ஜமால் — கால் நூற்றாண்டுக்குப் பிறகு

ஜமால் — கால் நூற்றாண்டுக்குப் பிறகு

1975-ல் தொடங்கிய என் பியுசி படிப்பு 1980-ல் எம்.ஏ. ஆங்கில இலக்கியத்தில் முடிந்தது. ஆனால் அந்த ஆறு ஆண்டுகள்தான் என்னை, என் ஆளுமையை உருவாக்கியவை. அதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர்கள் சில மனிதர்கள், சில பேராசிரியர்கள். பேராசிரியர் ஆல்பர்ட், பேராசிரியர் யூசுஃப், பேராசிரியர் மன்சூர், பேராசிரியர் சுஹ்ரவர்தி போன்றோர். சுஹ்ரவர்தி இப்போது என் மனதில் மட்டும் இருக்கிறார்.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு என்னை உருவாக்கிய கல்லூரிக்குச் சென்றேன். அதுவும் அழைப்பின் பேரில். அதில் எனக்கு இரண்டுவிதமான சந்தோஷங்கள் இருந்தன. ஒன்று, இசை மேதையும், ஆங்கிலப் பேராசிரியருமாக இருந்த டாக்டர் ராஜீவ் தாராநாத் எண்டோமெண்ட் லெக்சர் கொடுக்க நான் அழைக்கப்பட்டது. அதுவும் தமிழ்த்துறையும் ஆங்கிலத்துறையும் இணைந்து! அடுத்த நாள் நடந்த வைரவிழாவில் Distinguished Alumni Award பெற்ற 60 முன்னால் மாணவர்களில் நானும் ஒருவனாக இருந்தது! அதற்கு மறுநாள் நடந்த (27.01.2011) Anti-Dowry Association கூட்டத்தில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்ற அழைக்கப்பட்டது.

திருச்சி சென்று லாட்ஜில் தங்குவதுதான் ஏற்பாடாக இருந்தது. நண்பர் பேரா.ரமீஸ் பிலாலி அதற்கான பொறுப்பை எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் என் அடுத்த விநாடி நூலால் ஈர்க்கப்பட்ட 75 வயதான தொழிலதிபர் கேசவன் அவர்கள் என்னை வற்புறுத்தி அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துக் கொண்டது இன்னொரு இன்ப அதிர்ச்சி. அவர் ஒரு கோடீஸ்வரர் என்பதால் எனக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுத்திருப்பார் என்பதை நீங்கள் யூகித்துக் கொள்ளலாம். உள்ளே ஏசி அறை முதல், நான் வெளியே செல்ல விழையும்போதெல்லால் தயாராக ஒரு லான்சர் காரை ஏற்பாடு செய்திருந்தார்! அவரும், அவர் மனைவியும், மகனும், மருமகளும் காட்டிய அன்பு ரொம்ப அரிதானது. என்னை நெகிழ வைத்தது. அவர் வீட்டிலேயே 25 பேருக்கு, அதிலும் நிறைய முஸ்லிம் சகோதரிகளுக்கு ஆல்ஃபா தியானம் சொல்லிக் கொடுக்க முடிந்தது கூடுதல் சந்தோஷம்.

கல்லூரியில் யூசுஃப் சார், மன்சூர் சார், என்னோடு எம்.ஏ. படித்த, தற்போது ஒரு கல்லூரிக்கு தாளாளராக இருக்கும் நண்பன் ஃபாரூக், பேரா. டாக்டர் எம்.எம்.ஷாஹுல் ஹமீது, முன்னால் மாணவர் நமது இணையப் புகழ் முதுவை ஹிதாயத் ஆகியோரையும் சந்தித்தேன். முதுவையின் உழைப்பு அபாரமானது. ஜமால் முஹம்மது கல்லூரியில் புதிதாக ஒரு பூப் பூத்தால்கூட அடுத்த விநாடியே அதை இணையத்தில் முதுவை ஹிதாயா உதவியால் பார்த்துக்கொள்ளலாம் என்று பேரா.ஷாஹுல் ஹமீது சொன்னதில் கொஞ்சமும் மிகையில்லை.

மன்சூர் சாரைச் சந்தித்த தருணம் அழகானது. சிவப்பு மாருதி வேகனாரை அவரே ஓட்டிக்கொண்டு வந்தார். (குள்ளமாக இருக்கும் நானே ஓட்டும்போது உயர்ந்த மனிதரான அவர் ஓட்டுவதில் என்ன அதிசயம்)! சார் என்று கூப்பிட்டேன். உடனே ரஃபி என்று வந்து கட்டியணைத்துக் கொண்டார். அவார்டு வாங்கிக் கொண்டு திரும்பிய போதும் கட்டியணைத்து உச்சி மோந்தார். என் மகன் ரஃபி என்று பேசும்போது குறிப்பிட்டார்.

