சின்ன உயிர்களைக் கொல்லும் பெரிய மிருகங்கள்

 சின்ன உயிர்களைக் கொல்லும் பெரிய மிருகங்கள்

சமீபத்தில் இரண்டு வீடியோ பதிவுகளைப் பார்த்து மனம் நெகிழ்ந்தேன். ஒன்று நண்பர் ஆபிதீனின் வலைத்தளத்தில் கண்டது. இன்னொன்று நண்பர் யாசரின் முகப்புத்தகத்தில் உள்ளது. இரண்டுமே மிருகங்களைப் பற்றியது. முன்னதில் நான்கைந்து சிங்கங்கள் பதுங்கி இருந்து எதிரில் வரும் சில காட்டெருமைகளைத் துரத்தி, அதில் ஒரு குட்டியைப் பிடித்துவிடுகின்றன. நான்கைந்து சிங்கங்களும் இப்படியும் அப்படியும் கடித்து இழுக்க, அந்த குட்டி பக்கத்தில் இருக்கும் குளம் அல்லது ஆற்றினுள் விழுந்து விடுகிறது. ஆனால் சிங்கங்கள் விட்டபாடில்லை. தண்ணீருக்குள்ளிருந்து ஒரு முதலை வேறு தன் பங்குக்கு குட்டியைக் கடித்து உள்ளே இழுக்கிறது. முதலைக்கும் சிங்கங்களுக்கும் இடையில் மாட்டிக் கொண்ட எருமைக் குட்டி உயிரோடு இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை.

 

அப்போது அந்த அதிசயம் நடக்கிறது. கூட வந்து ஓடிப்போன பெரிய எருமை மாடுகள் திரும்பி வருகின்றன. ஒன்று இரண்டல்ல. நூற்றுக்கணக்கில்! கண்கொள்ளாக் காட்சி அது. எப்படி அந்த இரண்டு எருமைகளும் குட்டி மாட்டிக் கொண்டதை ’எடுத்துச் சொல்லி’ தன் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வந்தன என்பது புரிந்து கொள்ள முடியாத ஒரு அற்புதம்தான்.

 

கும்பலாக வரும் அவைகள் சிங்கங்களைத் தாக்கிவிரட்டியத்துவிட்டு உயிரோடு இருக்கும் எருமைக் குட்டியை மீட்டுச் செல்கின்றன!

 

படிப்பு வராத குழந்தைகளை எருமை மாடு மேய்க்கத்தான் நீ லாயக்கு, நீ ஒரு சொரணை கெட்ட எருமை — என்றெல்லாம் திட்டும் பழக்கம் நம் தமிழ் நாக்குக்கு உள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு மனிதர்களை எருமை என்று திட்டுவது எருமைகளுக்குத்தான் அவமானம், மனிதர்களுக்கு அது ஒரு கௌரவம் என்பது புரியும்!

 

ஒரு கரடிக்குட்டியைத் துரத்தும்  புலி அல்லது சிங்கம் பற்றியது இன்னொரு வீடியோ . குட்டி தப்பித்து தாயிடம் வந்து சேர்ந்துவிடும். தாயும் குட்டியும் சேர்ந்து கொடுக்கும் சப்தத்தில் பயந்து சிங்கம் ஓடிவிடும்.
பாசம், அன்பு என்பதெல்லாம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. மிருக பாசம் சமயத்தில் மானிட அன்பைவிட அதிமானதாக உள்ளது. அந்த இரண்டு வீடியோக்களிலிருந்தும் நமக்குத் தெரிவது இதுதான்.

