என் சமீபத்திய நூல்கள்

என் சமீபத்திய நூல்கள்

 

Stephen Hawking Bk Cover Designசென்ற ஆண்டு முடிவில் என் இதயம் மருத்துவர்களுக்கு வேலை கொடுத்தது. அதே சமயம் ஆஞ்சையோப்ளாஸ்டிக்குப் பிறகான ஓய்வு நாட்களில் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் லாப்டாப்-பில் வேலை பார்க்கலாம் என்று டாக்டர் அனுமதி கொடுத்திருந்தார். அதைப் பயன்படுத்தி என் ஆன்மாவுக்குப் பிடித்த வேலையைச் செய்தேன்.  விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றி ஒரு நூல் எழுதித்தர முடியுமா என்று அழகப்பர் பதிப்பக உரிமையாளர் நாராயணன் கேட்டபோது உடனே ஒத்துக்கொண்டேன். காரணம் அவரைப் பற்றிய ஒரு வியப்புணர்வு எனக்கு இருந்துகொண்டே இருந்தது. உடனே அவருடைய A Brief History of Time என்ற பிரபலமான நூலை மறுபடியும் முழுவாசிப்பு செய்தேன். அது என்னைப் போன்ற அ-விஞ்ஞானிகளுக்கான, பாமரர்களுக்கான நூல்தான் என்றாலும், அதை முழுமையாகப் புரிந்துகொள்ளும் அளவுக்கு என் விஞ்ஞான அறிவு இல்லை. அதைப் பற்றிப் பேசினால் யாரும் படிக்கப் போவதில்லை என்பது திண்ணம். எனவே அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படித்தேன். அது என் வியப்பை மேலும் அதிகப்படுத்துவதாக இருந்தது.

 

உடனே எழுத ஆரம்பித்தேன். ஒரு சில நாட்கள் என் மகளும் தமிழில் டைப் அடிக்கக் கற்றுக்கொண்டு முயற்சி செய்தாள். ஆனாலும் என் வேகத்துக்கு அவளால் ஈடு கொடுக்க முடியவில்லை என்பதால் நானே மறுபடியும் அந்த வேலையை எடுத்துக்கொண்டேன். சொன்னபடி டிசம்பர் 15க்குள் நூலை முடித்துக் கொடுத்துவிட்டேன். அதன் இறுதிப்பகுதியிலிருந்து கொஞ்சம்:

 

Vetrikodikattu”தன்னுடைய மிகப்பெரிய சாதனை,  தான் உயிரோடு இருப்பதுதான்” என்று ஹாகிங் கூறினார். இதைவிட சோகமான ஒரு கருத்தை ஒரு விஞ்ஞானி சொல்லியிருக்க முடியாது.  அவருடைய வாழ்க்கை ஒரு பாடம். அதில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதும் உண்டு. எடுத்துக்கொள்ளக் கூடாததும் உண்டு. வாழ்வது வேறு, உயிரோடு இருப்பது வேறு. ஸ்டீஃபன் ஹாகிங் இரண்டையுமே செய்திருக்கிறார். ஆனால் உயிரோடு இருப்பதே பெரிய போராட்டமாக இருக்கும் சூழ்நிலையிலும். அவருடைய சாதனை ஒரு மனிதனால், ஒரு விஞ்ஞானியால் செய்யமுடிந்த உச்ச கட்ட சாதனை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவர் சொன்னது சரியா தவறா என்று சொல்லும் தகுதி நமக்கில்லை. அது இப்போது முக்கியமும் அல்ல. உடல் முழுக்க செத்துப்போன நிலையில், ஒரு சக்கர நாற்காலிப் பிணமாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதன், தன் சிந்தனையால் இந்தப் பிரபஞ்சத்தில் பறந்து சென்று, அதன் ஓட்டைகளுக்குள் பயணித்து, அதில் எவ்வளவு சூடுள்ளது, அது எந்த அளவு எடை கொண்டது, எந்த அளவு வேகம் கொண்டது, இன்னும் எத்தனை மில்லியன் ஆண்டுகள் அது தொடரும், எப்போது முடிவுக்கு வரும் என்பது பற்றியெல்லாம் துல்லியமாகச் சிந்தித்து சில உண்மைகளை இந்த உலகுக்குச் சொல்லியிருக்கிறார். அவரது உடல் இந்த உலகத்தில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவரது மூளை, மனம் எல்லாம் வேறு உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டுள்ளது….இறைநம்பிக்கை இல்லாத மாபெரும் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாகிங் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று சொல்லமுடியாவிட்டாலும், இன்னும் நீண்டகாலம் உயிர்வாழ வேண்டும் என்று கருணை மிக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

நூல் அழகாக வெளிவந்துள்ளது. அட்டை வடிவமைப்பு நண்பரும் கவிஞருமான யாழன் ஆதி.

 ==================

 Mandhirachavi Front Coverகல்கியில் வெளியான ”மந்திரச்சாவி” என்ற நான் எழுதிய தொடர் கல்கி வெளியீடாக இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் வெளியானது. சின்ன  புத்தகம்தான். நன்றாகப் போகிறது என்று ஸ்டாலில் சொன்னார்கள். எனக்கு இன்னும் பிரதிகள் வந்துசேரவில்லை. என் நூலை நானே பணம் கொடுத்து வாங்கிக் கொண்டேன்!

