் எதிரானது” என்றும், ”மத ரீதியான சுதந்திரம், மத ரீதியான சகிப்புத் தன்மை” ஆகியவற்றின்மீது கட்டப்பட்டது இந்த நாடு என்றும், பாஸ்டர் டெரி ஜோன்ஸின் இந்த ஸ்டண்ட் அல்காயிதாவில் இன்னும் நிறைய பேர் சேருவதற்குத்தான் துணை போகும் (ரெக்ரூட்மெண்ட் பெனான்ஸா) என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை தனக்கு 100-க்கும் மேற்பட்ட மரண மிரட்டல்கள் வந்துள்ளதாகவும், அதனால் பிஸ்டலும் கையுமாகவே தான் இருப்பதாகவும் டெரி ஜோன்ஸ் கூறியுள்ளார்.

தகவல்கள் இருக்கட்டும். இதுபற்றி நாம் வேதனையடையவோ, கொதிப்படையவோ தேவையில்லை. வரலாற்றில் இதுபோன்ற மடத்தனங்களை எவ்வளவோ நாம் பார்க்க முடியும். எனக்குத் தெரிந்த வரையில், திருமறையை அழிக்கவே முடியாது. கோடிக்கணக்கான இதயங்களில் அது குடியிருக்கிறது. முழு குரானையும் மனனம் செய்த ஹாபிஸ்கள் லட்சக் கணக்கில் இருக்கின்றனர். ஒரு ஊரில் பத்து பள்ளிவாசல்கள் இருக்குமானால், அதில் ஐந்திலாவது ஒரு ஐம்பது பேர் குரான் மனனம் செய்யும் படிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒரு வாதத்துக்காகச் சொல்கிறேன், இந்தக் கணத்தில் இந்த உலகில் இருக்கும் குரான் பிரதிகள் அனைத்தும் எரிக்கப்பட்டாலும் — அஸ்த’ஃபிருல்லாஹ் — 24 மணி நேரத்துக்குள் மீண்டும் முழு குரானும் லட்சக்கணக்கான பிரதிகள் உருவாகிவிடும்!

இந்த சிறப்பு வேறெதற்கும் இந்த உலகில் கிடையாது! ஏனெனில் குரானைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொண்டுள்ளான்.

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

3 Responses to திருக்குர்’ஆனை அழிக்க முடியுமா?

 1. வெள்ளிக்கிழமை ஜும்மா, மக்காவில் உள்ள ஹரம் ஷரீஃப், திருமறை குரான் ஷரீஃப் மூன்றையும் ஒழித்தால் தான் இஸ்லாம் அழியும் என்று ஒரு நாட்டில் பாராளுமன்றத்திலேயே காழ்ப்புணர்ச்சியுடன் விவாதிக்கப்பட்டதாமே! இவர்கள் வாயாலேயே அல்லாஹ்வுடைய நூரை ஊதி அணைத்து விட முயற்ச்சிக்கிறார்கள்

 2. Peer says:

  இந்திய உள்துறை அமைச்சகமும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

  இப்போது, போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளாராமே.

 3. seasonsali says:

  http://seasonsalivideo.blogspot.com/2010/09/us-pastor-who-threatened-to-burn-copies.html

  http://seasonsali.blogspot.com/2010/08/this-is-creation-of-allah_28.html

  105:1
  to top
  105:1
  Sahih International
  Have you not considered, [O Muhammad], how your Lord dealt with the companions of the elephant?
  Muhsin Khan
  Have you (O Muhammad (Peace be upon him)) not seen how your Lord dealt with the Owners of the Elephant? [The elephant army which came from Yemen under the command of Abrahah Al-Ashram intending to destroy the Ka’bah at Makkah].
  Tamil NEW
  (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s