சிங்கை மீடியா கார்ப் வசந்தம் டிவியில் சகோதரர் காதர்

Deen1குழந்தை பிறந்தவுடன் அழுவது இயற்கை. ஆனால் என் குடும்பத்துக் குழந்தைகளெல்லாம் பிறந்தவுடன் பேசியிருக்குமோ என்று தோன்றுகிறது! ஆமாம். பேச்சும், எழுத்தும் எங்கள் ரத்தத்தில்  ஊறியுள்ளது. குடும்ப மற்றும் ஊரின் அருட்கொடைகள் அவை என்று சொல்லலாம். சமீபத்தில் என் இளைய சகோதரர் டாக்டர் காதர் (தம்பி தீன்) சிங்கப்பூரின் பிரபல Media Crop வசந்தம் தொலைக்காட்சியில் கண்ணோட்டம் 360 என்ற நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ராஜன் என்பவரோடு கலந்துகொண்டு வங்கி மற்றும் தனி நபர் நிறுவனங்களிடம் கடன் வாங்குவது தொடர்பாக கலந்துரையாடினார்.

பேசுவது ஒரு கலை என்பது பேசினால்தான் தெரியும். “மனமே பயம் எதற்கு?” (விழியே கதைDeen2 எழுது மெட்டில்) என்று பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு விழாவில் எங்கள் வீட்டுக்கு எதிரில் போடப்பட்ட மேடையில், பயந்துகொண்டே சட்டையின் கீழ்ப்பகுதியை விரல்களால் பற்றிப்பிடித்துக்கொண்டு பாடிய அவரா இவர்! காலம்தான் எவ்வளவு மாற்றங்களைக் கொண்டுவருகிறது!

அவர் இப்போது சிங்கையில் ஒரு பிரபல ஆடிட்டர் (கணக்காய்வாளர் என்று கண்ணோட்டம் டிவி நிகழ்ச்சி  கூறுகிறது). கணக்காய்வு அவருக்கு மிகவும் நெருக்கமான விஷயம்தான். ஆனாலும் செயல்படுவது வேறு, அதை மனதில் பதியுமாறு சொல்லத் தெரிவது வேறு. வீடியோ ரொம்ப நீளமாக இருந்தது. கிட்டத்தட்ட 600 MB இருந்தது. அதில் அவர் வரும் பகுதிகளை மட்டும் ’கட்’ பண்ணி ஒட்டி, இப்போது 52 MB-யாகிவிட்டது! கிட்டத்தட்ட ஒன்பது பகுதிகள் கிடைத்தன. அவற்றை இணைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. (அது என் மடிப்பிரச்சனை, ஐ மீன் மடிக்கணிணியின் பிரச்சனை).

deen3என்ன பேசுகிறார், எப்படிப் பேசுகிறார் என்று நீங்களே பார்த்து ரசியுங்கள். முக்கியாக இரண்டு இடங்கள் ரொம்ப ரசிக்கத்தக்கதாக இருந்தன: 1) ஒரு பெண் கடன் தருவதாக வந்த குறுஞ்செய்தியைப் படித்துவிட்டு, அதை அழித்துவிட்டு உறங்கிவிட்டேன் என்கிறார். அதற்கு காதர் சொல்லும் பதில். 2) நூறிலிருந்து 99-ஐக் கழிப்பது எப்படி என்று அவர் கூறுவது!

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

One Response to சிங்கை மீடியா கார்ப் வசந்தம் டிவியில் சகோதரர் காதர்

  1. Nizam says:

    Excellent Presentation Nana. Your writings add more spice to the delicious speech!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s