மந்திரச்சாவி — 04

மந்திரச் சாவி -4

ஆர்மியில் இருந்த இரண்டு நண்பர்கள் அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தார்கள். கொஞ்சகாலம் கழித்து ஒருவனை வேறு ஊருக்கு மாற்றிவிட்டார்கள். அதிலிருந்து ஒருவன் மட்டும் இரண்டு க்ளாஸ்களில் மதுவை ஊற்றிக் குடித்துக்கொண்டிருந்தான். என்ன விஷயம் என்று கேட்டதற்கு, எனக்கு ஒரு க்ளாஸ், என் நண்பனுக்காக ஒரு க்ளாஸ் என்று சொல்வானாம். கொஞ்ச நாள் கழித்து ஒரு க்ளாஸில் மட்டும் குடிக்க ஆரம்பித்தானாம். என்னப்பா இது என்று கேட்டதற்கு, “நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன், ஆனால் பாவம், என் நண்பனால்தான் இன்னும் நிறுத்த முடியவில்லை” என்றானாம்!

சரி இந்தக் கதை எதற்கு என்கிறீர்களா? உங்களுக்காகத்தான்.தவறான ஒரு பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால் நாமும் இப்படித்தான் ஏதாவது ஒரு வகையில் நம் தவறுகளை நியாயப்படுத்த முயற்சி செய்வோம். நீங்கள் குடிப்பழக்கம் இல்லாதவராக இருக்கலாம். ஆனால் தவறான முறையில் மூச்சு விடும் பழக்கம் கொண்டவராகவும், அதை மாற்றிக்கொள்ள முடியாததை நியாயப்படுத்திப் பேசுபவராகவும் இருக்கிறீர்கள். பெரும்பலான மக்கள் முறையாக மூச்சு விடுவதில்லை. இதனால் மருத்துவமனைகளும், வியாதிகளும், நோயாளிகளும் பெருகிக்கொண்டே போகின்றனர். மனிதர்கள் மூச்சு முட்ட வரிசையில் நின்று மருந்துகளை வாங்கி, தவறாக மூச்சு விட்டுக்கொண்டே மருந்துகளை விழுங்கி நோய்களை இன்னும் தீவிரப்படுத்திக்கொண்டுள்ளார்கள்!

முறையான மூச்சு ஒரு மனிதனுக்கு பல அருட்கொடைகளைத் தருகிறது. அதில் மிக மட்டமானது ஆரோக்கியம்தான்! இன்று அல்லோபதியோடு போட்டிபோட்டுக்கொண்டு மாற்று மருத்துவ உலகம் வேகமாகப் பரந்து விரிந்து கொண்டுள்ளது. இது நல்லதுதான். என்றாலும் தன் மூச்சை ஒருவர் கவனித்துக் கொண்டால் போதும், வேறு எதையும் தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டியதில்லை.

பால்காரர் பால் கொடுப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? சைக்கிளில் கொண்டு வந்த ’பைப்’ வைத்த ’கேன்’-இல் இருந்து பைப்பைத் திருகித் திறந்து, பாலை ஒரு அளவுப் பாத்திரத்தில் இறக்கி, பின் நமது சொம்பில் அல்லது எவர் சில்வர் பானையில் ஊற்றுவார். அரை லிட்டர் ஒரு லிட்டர் என்ற அளவு முடிந்தவுடன் மறுபடியும் திருகி கொஞ்சம் ‘எக்ஸ்ட்ரா’வாக ஊற்றுவார் அல்லவா? அந்த இலவசமான கொசுறு போன்றதுதான் முறையான மூச்சு தரும் பரிசான ஆரோக்கியம்! அப்படியானால் அது தரும் மற்ற அருட்கொடைகளைப் பற்றிக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

சமஸ்கிருதத்தில் ’வ்யாதி’ என்பது நோயையும், ’ஸமாதி’ என்பது நோயற்ற, நோய்களைத் தாண்டிய, நோய் அண்டமுடியாத ஒரு நிலையையும் குறிக்கிறது என்கிறார் ஓஷோ. பதஞ்சலி அப்படித்தான் சொல்கிறாராம். ஆனால் சமாதி என்று சொன்னால் மூச்சு நின்று உயிர் பிரிந்த நிலை என்று நாம் புரிந்துவைத்திருக்கிறோம். வேடிக்கைதான். சரி போகட்டும். முறையான மூச்சு நமக்குத் தரும் அருட்கொடைகளில் ஓஷோ சொல்லும் ஸமாதியும் ஒன்று. அப்படியானால் நம் ஆரோக்கிய வாழ்வைக் காப்பது எது? நிச்சயமாக ’லைஃப்-பாய்’ அல்ல. நம் மூச்சுதான். அதுவும் ஆழமான மூச்சு.

