பாட்பூரி — 04

டி.என்.டி.ஜே காமெடிகள்

உலகில் தோன்றிய முதல் மனிதன் தமிழன்தான் என்று சொன்னதற்கு,  உலகின் முதலில் தோன்றிய குரங்குகூட தமிழ்க்குரங்குதான் என்று எழுத்தாளர் புதுமைப் பித்தன் சொன்னதாகச் சொல்வார்கள். எப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கும், டென்ஷனையெல்லாம் போக்கும் ஒரு கதை அல்லது வரலாற்று நிகழ்வு அது.

அதே போல சில பல விஷயங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா’அத் என்ற பெயரில் செயல்பட்டுக் கொண்டுவரும் ஒன்று தொடர்ந்து செய்து வருகிறது. (நிற்க, ’தவ்ஹீத் ஜமா’அத்’ என்ற பெயரே நாம்தான் சரி என்ற ஈகோ முற்றிப்போன மனப்பான்மையின் வெளிப்பாடுதான். உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவருமே உருவமற்ற ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அப்போதுதானே ஒருவர் முஸ்லிமாகவே இருக்க முடியும்? அதேபோல, சுன்னத் வல் ஜமா’அத் என்ற பெயரும் இப்படிப்பட்டதுதான். இறுதித் தூதரைப் பின்பற்றும் முஸ்லிம் சமுதாயம் அனைத்துமே சுன்னல்  வல் ஜமா’அத் தானே? எனவே முஸ்லிம் என்ற பெயரைத் தவிர்த்து மற்ற பெயர்கள், பட்டங்கள், குழுக்கள் அனைத்துமே அனாவசியமான கேள்விகளை எழுப்புகின்ற குழு மனப்பான்மையைக் காட்டுபவை. எனவே சரியாகப் பார்த்தால், எல்லா தவ்ஹீத் வாதியும் சுன்னல் வல் ஜமா’அத்தைச் சேர்ந்தவர். அதேபோல, எல்லா சுன்னல் வல் ஜமா’அத் குழுவின் இருப்பவரும் தவ்ஹீத் வாதியே).  

எனினும் நமக்கு அவ்வப்போது சிரிப்பை வரவழைத்து, நம் மன இறுக்கங்களையெல்லாம் போக்கும் சேவையைச் செய்து வரும் டி.என்.டி.ஜே குழுவினரை நான் மனமாரப் பாராட்டுகிறேன். அவர்களுக்காக இறைவனிடம் – வேறு யார், அல்லாஹ்தான் – பிரார்த்திக்கிறேன்.

அப்படி அவர்கள் என்ன செய்துவிட்டார்கள்?

மனித உடலில் ரத் த ஓட்டம் ஓடிக்கொண்டு இருப்பதைக் கண்டு பிடித்தது கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் என்று சமீபத்தில் ஒரு கட்டுரையில்  (இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்? ) எழுதியிருக்கிறார்கள். அதற்கு ’அறிவியல்’ என்ற உப தலைப்பு வேறு! இது பற்றி சகோதரர் ஹமீது ஜாஃபர் சூப்பராகவும் சூடாகவும் ஆபிதீனின்  வலைத்தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதைப் படித்துவிட்டுத்தான் அவர் கொடுத்த இணைப்புகளில் போய்ப்பார்த்தேன். பிறகு இந்த பாட்பூரி உங்களுக்காக.

