குரலுக்கு வயதில்லை

சில நாட்களுக்கு முன்பு பாடகி சரளா வந்திருக்கிறார் என்று சலீம் மாமா வீட்டுக்கு என்னைக் கூப்பிட்டு அழைப்பு வந்தது. அவ்வளவாக ஆர்வமில்லாமல்தான் சென்றேன். சரளா என்பவர் எல்.ஆர்.ஈஸ்வரி மாதிரி உருப்படாத பாடகி என்றே நினைத்தேன். (எல்.ஆர்.ஈ-யின் சில ஹம்மிங்குகள், சில பாடல்கள் எனக்குப் பிடிக்கும். ஆனால் எல் ஆர் ஈ-யின் பொது மேடை உடல் அசைவுகளும்,  கரகப்பிரியா குரலும், ஒரு பாடகியாக இல்லாமல் வேறு ஏதாவது அவர் ஆகியிருக்கலாம் என்று தோன்ற வைக்கும்). ஆனால் நேரில் என்னுடைய அனுபவம் வேறாக இருந்தது.

74 வயதாகிறது சரளாவுக்கு. சலீம் மாமா எழுதிய சில பக்திப் பாடல்களை அவர் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு பாடினார். ஆஹா, என்ன இனிமையான  குரல் அந்த வயதிலும். பல் கூட விழுந்து விட்டது. ஆனாலும் உச்சரிப்பு சரியாகவே இருந்தது! இளையராஜா, சீர்காழி கோவிந்தராஜன், எஸ்பிபி ஆகியோருடனெல்லாம் சில பாடல்களை அவர் திரைப்படங்களுக்குப் பாடியுள்ளார். வெளியிலிருந்து அவர் பாடுவதை யாராவது கேட்டால் நிச்சயம் ஒரு 18 வயதுக்காரி பாடுவதாகத்தான் நினைப்பார்கள். குரலில் அத்தனை இளமை.

 1. கண்ணன் ஒரு கைக்குழந்தை – என்ற சுசீலா பாடிய பாடலை முதலில் இவரை வைத்துத்தான் இளையராஜா பாடச் சொல்லியுள்ளார். பாடலின் அந்த வரிகளை பாடிக்காட்டினார்.
 2. நூறாண்டு காலம் வாழ்க
 3. என்னடி செல்லக் கண்ணு எண்ணம் எங்கே போகுது – படம்: தேன்மழை
 4. வருவாயா வேல் முருகா – எஸ்பிபியுடன் பாடியது.
 5. உனக்கெனத்தானே இந்நேரமா நானும் காத்திருந்தேன் – இளையராஜாவுடன் பாடியது. படம்: பொண்ணு ஊருக்குப் புதுசு.
 6. சிந்தனையில் மேடை கட்டி கந்தனையே ஆடவைத்து – சீர்காழி கோவிந்தராஜனுடன் பாடியது.

தற்போது இருப்பது கோயமுத்தூரில் உள்ள பேரூர் சாத்தலிங்க ஸ்வாமி ஆசிரமத்தில். திருமணமாகாத இரண்டு முதிர் கன்னி மகள்களுடன். உலகின் பல நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் செய்த காலம் ஒன்று உண்டு. ஆனால் இப்போது நிலமை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஆனால் சரளாவின் குரலில் ஜீவன், பாவம் எல்லாம் இருக்கிறது. ஏனிந்த மௌனம் காஜா என்ற பாடலை அவர் பாடியதை வலையேற்றியுள்ளேன். கேட்டால் உங்களுக்கே புரியும். அவருக்கு உதவ விரும்புபவர்கள் திருமணங்கள் போன்ற விழாக்களுக்கு அவரை பாட அழைக்கலாம். அது நம் செவிக்கு விருந்தாக இருக்கும். சரளா அவர்களுக்கும் உதவியது மாதிரி இருக்கும். அவர் அலைபேசி: 9840235867

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

7 Responses to குரலுக்கு வயதில்லை

 1. வருத்தமாக இருக்கிறது. அவருடைய கணவரான தப்லா மாஸ்டர் அம்பி எங்கே?

  • நாகூர் ரூமி says:

   அதைச் சொல்ல மறந்து போனேன். அம்பி இறந்து விட்டார்.

 2. sharfudeen says:

  அன்புள்ள நாகூர் ரூமி, என்னுடைய இஸ்லாமியம் சார்ந்த இரண்டு இடுக்கைகள் உங்களின் பார்வைக்கு., ஒரு வேலை கருத்து மாறுபாடோ/ இடுகை குறித்து சந்தேகம் ஏதும் இருப்பின் தெரிவிக்கவும்( தனி மடலில்) பதில் தருகிறேன் !

  1) http://rasekan.blogspot.com/2011/06/blog-post.html

  2) http://rasekan.blogspot.com/2011/06/blog-post_04.html

  3) http://rasekan.blogspot.com/2011/06/blog-post_5974.html

 3. JAFAR SADIQ says:

  Dear Nana, Thanks for the post. I wish that some of your readers come forward to help her by arranging any musical function. Anbudan, Jafar Sadiq

 4. நாகூர் ரூமி says:

  Dear Thambi, I have done whatever I could. Let us leave the rest to God. Well, you need not thank me for what I have done of my own accord. I have done this because I wanted to do this. Actually I wanted to upload some other files also. But since the files are very big and took a long time uploading, I cancelled uploading them. Even this mp4 file took a long time to upload. Anyhow, it is sufficient to show that her voice is still fine.

 5. Pingback: 113 Yours Truly | raajasongadaykeepsboredomaway

 6. Pingback: தபேலா அம்பி | நாகூர் மண்வாசனை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s