பொறுப்பின்மையின் உச்சகட்டம்: திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

thiruvalluvar-university வட ஆற்காடு, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கும் அக்கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கும் சனி பிடித்த ஆண்டு 2002. ஆம். அந்த ஆண்டுதான் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது! மேற்கூறிய மாவட்டங்களில் இருந்த நூற்றுக்கணக்கான கல்லூரிகளும் முன்பு (2002-வரை) சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. அவை இப்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டன. வேலைப்பளுவைக் குறைக்கவும், வேலையை எளிதாக்கவும் இப்படிச் செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

 அது தர்க்கரீதியான காரணம்தான். என்றாலும் புதிய அப்பாவின் பழைய குழந்தைகள் அப்பாவைவிட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவையாக இருந்தன! உதாரணமாக வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியாக் கல்லூரி கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. 1919ல் தொடங்கப்பட்டது அந்தக் கல்லூரி! ஆம்பூரில் உள்ள மஜ்ஹருல் உலூம் கல்லூரி 1949ல் தொடங்கப்பட்டது.

குறைவதற்குப் பதிலாக பளுவும் பிரச்சனைகளும் அதிகரித்துவிட்டன! அதற்குக் காரணம் முழுக்க முழுக்க திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மட்டுமே. ஒரு சில உதாரணங்கள். கீழே உள்ளது சமீபத்திய தேர்வு முடிவுகள் பற்றி தினகரனில் வந்த செய்தி (நிழல்படத்தைப் பார்க்கலாம்).

Dinakaran News about TVU Anomaly1 (1)திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகளில் குளறுபடி

படிப்பை பாதியில் நிறுத்திய மாணவன் தேர்ச்சி!

எதிர்காலம் கேள்விக்குறி மாணவர்கள் பரிதவிப்பு

வேலூர். மார்ச் 12. வேலூர் திருவள்ளுவர் பல்கலையில் தேர்வு முடிவுகளில் ஏக குளறுபடிகளும் குழப்பங்களும் நிறைந்துள்ளதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

வேலூர் திருவள்ளுவர் பல்கலையில் தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் 28 முதல் டிசம்பர் 29வரை நடந்தன. மொத்தம் 1.5 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வுகள் நடந்தபோதே கேள்வித்தாள்கள் ஈமெஇயிலில் அனுப்பப்பட்டது. ஜெராக்ஸ் எடுத்து வினியோகிக்கப்பட்டது என்ரு குளறுபடிகள் நடந்தன.

Dinakaran News about TVU Anomaly1 (2)தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் உள்ள மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்தது. இதிலும் தொடக்கத்திலேயே கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்துக்கும் பல்கலைக்கும் முரண்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு திருவள்ளுவர் பல்கலைத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் காண வந்த மாணவ் மாணவிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

தேர்வு எழுதிய மாணவர்கள் பல தேர்வுகளை எழுதாமல் ஆப்சென்ட் ஆனதாகவும், பல மாணவர்களின் பதிவு எண்கள் வேறுபடிப்பைப் படிக்கும் மாணவர்களது எண்களாகவும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வே எழுதாத மாணவர்கள் தேர்வு எழுதியதாகவும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

பல்கலை தேர்வு முடிவில் ஏற்பட்டுள்ள இந்தக் குளறுபடி வேலூர், திருவண்ணாமல, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் உள்ள கல்லூரி மாணவர் மாணவிகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது. இதனால், தேர்வு நடத்தும் அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேலூர் ஊரிசு கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு கல்லூரி வாசலில் நின்று திருவள்ளுவர் பல்கலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக அந்த மாணவர்களிடம் கேட்டபோது, ‘பல மாணவர்கள் அனைத்து தேர்வுகளை எழுதியும் சில தேர்வுகளில் ஆப்சண்ட் ஆனதாக உள்ளது. எம்.ஏ. வரலாறு எழுதிய மாணவனுக்கு எம்.காம். கோட் எண்ணுடன் கூடிய ரிசல்ட் வந்துள்ளது. படிப்பை நிறுத்திவிட்ட 2ம் ஆண்டு எம்.காம். மாணவன் ராமன் தேர்வு எழுதி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்ததாக தேர்வு முடிவு வந்துள்ளது.