 

 

நேற்று நடந்த துயரமான சம்பவம் இதை மறுபடியும் உறுதிப்படுத்தி உள்ளது.
மனிதர்களின் மனசாட்சியை உலுக்கும் சம்பவம் அது. 13 வயது சிறுவன் தில்சன் என்பவன் அநியாயமாக த் தலையில் குறிபார்த்து சுடப்பட்டு கொல்லப் பட்டதைத்தான் சொல்கிறேன். கொன்றவர் ராணுவ வீரர் என்று சொல்லப்படுகிறது. சிறுவனைத் துப்பாக்கியால்  சுடுபவன் எப்படி வீரனாக இருக்க முடியும்? ஒரு ராணுவ மிருகம் என்று வேண்டுமானால் சொல்லலாம். கையில் ஒரு துப்பாக்கி இருந்தால் மனிதனுக்கு இப்படியெல்லாம்கூட செய்யத் தோன்றுமா? மனசாட்சி என்பதே துப்பாக்கி ஏந்தியவர்களுக்கு இருக்காதா? அதையெல்லால் பொரித்துத் தின்றுவிட்டுத்தான் ஆயுதங்களை அவர்கள் ஏந்துவார்களா?

 

சென்னை தீவுத்திடல் அருமே கொடிமரச் சாலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு பகுதிக்குள் இந்திரா காந்தி நகரைச் சேர்ந்த தில்சனும் அவனது கூட்டாளிகள் இரண்டு பேரும் நுழைந்துள்ளனர். ஏன்? சிறுவர்கள் எதற்காகப் போவார்களோ அதற்காகத்தான். பழங்கள், கொட்டைகள் போன்றவற்றை பொறுக்குவதற்காக. விளையாட்டுக்காக. அப்போதுதான் தில்சனை ஒருவன் தன் துப்பாக்கியால் தலையில் சுட்டுள்ளான்.

 

தொலைக்காட்சி செய்திகளின்படி சுடப்பட்டு ரத்தம் கொட்டிக் கொண்டிருந்த சிறுவனை இலையில் சுற்றி வெளியில் வீசியுள்ளனர். அவனது ரத்தக் கறைகள் படிந்த இடங்களைக் கழுவி விட்டுள்ளனர்.
பொதுமக்கள்தான் சிறுவனது உடலை பொதுமருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவன் ஞாயிறு மாலை இறந்துள்ளான்.  சிறுவனைச் சுட்டவனை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சுமார் மூன்று மணி நேரம் சாலை மறியல் செய்துள்ளனர். அவர்கள்மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். தடியெடுத்தவன் போலீஸ்காரன். துப்பாக்கி எடுத்தவன் ராணுவ வீரன்!

 

சுட்டவர் ராணுவக் குடியிருப்புப் பாதுகாவலர் என்றும் சொல்லப்படுகிறது. அவர் யார் என்று இதுவரை கண்டு பிடிக்கப் படவில்லை. கொலைகாரப் பாதுகாவலர் பாதுகாப்பாக எங்கோ இருக்கிறார். தன் துப்பாக்கியோடு. சுவர் ஏறிக்குத்து பழம் பொறுக்கும் சிறுவர்களைத் தலையில் சுட்டுக் கொல்வதுதான் குடியிருப்புச் சுவர்களுக்குப் பாதுகாப்பு. பல்லுக்குப் பல் என்ற தண்டனை முறை சரியோ என்றுகூடத் தோன்றுகிறது. போரில் பிடிபட்ட கைதிகளை என்ன செய்யலாம் என்று நபிகள் நாயகம் கேட்க, கொன்றுவிடலாம் என்று உமர் சொல்வார். அதற்கு அவர் சொல்லும் தர்க்க ரீதியான காரணம், அவர்களிடம் நாம் பிடிபட்டிருந்தால், அவர்கள் நம்மைக் கொன்றிருப்பார்கள் என்பதுதான்.  பாதுகாப்பாகப் பதுங்கி இருக்கும் ராணுவ வீராதி வீரர்களுக்கும் உமரின் ‘ட்ரீட்மெண்ட்’தான் சரியோ என்று தோன்றுகிறது.

