காரைக்குடி அரண்மனைகள்

Me in Athangudi Aranmanaiசென்ற 29, 30 தேதிகளில் காரைக்குடி சென்றேன். இம்முறை இரண்டுKanadu Kathan Aranmanai
காரணங்களுக்காக. முதல் காரணம் ஆல்ஃபா தியான வகுப்பு நடத்த. இரண்டாம் காரணம் என் குழந்தைகளுக்கு காரைக்குடியில் இருக்கும் அரண்மனையை ஒத்த வீடுகளில் சிலவற்றைக் காண்பிக்க. இரண்டாம் காரணத்துக்காகத்தான் முதல் காரணத்தை ஒத்துக்கொண்டேன். முதல் காரணத்தை ஒத்துக்கொண்டதால் இரண்டாம் காரணம் சாத்தியமானது!

ஏற்கனவே இரண்டு முறை காரைக்குடி போயுள்ளேன். ஒரு முறை லயன்ஸ் கிளப் அழைப்பில் பேச. அதோடு அழகப்பா பல்கலைக் கழகத்தின் கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு ஆல்ஃபா வகுப்பு எடுக்கவும். இன்னொரு முறை கவிஞர் ஜான் பாரதியின் கவிதை நூல் பற்றிப் பேச லேனாவும் நானும் அழைக்கப்பட்டிருந்தோம். இந்த முறை என்ன சந்தித்த ஞான் பாரதி தான் ஒரு நாவல் எழுதிக்கொண்டிருப்பதாகச் சொல்லி என்னை பயமுறுத்தினார்!

Athangudi Aranmanai from the streetலயன்ஸ் கிளப் சந்திப்பில் என்னை 15 நிமிடங்களுக்கு மேல் பேச Athangudi Aranmanai Almirahவிடவில்லை. அதுவும் கடைசியில்தான் பேச விட்டார்கள்.  ரொம்ப சந்தோஷமாகிவிட்டது. காரணம் பேசிய பணத்தைக்கொடுத்ததுதான்! இரண்டு மணி நேரம் பேசினால் எவ்வளவு பணம் வாங்குவேனோ அதை அந்த கால்மணிக்கே கொடுத்துவிட்டார்கள்! வாழ்க லயன்ஸ் கிளப்!

இப்போது அந்த கிளப்பைச் சேர்ந்த லட்சுமணன்தான் Academy of Excellence என்று ஒன்று தொடங்கி இருக்கிறார். அதன் சார்பாகத்தான் ஆல்ஃபா வகுப்பு. மறுநாள் ஞாயிறு அரண்மனைகளுக்கு விஜயம்.

முதலில் அவ்வளவாக விருப்பமில்லாமல்தான் என் மகள்கள் வந்தார்கள். என் வற்புறுத்தலுக்காக. ஆனால் வந்து பார்த்த பிறகு அவர்களுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது. இது நான் எதிர்பார்த்ததுதான்.

Athangudi Aranmanai inside-1அவர்கள் சந்தோஷத்துக்குக் காரணம் இரண்டு. ஒன்று Athangudi Aranmanai Thinnai Inside the Houseகாரைக்குடியில் காணப்பட்ட மனித நேயமும் அன்பும். ஆமாம். அந்த ஊர் பாஷையில் சொல்வதென்றால், ”அடி, ஆத்தீ, இவ்வளவு பிரியமாகூட இருப்பாகளா?” என்று சொல்லவேண்டும்.

என் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட ஒரு கும்பல் விடாமல் எங்களை உபசரித்துக்கொண்டே இருந்தது. குறிப்பாக நண்பர்கள் தேவராஜன், இரட்டையர்களான ராம், லட்சுமணன், சையத், Athangudi Aranmanai inside-2Periya Veedu1இவர்களோடு என் பதிப்பாளர் நாராயணன். எங்கு செல்வதானாலும் தேவராஜன் காரைக் கொண்டு வந்தார். மாற்றி மாற்றி தேவராஜன், நாராயணன், ராமன் ஆகியோர் வீடுகளில் படு அமரிக்கையான கவனிப்பில் சாப்பாடு. காரைக்குடியின் இரண்டு மகத்துவங்களில் ஒன்று அதன் சாப்பாடு. வெறும் இட்லி தோசை என்றால்கூட அது ரொம்ப ஸ்பெஷலாக இருந்தது. அதிலும் தக்காளி தோசை என்று ஒன்று வைத்தார்கள். ஆஹா, அதன் ருசியை என்னவென்று சொல்வது! (எனக்கு என் தம்பி நிஜாமின் ஞாபகம் வந்தது. அவர்தான் என் குடும்பத்திலேயே அல்லாஹ் நாக்கைப் படைத்த நோக்கத்தை மிகச்சரியாக நிறைவேற்றிக்கொண்டிருப்பவர். நாக்கு என்பது பேச்சையும் ருசியையும் குறிக்கும்தான். இந்த இரண்டையும் பராமரிப்பதில் எங்கள் குடும்பம் மிகுந்த கவனம் செலுத்தும். என்றாலும் தம்பி நிஜாமுக்கு இதில் சிறப்பு உழைப்பு உண்டு. அவரது முகநூல் நிழல்படங்களைப் பார்த்தாலே இது தெரிந்துவிடும்).