எங்களது கல்லூரியில் மட்டும் 25 பேர் ஆப்செண்ட் ஆனதாக காட்டப்பட்டுள்ளது. எம்.எஸ்.ஸியில் குறிப்பிட்ட பாடத்தேர்வில் 15 பேர் ஆப்செண்ட் ஆனதாகவும் காட்டப்பட்டுள்ளது. இந்த குளறுபடிகளால் எங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது’ என்றனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (கண்ட்ரோலர்) அசோகனிடம் கேட்டபோது, ‘எங்களிடம் தவறு இல்லை. ஊரிசு கல்லூரியில் எங்களுக்கு ஆப்சென்ட் லிஸ்டே அனுப்பவில்லை. இண்டர்னல் மார்க் சிடியின் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகள் வழங்கப்பட்டது’ என்றார். இதை ஊரிசு கல்லூரி நிர்வாகத்தரப்பில் கேட்டபோது மறுத்தனர்.

ஆனால், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பல கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் தேர்வு முடிவுகளும் குளறுபடியாகவே வெளியாகி உள்ளது. நேற்று மாலை மேல்விஷாரம் கல்லூரியிலும் இந்த பிரச்சனை  வெடித்தது.

என்று கூறுகிறது தினகரன்.

ஊரிசு கல்லூரி பற்றி எனக்குத் தெரியாது. என்றாலும் அவ்விஷயத்தில் பல்கலைச் சொல்வதுதான் தவறாக இருக்கும். ஏனெனில் ஒன்றிரண்டு பேருக்கு தவறான ரிசல்ட் வந்திருந்தால் அது புரிந்துகொள்ளக்கூடியது, மன்னிக்கப்பட வேண்டியது. அதைக் கல்லூரி செய்திருந்தாலும் சரி, பல்கலை செய்திருந்தாலும் சரி. ஆனால் ஒட்டுமொத்தமாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு அப்படி நடக்குமா?

சாத்தியமே இல்லை. உதாரணமாக ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் படிக்கும் ஒரு ஐம்பது ஆங்கில இலக்கிய இளங்கலை மாணவர்கள் அனைவருக்கும் இண்டர்னல் மார்க் போட்டு அனுப்பப்பட்டது. ஆனால் பல்கலை தன் இணைய தளத்தில் வெளியிட்ட அவர்கள் அனைவரின் மார்க் லிஸ்ட்டிலும் அனைவருக்கும் ஆப்சன்ட் என்று குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக இப்பிரச்சனையை மக்கள் மத்தியிலும் மீடியா மத்தியிலும் கவனத்தில் கொண்டுவர மாணவர்கள் சாலையில் போராட்டம் நடத்தினார்கள் என்றும் தகவல் வந்தது.

Aravindhan III BA Eng  -- TVU anamolyAnanthn III BA Eng --TVU Anamolyஇண்டர்னல் மார்க் எல்லாம் ஆப்சன்ட் என்று போடப்பட்ட, பல்கலை இணையதளம் வெளியிட்ட இரண்டு மார்க் ஸ்டேட்மண்ட்டுகள்

இப்போது அவசர கதியில் சரி செய்ய முயன்றிருக்கிறார்கள். ஒரு மாணவருக்கு ஏற்கனவே UN30A என்ற கோட் எண் உள்ள பேப்பரில் AAA என்று போட்டுவிட்டு இப்போது மீண்டும் P என்று போட்டிருக்கிறார்கள். பார்க்கவும்Farhan1263888 -- Farhan II BA Eng

Burnt Files TVUஏற்கனவே வி.சி.யின் கட்டுப்பாட்டில் இருந்த அறை திறக்கைப்பட்டு முக்கியமான கோப்புகளெல்லாம் எரிக்கப்பட்டதாக பத்திரிக்கை தகவல் வெளிவந்தது(நிழல்படம்). இதற்கெல்லாம் பல்கலை என்ன சொல்லப்போகிறது? அனுப்பிய சிடி சரியில்லை என்றா? குறுந்தகடுகளுக்கு வாயிருந்தால் அவை காறித்துப்பியிருக்கும்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

One Response to பொறுப்பின்மையின் உச்சகட்டம்: திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s