யூசுஃப் சார் எப்போதும்போலவே சிம்பிளாகவும் அடக்கமாகவும் இருந்தார். அவர் பக்கத்தில்தான் போய் உட்கார்ந்திருந்தேன். என் சூஃபி வழி நூலில் நான் இறைக்காதலோடு அறைக்காதலை ஒப்பிட்டதை நல்ல metaphysical image என்று சொல்லிப் பாராட்டினார்! இன்னும் இலக்கிய உலகத்தினுள்ளேயே இருக்கிறார்! முதல்வர் ஷேக் சார் அவர்கள் ரொம்ப அன்பாகப் பேசினார். மேடையில் ரொம்ப விபரமாகப் பேசினார். மேடையில் என்னை சும்மா புகழ்ந்து தள்ளினார்!

நான் கொஞ்சம் மனமில்லாமல் கலந்து கொண்ட நிகழ்ச்சி கைக்கூலி கைவிட்டோர் கழக நிகழ்ச்சிதான். ’கைவிட்டோர்’ என்ற  பதம் சரியல்ல என்று பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் ஜமால் மாணவருமான அப்துல் ரஹ்மான் சரியாகச் சொன்னார்.  ’கைவிடுதல்’ என்ற சொல் துரோகம் செய்தலைக் குறிக்கும், எனவே அந்தப் பிரயோகத்தை மாற்றலாம் என்றும், வரதட்சணை வேண்டாதோர் வளையம் என்று பெயர் வைக்கலாம் என்றும் நான் கூறினேன்.  கைக்கூலி கைவிட்டோர் கழகம் எனபது அண்ணன் தி மு அப்துல் காதர் வைத்த பெயராம்.

நான் பேசியபோது ஒரு ’கிவிதை’ வாசித்தேன். அதிலிருந்து சில வரிகள்:

ஹிட்லர் கொன்றான்
யூதர்களை
வரதட்சணை கொல்கிறது
மாதர்களை
மேலும், அவர்தம் ’ஃபாதர்’களை.

ஆண்மை என்பது உறுப்பு சம்பந்தப்பட்டதல்ல
அது பொறுப்பு சம்பந்தப்பட்டது.

அவார்டு நிகழ்ச்சி முடிய பகல் இரண்டே முக்கால் ஆகிவிட்டது. எம்.பி. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார், அதோடு நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால் அப்போதுதான் அது தொடங்கியது! அதன் பிறகு பலர் பேசினார்கள். முன்னால் மாணவர் சிற்பி பாலசுப்பிரமணியமும் பேசினார். மன்சூர் சார்தான் கொஞ்ச நேரம் நகைச்சுவையாகப் பேசி கலகலப்பூட்டினார். விருது பெற்றவர்களில் சிலரை மட்டும் இரண்டு நிமிடங்கள் பேசச் சொன்னார்கள். அதில் ஒருவர் மதிப்புக்குரிய தலைவர் அவர்களே என்று ஆரம்பித்து பத்து நிமிடம் பேசினார். இன்னொருவரோ கிபி ஏழாம் நூற்றாண்டில்தான் அரேபியர்கள் வாணிபத்தின் பொருட்டு தமிழ்நாட்டுக் கடற்கரையோரங்களுக்கு வந்திறங்கினர் என்ற வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தார்! என்னையும் இரண்டு நிமிடம் பேச அழைத்தார்கள். நான் ஒரு நிமிடத்தில் முடித்துக் கொண்டு இறங்கி விட்டேன். கடுமையான பசிதான் காரணம்.

ஆனால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதே நிறத்தில், அதே தரத்தில் குஷ்கா இருந்தது. உண்மையிலேயே நான், ஆபிதீன், ஜெக்கரியா போன்ற நண்பர்களெல்லாம் சேர்ந்து சாப்பிட்டதுதான் ஞாபகம் வந்தது. முதல்வர் ஷேக்சார்கூட அது பற்றிக் குறிப்பிடும்போது age-old kushka என்றே குறிப்பிட்டார்!

ஜமாலின் வளர்ச்சி அபாரமாகவும் அசுரத்தனமாகவும் உள்ளது. நான் படித்தபோது அதிகபட்சமாக 2000 மாணவர்கள் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது பெண்கள் மட்டுமே 3000 பேர் உள்ளார்கள். மொத்த மாணவர் எண்ணிக்கை 11000-த்தை நெருங்குகிறது! எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள். திருச்சியிலும் எங்கு நோக்கினும் மேம்பாலங்களாக உள்ளன.