1. மிதமான மூச்சு, 2. விரைவான மூச்சு, 3. ஆழமான மூச்சு என்று நம் மூச்சு மூன்று வகையான உள்ளது. மிதமான மூச்சானது சாதாரணமக ஒரு காரியத்தைத் தொடர்ந்து செய்வதற்குப் பயன்படுகிறது. விரைவான மூச்சு வேகமாக ஒரு காரியத்தைச் செய்வதற்குப் பயன்படுவது. ஓடும்போது, நீந்தும்போதெல்லாம் இப்படிப்பட்ட மூச்சுதான் வரும். ஆனால் நாம் இங்கே பேசுவது ஆழமான மூச்சைப் பற்றி. அதுதான் நான் சொல்லவரும் முறையான மூச்சு. மற்ற மூச்சுகள் தேவைக்கேற்றபடி தானாக வந்து போகும். கோபமாக, அச்சத்தோடு, பதட்டமாக இருக்கும்போதெல்லாம் அந்தந்த உணர்ச்சிகளுக்கு ஏற்றாற்போல மூச்சின் விகிதாச்சாரம் மாறிக்கொள்ளும்.

ஆனால் ஆழமான மூச்சு விடுவதை ஒரு பழக்கமாக மாற்றி கொண்டால், அதுவே ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தில் நம்மை வியாபித்துக் கொள்ளும். அதற்கேற்றவாறு ஆரோக்கியத்தையும் நன்மைகளையும் கொடுக்கும். மூச்சை மாற்றுவதன் மூலம் ஒரு மனிதனுடைய கேரக்டரையே மாற்ற முடியும். அதனால்தான் கிரண்பேடி போன்றவர்கள் சிறைச்சாலையில் கைதிகளுக்கு தியானப் பயிற்சியும் மூச்சுப் பயிற்சியும் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள்.

எத்தனையோ மூச்சுப் பயிற்சிகள் இருக்கின்றன. முறையான மூச்சுப் பயிற்சி என்பது உலகுக்கு இந்தியா கொடுத்த சொத்து. ஆமாம். நமது இந்திய மரபு அத்தனை பெருமை வாய்ந்தது. ஆனால் நமது பெருமைகள் இப்போது திசை மாறிவிட்டன. சளி பிடித்தால்கூட நான் அப்போலோவுக்கோ, மியாட்டுக்கோதான் போவேன் என்று சொல்லும் ஒரு சீக்குப் பிடித்த பெருமித உணர்வு நம்மில் பெரும்பாலோரை ஆட்கொண்டுள்ளது. இத்தகையை அசட்டுத்தனங்களில் இருந்து நம்மை இறைவனும் இந்திய மரபும்தான் காப்பாற்ற வேண்டும்.

எத்தனையோ வகையான மூச்சுப் பயிற்சிகள் இருந்தாலும், மிக அடிப்படையான பயிற்சியைப் பற்றி மட்டும் நான் இங்கே சொல்லப்போகிறேன். இதை யார் வேண்டுமானாலும், எந்த வயதில் வேண்டுமானாலும், எந்த நிலையிலும் செய்யலாம். இதற்கு ‘சைடு இஃபக்ட்ஸ்’ உண்டு. ஆனால் அவைகள் யாவும் நன்மைகளைத் தவிர வேறொன்றுமில்லை!

பயிற்சி

1. ஒரு தனி இடத்தையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். நேரம் அதிகாலையாக அல்லது அமைதியான இரவு நேரமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்கு வசதியான எந்த நேரமாகவும் இருக்கலாம். ஆனால் அதே நேரத்தில்தான் தினமும் செய்ய வேண்டும். நேரத்தையும் இடத்தையும் மாற்றக்கூடாது. முகம் கை கால்களைக் கழுவி விட்டு நேராக அமர்ந்துகொள்ளவேண்டும். இப்படிச் செய்வதும் நமது உடலின் உள்ளுறுப்புகளான இதயம், நுரையீரம், சிறுநீரகம் போன்றவற்றைச் சுத்தப்படுத்துவதும் ஒன்றுதான்.

2. சம்மணம் (அம்மணம் அல்ல) கொட்டி நேராக அமர்ந்து கொள்ளலாம். அல்லது தலையணை இல்லாத மெத்தையில் மல்லாக்க, கைகால்களை ஒன்றையொன்று தொடாமல் கொஞ்சம் தள்ளி வைத்துப் படுத்துக் கொள்ளலாம். இரண்டு நிலையிலும் கண்களை மூடிக்கொள்ள வேண்டும். உடலை நீங்களாக அசைக்கக் கூடாது. அதுவாக அசைந்தால் அதை உணர்ந்துகொள்ளலாம்.

3. ஆழமாக, நிதானமாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். அது உள்ளே போவதைக் கவனிக்க வேண்டும். அது உள்ளேபோய் கொஞ்ச நேரம் இருக்கும். பின் அதுவாக வெளியில் வரும். இப்படி வெளிவரும் மூச்சையும் நிதானமாக கவனித்து வெளியில் விட வேண்டும்.

4. உள்ளே போன மூச்சையும் வெளியே வந்த மூச்சையும் கவனித்து, இரண்டையும் சேர்த்து ஒன்று என்று மனதுக்குள் எண்ணிக்கொள்ள வேண்டும். இப்படியாக நாற்பது அல்லது ஐம்பது மூச்சுகள் விடவேண்டும்.