Athangudi Aranmanai roof decoration1வீடுகள் என்று சொல்லப்படும் அரண்மனைகளுக்கு வருவோம். Periya Veedu Roofவீட்டைக் கட்டிப்பார் என்று சொல்வதன் பொருள் காரைக்குடிக்குப் போய் இந்த மெகா வீடுகளைப் பார்த்தால்தான் புரியும். கிட்டத்தட்ட எல்லா வீடுகளுமே ஒரே பாட்டர்னில் கட்டப்பட்டுள்ளது. நான்கு கட்டு, ஐந்து கட்டு என்று. தூண்கள், தாவாரங்கள், முற்றங்கள், ஜன்னல்கள் என. ஒரு சாதாரண வீடே இரண்டு தெருக்களின் நீள வாக்கு தூரத்தை அடைப்பதாக உள்ளது.

நாங்கள் குறிப்பாக ஆத்தங்குடி பங்களா, கானாடு காத்தான் அரண்மனை, கொத்தமங்களம் பெரிய வீடு, ஆயிரம் ஜன்னல் வீடு ஆகியவற்றைப் பார்த்தோம். நான் ஏற்கனவே முதல் இரண்டையும் பார்த்துள்ளேன். அவற்றால் உந்தப்பட்டுத்தான் அவற்றை என் குடும்பத்தாருக்குக் காட்டவேண்டும் என்ற அவாவில் இந்த முறை அழைத்துச் சென்றேன்.

Athangudi Aranmanai Owner Chettiyarஆத்தங்குடி பங்களா அல்லது அரண்மனை ஒரு அற்புதம் என்று Lakshman, Me, Narayananசொல்லவேண்டும். அந்த ’வீடு’களையெல்லாம் பார்த்த பிறகு நமது பங்களாக்கள் எல்லாம் கழிவறை என்று சொல்வதுகூட அதிகமாக இருக்கும். நான் மிகையாகச் சொல்லவில்லை. நீங்கள் ஒருமுறை நேரில் போய்ப்பாருங்கள். புரிந்துகொள்வீர்கள். தூண்கள், படிகள், அலமாரிகள், ஜன்னல்கள் எல்லாமே தேக்குதான். அவற்றைக் கொண்டு வந்து சேர்த்த கதை நம்பமுடியாததாக உள்ளது. எல்லாம் பர்மா தேக்காம். அதை பர்மாவிலிருந்து இந்தியாவை நோக்கி காற்று வீசும் பருவத்தில் பெயரெழுதி கடலில் போட்டுவிடுவார்களாம். பின்னர் அவை இந்தியக் கரைகளில் ஒதுங்கிய பிறகு யானைகளை வைத்து காரைக்குடிக்கு எடுத்து வருவார்களாம். இதைப்பற்றியே ஒரு காவியம் அல்லது காவிய நாவல் எழுதலாம்.

Athangudi Aranmanai Jannalஆத்தங்குடி வீட்டைப் பார்க்கும் யாருக்கும் படும் முதல் இரண்டு விஷயங்கள்: 1000 Jannal Veeduஅதன் பிரம்மாண்டம், அதன் அழகு. வார்த்தைகளில் விவரிக்க முடியாதபடி உள்ளது. ஐந்து ஆண்டுகளில் கட்டியதாக தேவராஜன் கூறினார். ஆனால் இப்போது ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் கூட அப்படி ஒரு வீட்டைக் கட்ட முடியாது. இதுமட்டுமல்ல. அந்த வீட்டுக்கெல்லாம் மதிப்பே போட முடியாது. எத்தனை கோடி டாலர்கள் கொடுத்தாலும் இப்படி இந்தக் காலத்தில் கட்ட முடியாது. அவ்வளவு கடுமையான, அற்புதமான, ஆக்கப்பூர்வமான உழைப்பும் இழைப்பும். கண்டு, தொட்டுத் தடவி அசந்து போவதற்கான ஒரு வாய்ப்பு ஆத்தங்குடி அரண்மனை.