ஜமால் என்றால் அழகு. உடலை அழகு படுத்த உடற்பயிற்சி இருப்பதுபோல, மனதை அழகுபடுத்த இலக்கியம்தான் உள்ளது. அழகான மனம் கொண்ட ஒருவன் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குண்டு வைப்பு, வன்முறை என்று நிச்சயம் இறங்கமாட்டான். எனவே இலக்கியம் படியுங்கள் என்று என் பேச்சின்போது சொல்லி வைத்தேன்.

Advertisements
This entry was posted in Information / தகவல். Bookmark the permalink.

11 Responses to ஜமால் — கால் நூற்றாண்டுக்குப் பிறகு

 1. Siva says:

  Very nice information about Jamal Mohamed college. I can see the growth and lot of new courses in Jamal.
  I did Msc Zoology ( 1986-88). I had a good time and the degree changed my life.

 2. w.mohamed younus says:

  மன்சூர் சாரைச் சந்தித்த தருணம் அழகானது .யூசுஃப் சார் எப்போதும்போலவே சிம்பிளாகவும் அடக்கமாகவும் இருந்தார்.ஆண்மை என்பது உறுப்பு சம்பந்தப்பட்டதல்ல
  அது பொறுப்பு சம்பந்தப்பட்டது. ஜமால் என்றால் அழகு. உடலை அழகு படுத்த உடற்பயிற்சி இருப்பதுபோல, மனதை அழகுபடுத்த இலக்கியம்தான் உள்ளது. அழகான மனம் கொண்ட ஒருவன் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குண்டு வைப்பு, வன்முறை என்று நிச்சயம் இறங்கமாட்டான். எனவே இலக்கியம் படியுங்கள் என்று என் பேச்சின்போது சொல்லி வைத்தேன். மிக அருமை..
  by .Prof.W.Mohamed Younus,Dept. of Tamil, Jamal Mohamed College,Trichy.

 3. நாகூர் ரூமி says:

  Thank you sir.

 4. ஜமாலுக்கு ஜமால் சேர்த்த முனைவர் உங்கள் ஆசிரியர்கள் நடுவே ஒரு நல்ல மாணவராய் வலம் வந்த காட்சியை அப்படியே எங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். உபரியாக அந்த வாழை இலையில் தெரியும் குஸ்கா வேறு நாவில் எச்சில் ஊற வைக்கிறது.

 5. “ஜமால் என்றால் அழகு. உடலை அழகு படுத்த உடற்பயிற்சி இருப்பதுபோல, மனதை அழகுபடுத்த இலக்கியம்தான் உள்ளது. அழகான மனம் கொண்ட ஒருவன் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குண்டு வைப்பு, வன்முறை என்று நிச்சயம் இறங்கமாட்டான். எனவே இலக்கியம் படியுங்கள் என்று என் பேச்சின்போது சொல்லி வைத்தேன்.”

  – ஓ..! அதனால் தான் மிகச் சிறந்த இலக்கியமாக குரான் ஷரீஃபை இறைக்கி இறக்கியருளினானோ?

 6. உங்களின் பதிவு நாங்களும் கலந்து கொண்ட திருப்தியை தந்தது, பேராசிரியர் யூசுப் அவர்கள் எங்கள் உறவினரும் கூட, பள்ளி, கல்லூரி நாட்களில் மன்னார்புரத்தில் உள்ள அவரின் வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம். வளைகுடா வாழ்க்கை நீண்ட நாட்களாக அவரை சந்திக்கும் வாய்ப்பு தரவில்லை, உங்களின் புகைப்படங்கள் அந்த குறையைப் போக்கியது.

  நன்றி!

 7. I am very glad that my Brother Dr Nagore Rumi is honoured with DISTINGUISHED ALUMNUS AWARD from Jamal Mohamed College which is celebrating its Diamond Jubilee (60th year of service in Higher Education). Jamal Mohamed College Alumni Association (Singapore Chapter) is also registered with and approved by Singapore Registry of Societies and published in Singapore Government Gazette. Jamalians in Singapore are planning to organise DIAMOND JUBILEE CELEBRATION IN SINGAPORE on 2 May 2011.

 8. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

  புதிய பதிப்பை தினம் தினம் வந்து பார்த்து ஏமாந்து செல்கின்றோம்.

 9. NAGORE RUMI says:

  ALAIKUM SALAM. I AM IN CHENNAI WITHOUT MY LAPTOP REGARDING A FAMILY FUNCTION TO BE HELD IN MARCH. INSHA ALLAH SOON.

 10. vinoth kumar says:

  I am 10th standard but tested your books in my life.Its realy going to change my life and Aim.Thanks .

  And how to buy your books in online.Because I cant email to your mail ID.

  • நாகூர் ரூமி says:

   Dear Vinoth Kumar, thank u for the comment. My books are available from Kizhakku pathippagam, at their shop at Teynampet Eldams Road or in Landmark or Higginbothams. Or you can visit https://www.nhm.in/ site and try on line.

   anbudan
   rumi

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s