அந்த கட்டுரையின் கண்டுபிடிப்புக்கு ஆதாரம் ஒரு நபிமொழி. இறுதித்தூதர் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்துவிட்டு பின்பு தன் மனைவி சஃபிய்யாவுடன் வெளியில் வருகிறார்கள். அப்போது அவர்களை உற்றுப் பார்க்கும் இரு அன்சாரித் தோழர்களிடம், “இவர் என் மனைவிதான்” என்று கூறுகிறார்கள். தவறாகப் பார்த்துவிட வேண்டாம், என் மனைவிதான் என்ற அர்த்தத்தில். ஏனெனில் மனித மனம் எப்படிப்பட்டதென்று அவர்களுக்குத் தெரியாதா? அதனால் தொடர்ந்து,  ”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றாரன் உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள். நூல் : புகாரி (2038)

இதுதான்  கூட்டிக் கழித்து அந்த நபிமொழி சொல்வது. மனித உடம்பில் ரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக இந்த நபிமொழியையே அவர்கள் வைக்கிறார்கள். குர்’ஆன் அருளப்பட்டதற்கு 600 ஆண்டுகளுக்குப் பின் வந்த இப்னு நஃபீஸ் என்பவர்தான் முதன் முதலாக இதைக் கண்டுபிடித்தார். ரத்த ஓட்டம் பற்றிக் கண்டறிந்து சொன்னதாகக் கருதப்படும் விஞ்ஞானி வில்லியம் ஹார்வி இப்னு நஃபீஸுக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்புதான் வருகிறார்.  ஆனால் வில்லியம் ஹார்விக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இறைவனின் அருளைக் கொண்டு இறுதித்தூதர் இதைச் சொல்லிவிட்டார்கள் என்பதுதான் அக்கட்டுரையின் வாதம். (வாதம் என்பது ஒரு நோயின் பெயர்தானே?).

இஸ்லாத்தை இவர்கள் எப்படிப் புரிந்து கொள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். மனோவியல் ரீதியிலான ஒன்றை விஞ்ஞான ரீதியில் புரிந்து கொள்கிறார்கள். ஆழமானதை மேலோட்டமாகவும், மேலோட்டமானதை ஆழமாகவும், வெள்ளையை கருப்பாகவும், கருப்பை வெள்ளையாகவும் – இப்படி சொல்லிக்  கொண்டே போகலாம். நபிகள் நாயகத்துக்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த காலன் என்பவரே (http://en.wikipedia.org/wiki/Galen) ரத்த ஓட்டம் பற்றிக் கூறியுள்ளார்.  

சில கேள்விகளை மனசாட்சி உள்ளவர்களிடம் கேட்கிறேன்.

நபிகள் நாயகம் வணங்கிய இறைவன் யார்?

வில்லியம் ஹார்வியைப் படைத்து அவருக்கு ரத்த ஓட்டம் பற்றிய சிந்தனைய வழங்கிய இறைவன் யார்?

இப்னு நஃபீஸின் இறைவன் யார்? காலனின் இறைவன் யார்?

இவர்கள் ஒருவரா அல்லது இரண்டு பேரா அல்லது மூன்று பேரா அல்லது  அதற்கும் மேற்பட்டவர்களா?

எல்லா மனிதர்களையும் படைத்துப் பரிபாலித்துக் காத்து ரட்சிக்கும் பேரருள், பேராற்றால் ஒன்றே என்று நான் மிகவும் திடமாக உணர்கிறேன். (கவனிக்கவும், நம்புகிறேன் என்று சொல்லவில்லை. நம்பிக்கை முதல் படிதான். அடுத்தடுத்த படிநிலைகளைப் பற்றி நான் பேசிக்கொண்டிருக்கிறேன்).

இந்த இடத்தில் ஒரு கேள்விக்கு பரமஹம்சர் சொன்ன பதில் ஞாபகம் வருகிறது. எனக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை என்று ஒரு சீடர் அவரிடம் கூறியபோது, சரி, நீ உருவமற்ற இறையை வணங்கிக்  கொள், ஆனால் உருவங்களை வணங்குபவர்களை தவறு செய்கிறார்கள் என்று சொல்லிவிடாதே என்று கூறுகிறார். ஏனெனில் ஆண்டவன் என்று நினைத்துத்தானே ஒருவர் ஒரு உருவத்தை வணங்குகிறார், அது இறைவனுக்குத் தெரியாதா என்ன என்று ஒரு மிக எளிமையான விளக்கத்தை வைக்கிறார்.

