பாட்பூரி — 2

பாட்பூரி — 2


முரளி. இளம் கதாநாயகன். உங்களுக்குப் பிடித்த தமிழ் நடிகர்களின் பெயர்களைச் சொல்லுங்கள் என்று என்னிடம் கேட்டால் — யார் கேட்கப் போகிறார்கள்? நானே கேட்டுக் கொள்கிறேன் — அதில் முரளியின் பெயர் நிச்சயம் இருக்காது. ஆனால் அவர் தீடீரென்று மாரடைப்பால் இறந்த செய்தி கொஞ்சம் அவரைப் பற்றி சிந்திக்க வைத்தது. எப்போதுமே இளமையான தோற்றம் கொண்ட ஒரு நடிகர். இவ்வளவு சின்ன வயதில் போனதை நினைத்து வருத்தமாகத்தான் உள்ளது. விஜய் டிவி தவிர வேறு எந்த சானலும் அவர் இறப்பைக் கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை. ஆனால் விஜய் டிவியில் சில நாட்களுக்கு முன் அவரது காஃபி  வித் அனு பேட்டியைப் போட்டு, அவரைப் பற்றி சில சக நடிகர்களின் கருத்துக்களையும் ஒளி பரப்பினார்கள். அனுவுடனான நேர்காணலில் அவரது பேட்டியைப் பார்த்ததும், அவர் மீதான இரக்கம் கூடியது. ரொம்ப எளிமையான மனிதராக, அம்மாமீது மிகவும் பிரியம் கொண்டவராக இருந்தார். அவர் அம்மா திடீரென்று இறந்ததை விலாவாரியாக அவர் சொல்லிக் கொண்டே போனது அவரது மரண துக்கத்தை அதிகப்படுத்தும் அங்கதமாக இருந்தது. கீதாஞ்சலி படத்தில் (இளையராஜா குரலில்) அவர் பாடிய ஒரு ஜீவன் அழைத்தது என்ற பாடலை வேறு அவ்வப்போது காட்டினார்கள்.

இனி எனக்காக அழவேண்டாம்
துளி கண்ணீரும் விட வேண்டாம்

என்ற வரிகளை அவர் பாடுவது கலங்க வைப்பதாகத்தான் இருந்தது.

=====

முரளியை அடுத்து ஸ்வர்ணலதாவின் மரணம். அற்புதமான குரல். சலீம் மாமாவின் மொகலே ஆஸம் படத்தின் தமிழ் டப்பிங் படப் பாடல்களை அவர்தான் பாடியிருந்தார். அதில் காதல் நதிக்கரையில் என்ற பாடலைக்கூட நான் சமீபத்தில் யூட்யூபில் வலையேற்றி என் முகப்புத்தகத்திலும் பகிர்ந்து வைத்திருந்தேன். ஏன் வாழ்க்கை நம்மைப் பார்த்து இப்படிச் சிரிக்கிறது என்று தெரியவில்லை. Irony over irony.

===

நமக்கு பிடிச்ச சானல் வேணும்னா காஸ்ட் அதிகம் கொடுத்துதானே ஆகணும்? என்ற அந்தப் பெண் ஒரு ஆம்பளை சட்டையைப் போட்டுக் கொண்டு, முந்திய சன் டிடிஎச் விளம்பரத்துக்குக் கொடுத்த அதே பாவத்தில் பேசுகிறார். (ஒருவேளை அதே விளம்பரத்துக்கு டப்பிங் மட்டும் வேறு கொடுத்துவிட்டார்களோ?). உடனே அந்த குண்டு மாமா சட்டென எழுந்து, “ஆஹான், இப்ப உங்களுக்குப் பிடிச்ச சானல்களோட ஜீ ஸ்போர்ட்ஸ் மற்றும் டென் ஸ்போர்ட்ஸும் தர்ராங்க. இலவசமா” என்று கூறுகிறார். (இலவசமாக என்று சொல்லும்போது அவர் வாய் போகும் போக்கு பார்க்கச் சகிக்கவில்லை).

சமீபத்தில் நான் பார்த்த மிகமிகக் கேவலமான விளம்பரங்களில் முதல் பரிசு இதற்குத்தான்.

=========

பாஸ்டர் டெரி ஜோன்ஸ் குரான் எரிப்புப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டார். கூடவே ஒரு இமாமை அழைத்துக் கொண்டு வந்து, அவர் பேசியதும், போராட்டத்தைக் கைவிட்டதற்கு அவர் சொன்ன காரணமும் நல்ல நகைச்சுவை. தன் பழுப்பு மீசையில் மண் ஒட்டாமல் பேசினார். ஆனாலும் மீசை பூரா மண். ஏதோ க்ரவுண்ட் ஜீரோ பகுதியில் இருந்த அல்லது கட்ட இருந்த பள்ளிவாசலை கட்ட மாட்டோம் என்றோ, வேறு இடத்துக்கு மாற்றிக் கொள்கிறோம் என்றோ இமாமிடமிருந்து உத்தரவாதம் வந்ததனால் அடுத்து என்ன செய்யலாம் என்று, பிரார்த்தனை செய்து ஜீசஸிடம் கேட்க இருக்கிறாராம். தேவன் காமடியை ரசிப்பாரா? தெரியவில்லை. அமெரிக்கன் செக்ரட்ரி ஆஃப் ஸ்டேட்-இடமிருந்து வந்த தொலைபேசி அழைப்புக்குப் பிறகுதான் இந்த முடிவுக்கு அவர் வந்திருக்கிறார் என்கின்றன அமெரிக்க தொலைக்காட்சிச் சேனல்கள். தொலைபேசி என்ன சொல்லியிருக்கும் என்று யூகிக்கலாம்தானே! டி ராஜேந்தர் இதைப் பற்றி என்ன சொல்லியிருப்பார்.  ஒரு கற்பனை:

ஹேய் பாஸ்டர் டெரி

நீ தேவாலயத்து நரி

டெலிஃபோன்ல ஒனக்கு போட்டாண்டா கொரி!

இப்ப எங்க போச்சு ஒம்மத வெறி?

====

சன் தொலைக்காட்சியில் ஷங்கரின் எந்திரன் படத்தில் ட்ரைலர் விழாவைக் காட்டினார்கள். ட்ரைலரையே நூறு நாள் காட்டலாம் என்று சன் பிக்சர்ஸுக்கு சஜஷன் கொடுத்தார் விவேக்! ரஜினியின் பிரம்மாண்ட போஸ்டர்கள் மீது ரசிகர்கள் அவர் தலைமீது பாலைக் கொட்டி பாலாபிஷேகம் செய்தார்கள். பார்க்க ரொம்ப வேதனையாக இருந்தது. இப்படி ஒரு பைத்தியக்காரத்தனம் வேறு எந்த இனத்திடமாவது, எந்த நாட்டிலாவது உண்டா? தங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய வயதில், ஒரு நடிகனுக்காக இப்படியெல்லாம் இளைஞர்கள் செய்து கொண்டிருந்தால், எதிர்கால இந்தியா என்னாகும்?

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s