 ==================

 இந்த ஆண்டு சிக்ஸ்த்சென்ஸ் வெளியீடாக சில நூல்கள் வர இருக்கின்றன. அதில் சூஃபி Dhiratchaikalin Idhayemவழி-யும் ஒன்று. இன்னும் கொஞ்ச நாளாகும். ஒரு சில அத்தியாயங்களைச் சேர்த்திருக்கிறேன். ஏற்கனவே கிழக்கு வெளியிட்ட ”திராட்சைகளின் இதயம்” நாவலும் சிக்ஸ்த்சென்ஸ் வெளியீடாக வருகிறது வெகு விரைவில். ”வெற்றிக்கொடி கட்டு”என்ற வாழ்வியல் நூல் வெளிவந்துவிட்டது. நாளைக்கு புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.


இந்த ஆண்டு இதுபோல இன்னும் பல நூல்களை வெளிக்கொண்டுவரும் என்று நம்புகிறேன். எல்லாம் அல்லாஹ்வின் அருள்தான்.

 

அன்புடன்

நாகூர் ரூமி

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

4 Responses to என் சமீபத்திய நூல்கள்

 1. விஜி says:

  இப்போது நான் மீண்டும் பழைய ஆரோக்கிய நிலைக்குத் திரும்பிவிட்டேன். அதற்கு முக்கியமான காரணம் எனக்குக் கொடுக்கப்பட்ட அலோபதி மருந்துகளையெல்லாம் நான் குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு எந்த மருந்து மாத்திரையும் சாப்பிடாமல் இயற்கையாக, இயல்பாக இருப்பதுதான்!// உங்களின் நலம் நலமறிய ஆவல் தொடரில் 1ஆம் பாகத்தில் இவ்வாறு சொல்லியுள்ளீர்கள், ஆனால் jan 21 2013 ல் எழுதிய என் சமீபத்திய நூல்கள் என்ற தலைப்பில் இவ்வாறு சொல்லியுள்ளீர்கள் சற்று விளக்கவும் குழப்பமாக உள்ளது ///சென்ற ஆண்டு முடிவில் என் இதயம் மருத்துவர்களுக்கு வேலை கொடுத்தது. அதே சமயம் ஆஞ்சையோப்ளாஸ்டிக்குப் பிறகான ஓய்வு நாட்களில் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் லாப்டாப்-பில் வேலை பார்க்கலாம் என்று டாக்டர் அனுமதி கொடுத்திருந்தார். //

  • நாகூர் ரூமி says:

   It is self-explanatory. உங்களுக்கு என்ன புரியவில்லை? மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஆஞ்சையோ ப்ளாஸ்டி செய்யப்பட்டது. அப்போதிருந்த சூழ்நிலை அது. டாக்டர் அப்படிச் சொன்னார் என்றுதானே சொல்லியுள்ளேன், நான் அதை ஏற்றுக்கொண்டேன் என்று சொல்லவில்லையே! அவர் ஒரு மணி நேரம் கொடுத்தார்! ஆனால் நான் எனக்கான ஆறு மணி நேரங்களாக அதை மாற்றிக்கொண்டு லாப்டாப்பில் நூல்கள் எழுதினேன். ஒரு ஆண்டு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டேன். பின்பு அவற்றையெல்லாம் நிறுத்திவிட்டேன்.

 2. விஜி says:

  இல்லை ஐயா விதண்டாவாததிற்கு நிச்சயம் கேட்க வில்லை. உங்கள் ஆர்டிகள் கருத்து புரியவேண்டும் என தெரிந்து கொள்ள கேட்டேன். நீங்கள் மருந்துகளை குப்பையில் போட்டு, வெறும் மருத்துவ பரிசோதனை மட்டு நடந்தேறி பின் எந்த மருத்துவமும் மருந்துமில்லா
  உடல் தன்னை தானே சரி செய்து கொள்ளும் பாணியில் குணமாகிவிட்டீர்கள் என்பதாக புரிதல் இருந்தது எனக்கு அந்த கட்டுரையில்.
  இந்த கட்டுரையில் ஆஞ்சையோ ப்ளாஸ்டி செய்யப்பட்டது அதாவது ஆங்கில மருத்துவம் மூலம் ப்ளாக் நீங்கியது என இந்த கட்டுரையில் படித்தும் குழப்பம்.
  உடல் தானே சரி செய்து கொள்ளும் என்பதை நம்புபவள் நான் உங்கள் முன் கட்டிரை படித்தும் மேலும் என் நம்பிக்கை கூடி அப்பாடி என உணர்வு, பின் கட்டுரையில் மருத்துவம் பார்க்கபட்டதை படித்து கலக்கம். கேட்க நினைத்து கேட்டு விட்டேன்.
  ஆங்கில மருத்துவத்தை நாடிதான் ஆக வேண்டுமா?

 3. நாகூர் ரூமி says:

  எந்தக் காரணத்துக்காகவும் ஆங்கில மருத்துவத்தை நாட வேண்டியதே இல்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s