இதுதான் பயிற்சி. குறைந்தது கால்மணி நேரம் செய்ய வேண்டும். தினமும். இப்படிச் செய்தால் வாழ்நாள் பூராவும் எந்த பெரிய நோயும் வராமல் வாழலாம். அப்படி ஏதாகிலும் வந்தாலும் அதை மூச்சே குணப்படுத்திவிடும். (தும்மல், விக்கல், சளி, காய்ச்சல் இன்னபிறவெல்லாம் நோய்களல்ல. அவை நம் உடல் பார்க்கும் மருத்துவம். மருத்துவத்துக்கே மருத்துவம் பார்க்கும் வேலையைத்தான் நாம் ரொம்ப காலமாகச் செய்துவருகிறோம். இதுபற்றி விரிவாக வேறு வாய்ப்பின்போது பார்க்கலாம்).

கஷ்டப்பட்டு முடித்த காரியமெல்லாம் லேசில் முடியும். சின்னச் சின்ன ஆசை, சிறகடிக்கும் ஆசையெல்லாம் நிறைவேறுவதற்கான வாசல்கள் திறக்கும். பிரச்சனைகளெல்லாம் ஒன்வொன்றாக தீர ஆரம்பிக்கும்.

மூச்சுப் பயிற்சியை முறையாகச் செய்து நான் சொன்னதும், நான் சொல்லாததும்கூட நடக்கும்வரை இதுபற்றி யாரிடமும் மூச்சுவிடக்கூடாது, சரியா?

====

Advertisements
Gallery | This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

9 Responses to மந்திரச்சாவி — 04

 1. சாவியை எங்களிடம் ஒப்படைத்து விட்டீர்கள். நன்றி ரஃபி! இனி மூச்சே போனாலும் யாரிடமும் மூச்சு விடமாட்டோம்.

 2. அம்மாடி, 3 மணி நேரம் தியேட்டரில் விடும் மூச்சால்
  எவ்வளவு பாதிப்படையும் மக்களின் உடம்பு.

 3. Devi Mahendran says:

  mihavum arumai sir , sariyana nerathil manthirachaaviyai koduththatharku mikka nandri.

  unga aduththavinaadi book padikka romba aasayaha thirunelveli fulla thedinen kidaikkavillai .
  ippa naan Dubai-la iruppathaal eppadi vaanguvathendru theriyavillai????

 4. Gazzali says:

  Dear Sir,
  your adutha vinadi and alpha dhiyanam are masterpieces..in one of your books, you have talked about a mandhirachavi which we have to get from you personally and it involves a secret.(I guess it’s a thareeqath secret). Are you in thareeqath? May I know who your sheikh is?wassalam.

  Gazzali
  Singapore

  • நாகூர் ரூமி says:

   Dear Ghazzali,

   You r right. We have two tariqahs which we follow: Shattariya and Qadiriyya. Our Master is Hazrat S Abdul Wahhab Baqavi who is physically no more.

 5. Gazzali says:

  Dear Rumi sir,
  I am very happy to hear that. May Allah bless you with more and more knowledge on life and spirituality so that more and more people may benefit from your writings. Allah swt has blessed you with a wonderful writing style and I pray that you write many more gd bks for us. I have a lot to share and discuss with you. I hope I will not be taking your time if I email to you with my thoughts and queries…wassalm.

 6. Dear Sir, I did not type the Tamil in Latha font, I typed in Vanavil Avaiyar, Kindly copy and paste that in Ms-word, You can show my words,

  thank you very much

 7. மிதிப்பிற்குரிய திரு. நாகூா் ரூமி ஐயா அவர்களுக்கு வண்க்கம்,

  தங்களின் ”அடுத்த விநாடி” படித்தேன் மிக அருமை. அப்புத்தகத்தில் செல்லப்பட்டது போன்று மூச்சு பயிற்சியை செய்து வருகிறேன்.
  மேலும் தங்களின் ”ஆல்ஃபா தியானம்” என்ற புத்தகத்தையும் படித்து முடித்தேன் இன்று.
  எனக்கு ஒரு சந்தேகம் தங்களிடம் கேட்கலாம் என்று தோன்றுகிறது.

  மூச்சு பயிற்சி செய்து முடித்த பிறகு. ஆல்பா தியான பயிற்சி செய்யலாமா?
  அல்லது தினமும் ஆல்பா தியான பயிற்சியே போதுமா?
  அல்லது இரண்டையும் செய்விதனால் ஏதேனும் இடா்பாடுகள் வருமா என்பதை சொல்வீ்ாகள் என்றால் மிக சிறப்பாக இருக்கும்.

  தங்களின் விரிவான மற்றும் விரைவான பதிலை எதிர்நோக்கி காத்துக்கொண்டுள்ளேன்.

  நன்றி

  ம. கார்த்தி
  Email ID: karthim02@gmail.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s