ஒவ்வொரு ஜன்னலின் மேலும் ஒரு ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. அது கிருஷ்ண லீலா. ஒரு ஓவியத்தில் ஏதோ பூஜை நடப்பது போல இருந்தது. கீழே ஒரு தட்டில் தேங்காய்கள் வைக்கபட்டிருந்தன (ஓவியத்தில்தான்). அதைத் தடவிப்பார்த்த நாராயணன் சொன்னார், “சார் இங்க பாருங்க, ஓவியம் பூரா வழுவழுன்னு இருக்கு. ஆனா தேங்காமேலே கை வைங்க என்றார்”. வைத்துப் பார்த்தேன். அது மட்டும் உண்மையான தேங்காய்மீது கை வைத்த மாதிரி சொரசொரப்பாக இருந்தது!

Athangudi Aranmanai another viewஇப்படி ஒரு வீட்டைக் கட்ட வேண்டுமென்ற எண்ணம் வந்த வீட்டின்20140329_193959 உரிமையாளர் யாரோ ஒரு செட்டியாரை நினைத்து பிரமிப்பாக இருந்தது. ரொம்ப கொடுத்து வைத்தவர். கிட்டத்தட்ட 650 அறைகள் உள்ளன! சமையல் அறைகள், பரிமாறும் அறைகள் மட்டுமே நாற்பதுக்கும் மேல்! குறைந்தது ஒரு நூறு பேராவது வீட்டில் எந்நேரமும் இருந்தால்தான் வீட்டில் வாழமுடியும். யாராவது ஒரு திருடன் வீட்டினுள் வந்துவிட்டால் அவன் பாடு திண்டாட்டம்தான்!

அரண்மனைக்கிளி போன்ற திரைப்படங்கள் இங்குதான் எடுக்கப்பட்டன. காரைக்குடியைச் சுற்றிலும் இதுபோன்ற 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளனவாம்!

கானாடு காத்தான் அரண்மனை வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஆத்தங்குடி அரண்மனையைவிட அழகாக உள்ளது.Thakkali Dosai ஆனால் உள் அழகு ஆத்தங்குடி அரண்மனைக்குத்தான். Devarajan, Me, Narayananஆத்தங்குடி என்பது ’ஆத்தன் குடி’ என்பதன் மரூஉ. ஆத்தன் என்பது சிவனைக் குறிக்கும். இன்னொரு விளக்கத்தின்படி, ஆத்தங்குடி என்பது ஆ (பசு) தங்கும் குடில். கானாடு காத்தான் என்பது அந்தக் காலத்தில் கால் வாசி செட்டி நாட்டைப் பரிபாலனம் செய்த செட்டியார்களைக் குறிக்க சொல்லப்பட்ட வாக்கியத்தொடர். ’கால் நாடு காத்தான்’. இந்த விளக்கங்களெல்லாம் நண்பர் தேவராஜன் சொன்னவை. ஆத்தங்குடி அரண்மனைக்கு தூரத்து உறவினர் அவர்.

Devara House Tableஇதெல்லாம் சரி. ஆனால் காரைக்குடியின் வெயில் வேலூரின் Me at Athangarai Aranmanai Thinnaiவெயிலையும் தோற்படிப்பதாக இருந்தது. தாங்க முடியவில்லை. ஆனால், “இப்பத்தான் ஆரம்பிச்சிருக்குது. இனிமேதான் பட்டையை கெளப்பும்” என்றார் நாராயணன்! அது பட்டையைக் கிளப்புவதற்குள் நாங்கள் எங்கள் ஜாகையைக் கிளப்பிக் கொண்டோம்!

 

 

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

4 Responses to காரைக்குடி அரண்மனைகள்

  1. SingarveluK says:

    Dear Dr Rumi Sir,
    I am K.Singarvelu once i phoned to heal the back pain and still I am waiting for you and your prayer by tele healing and forllowing your instruction with the ayurvedha treatment applying oil thereapy.
    I am waiting for the new alpha class going to be held in Karaikkudi atleast other than Chennai.
    Thanks and regards
    K.Singarvelu
    9363063488

  2. parthasarathy says:

    Respected sir,
    This is parthasarathy from chennai, Can you tell me when there will be Alpha course in chennai. Take care of you health sir, Insha Allah. Thank you very much sir.

    • நாகூர் ரூமி says:

      Please contact Mr Magesh the Coordinatore for Alpha Meditation Program at 9677044743.There may be a class on 27th of this month.

  3. AR.Ganesan says:

    Dear Shri.Dr.Nagoor Roomy,

    Our sincere thanks to you for your wonderful description of
    the Athangudi periyaveedu,with nice photographs taken in
    apt angle.

    Arunachalam Ganesan.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s