 

ஆனால் நமது நாடு ஜனநாயக நாடு. நாம் எது நடந்தாலும், எப்படி நடந்தாலும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும். சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அந்த ‘வீரர்’ முதலில் அகப்பட வேண்டும். ஆனால் ராணுவ அதிகாரி சசிநாயரோ, “ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு வளாகத்துள் நடந்த இந்தச் சம்பவம் துயரம் மிக்கது, துரதிருஷ்ட வசமானது. வருத்தத்தைக் கொடுக்கிறது” என்றெல்லாம் சொல்லிவிட்டு, “எங்கள் வளாகத்தில் காவல்காரர்கள் கையில் துப்பாக்கி  வைத்திருப்பதில்லை. எனவே சுட்டது யார் என்பது பற்றி விசாரித்துதான் முடிவுக்கு வர முடியும்” என்று ஒரு போடு போட்டு விஷயத்தை ஒரு ’முடிவு’க்குக் கொண்டு வந்திருக்கிறார்!

 

சிறுவன்மீது ராணுவத்தினர் யாரும் சுடவில்லை என்று உறுதியாக அவரால் எப்படிச் சொல்ல முடிந்தது?
அப்போது அவர் பார்த்துக் கொண்டிருந்தாரா என்ன?
அப்படியானால் யார் சுட்டது என்று அவருக்குத்  தெரியுமா?
வங்கிகளின் வாசல்களில், ஏடிஎம் மெஷின்கள் உள்ள இடங்களில் உள்ள காவலாளிகள்  கையில்கூட துப்பாக்கியைப் பார்க்க முடியும்.
ராணுவக் குடியிருப்பு வளாகத்தில் பாதுகாவல் அதிகாரிகளிடம் துப்பாக்கி இருக்காதா?
முழு துப்பாக்கியையும் சோற்றில் மறைப்பது என்பது இதுதானோ?
உயிரிழந்த தில்சனின் குடுப்பத்துக்கு முதலமைச்சர் ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.  அந்தப் பணம் நிச்சயம் ஏழை  மக்களுக்கு உதவும்தான்.
ஆனால் போன குழந்தையின் உயிர் போனதுதானே?
சுட்டவரையும் காணோம், தலையைத் துளைத்து உயிரைக் குடித்த குண்டையும் கானோமாம்! பதிவு செய்யப்பட்டுள்ள கொலை வழக்கு எந்த திசையில் போகும் என்பதற்காக குறிப்புகள் இவை.
சிறுவன் தில்சனின் நிழல் படத்தைப் பார்க்கவே எனக்கு மனம் தாங்கவில்லை. பெற்றோருக்கு எப்படி இருக்கும்? மனித உயிரைத் துச்சமாக மதிக்கும் மனப்பான்மையை மனித மனதில் திணிப்பது எது? ஆயுதங்களா?  அதிகாரமா? இத்தகையை மன வக்கிரத்தின் உக்கிரங்கள் எப்போது குறைந்து இல்லாமல் போகும்?  பெண்கள், மனநோயாளிகள், வயதானவர்கள் – இப்படி எந்த வித்தியாயமும் பார்க்காமல் ஒரு கோடிப்பேரின் உயிர் போவதற்குக் காரணமாயிருந்த ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டான். ஆனால் ஹிட்லரின் மனம் ஏன் இன்னும் உயிர் வாந்து கொண்டிருக்கிறது?

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

One Response to சின்ன உயிர்களைக் கொல்லும் பெரிய மிருகங்கள்

  1. T.M.Haja Sahib says:

    Dear Dr.Rumi,
    My heart feels feels heavy for the child Thilagan.I still could not believe a human being could be that cruel:shooting an innocent child on his head.An incident mentioned in the book ‘Emotional Intelligence” by Daniel Coleman comes to my mind.A man and his wife return to their house laie in the night.They were shocked to find the entrance door was unlocked and dark inside.Unknown to him that his 12 year old daughter was inside the house and she decided to play a practical joke on them, the man entered the house with a pistol in his hand expecting some robber inside.All of a sudden,the girl popped up in front of him.He shot her own daughter dead.How could this happen? Coleman explains that he was in the grip of intense emotions,a sort of emotional hijack so that he could not act sensibly.
    According to scientists,Emotions were with us long before we were endowed with Reason and it is very hard to win over this primordial force of emotion with our Reason.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s