இந்த உலகம் தோன்றிய நாள் முதல் தோன்றிய விஞ்ஞான அறிவு முதல் உலக முடிவு நாள் வரையிலும் வரப்போகும் விஞ்ஞான அறிவுகள் யாவுமே குர்’ஆனிலும் நபிமொழிகளிலும் மறைந்துள்ளன என்று சொல்வதைப் போன்ற அல்லது நினைப்பதைப் போன்ற ஒரு முட்டாள்தனத்தை அறிவுள்ள எந்த முஸ்லிமும் செய்ய மாட்டார்.

அந்தக் கட்டுரையில் உபரியாக சில அ-விஞ்ஞான உளறல்களும் உள்ளன. உதாரணமாக

மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி? மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

என்று ஒரு பாரா பரை சாற்றுகிறது. இது தவறு. எந்த அல்லோபதி மாத்திரையும் உடல் நோயைக் குணப்படுத்துவதில்லை. உடலுக்குள் இருக்கும் நோய் தீர்க்கும் ஹார்மோன்களைத்தான் அவை தூண்டிவிடுகின்றன. உதாரணமாக, வயிற்று வலிக்காக விழுங்கப்படும் ஒரு மாத்திரை வயிற்றில் போய் நின்றுவிடுவதில்லை. வயிற்று வலியைத் தீர்க்கும் ஹார்மோன்களைத் தூண்டிவிட்டு விட்டு, ரத்தத்தோடு சேர்ந்து / கலந்து ரத்தம் ஓடும் மூலை முடுக்குகளுக்கெல்லாம் ஓடுகின்றது. அதாவது, தேவையில்லாத எல்லா இடங்களுக்கும் அது போகிறது. அதனால்தான் side-effects உண்டாகின்றன.

எந்த மாத்திரையும் நோயைக் குணப்படுத்துவதில்லை. நோய்க்காண மூல காரணத்தை எந்த மாத்திரையும் தொடுவதில்லை. அவைகள் தட்டிக் கொடுத்து நோயாளியைத் தூங்க வைக்கலாம். பிரச்சனையைத் தீர்ப்பதில்லை. நோய் வெளிப்படு விதத்தை அவைகள் மாற்றுகின்றன அவ்வளவுதான்.

இதையெல்லாம் நான் சொல்லவில்லை. விஞ்ஞானமும் மருத்துவர்களும்தான் கூறுகின்றார்கள். மாத்திரைகளை medical interventions என்கிறார் மருத்துவர் தீபக் சோப்ரா. மேலும் காஸ்ட்ரிக் பைபாஸ் சர்ஜரி, கான்சர் போன்ற வியாதிகளுக்கான ட்ரீட்மெண்ட்டில் மாத்திரை  சாப்பிடுபவர்கள், அதன் காரணமாகவே இறந்தும் போகிறார்கள். அன்றாடம் மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்துபவர்களால் அவற்றின் தீமைகளில் இருந்து தப்பவே முடியாது என்கிறது ஒரு ஆராய்ச்சி.

அந்தக் கட்டுரை முடிவாக இப்படிக் கூறுகிறது;

அல்லாஹ்வின் தூதர் படைத்த இறைவனிடம் இருந்து பெற்று அறிவித்த அற்புதத் தகவலைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வில்லியம் ஹார்வி என்ற அறிஞர் கண்டறிந்தார். வில்லியம் ஹார்வியின் ஆய்விற்கு துணைபுரிந்தது இப்னு நஃபிஸ் என்ற முஸ்லிம் அறிஞரின் ஆய்வே ஆகும். முஸ்லிம் அறிஞரின் ஆய்விற்கு அடித்தளமாக அமைந்தது அல்லாஹ்வின் தூதரின் இறையறிவிப்பே என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

ஆனால் நபிமொழிகளைப் பொறுத்தவரை தனிப்பட்ட கருத்தும் உண்டு, இறைச்செய்தியும் உண்டு என்று வகைப்படுத்தும் வகையில் நபிமொழிகள் உண்டு. உதாரணமாக, பேரீச்ச மரத்தின் ஆண், பெண் பாகங்களை அரேபியர் இணைத்து வைத்துக் கொண்டிருந்ததை இறுதித்தூதர் ஒருநாள் பார்த்தார்கள். ஏன் அப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நன்றாக விளைச்சல் /  பலன் தரும் என்பதாக அவர்கள் பதில் சொல்கிறார்கள். அது வேண்டாம் என்று பெருமானார் சொல்ல, தோழர்களும் அப்படியே செய்கிறார்கள். ஆனால் விளைச்சல் குறைந்து போகிறது. அது கண்ட  இறுதித்தூதர், நான் என் தனிப்பட்ட கருத்தைச் சொன்னால் அதைப் பின்பற்ற  வேண்டியதில்லை. ஆனால் அல்லாஹ் என் மூலமாக வெளிப்படுத்தும் செய்திகளைச் சொன்னால் நீங்கள் அதைப் பின்பற்றுங்கள் என்று சொன்னதாக முஸ்லிமில் ஒரு நபிமொழி வருகிறது (பாகம் 30, எண் 5830).

ஆனால் நபிமொழிகளும் குர்’ஆனைப் போல இறைவனிடமிருந்து இறுதித் தூதர் பெற்ற செய்திதான் என்பதை ஒத்துக் கொள்ளும் விதமாக தவ்ஹீத் குழுவினர் சொல்லும் அந்த ஹதீஸ் பற்றிய கூற்று அமைந்துள்ளது. இது ஒரு வெளிப்படையான முரண்பாடாகும். ஏனெனில் தவ்ஹீத் ஜமா’அத்தாரின் ’பேரறிவுக்கு’ ஏற்ற  வகையில் இல்லாத நபிமொழிகள் அனைத்தையும் பலவீனமானவை என்று சொல்லும் பழக்கம் அவர்களிடம் உண்டு. அதோடு எல்லா நபிமொழிகளும் இறையறிவிப்பு என்ற அந்தஸ்தில் வர முடியாதவை என்றும் பார்த்தோம்.

பிஜே அவர்களிடமிருந்து பிரிந்த குழுவினர் பிஜேவுக்கு எதிராக யூட்யூபில் இட்டிருக்கும் வீடியோ க்ளிப்பிங்ஸ்களையெல்லாம் பார்க்கும்போதும், டிஎன்டிஜேயின் இப்படிப்பட்ட காமெடி ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிக்கும்போதும் எனக்குத் தோன்றுவது இதுதான்:

இறை நேசர்களை இழிவாகவும் மரியாதைக் குறைவாகவும் பேசுபவர்களுக்குப் பைத்தியம்தான் பிடிக்கும் என்று ஒரு பரவலான கருத்து உள்ளது. டி.என்.டி.ஜே. மற்றும் அதிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஒருவர் மீது ஒருவர் சப்தமாக  காரி உமிந்து  கொண்டிருக்கும் கூத்துக்களைப் பார்க்கும்போது – பிஜே அவருடைய மொழியில், அவருடைய பிரத்தியேக பாணியிலேயே யூட்யூபில் விமர்சிக்கப்படுகிறார் ! — அதற்கு நிகழ்ந்து கொண்டிருப்பது அதுதானோ என்று தோன்றுகிறது. அல்லாஹ்தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

 

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

2 Responses to பாட்பூரி — 04

  1. I agree ur point..now a days, all our jammath playing with people beliefs..Nearly i was in tntj for nearly 6 years…after that i came to know they are playing..they are not encouraging advanced technology, cross questions with quran and hadith, etc…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s