நாகூர் நாயகம் அற்புத வரலாறு

nagore (2)இன்று நாகூர் நாயகம் அற்புத வரலாறு என்ற என்னுடைய நூல் வெளிவந்தது. காரைக்குடி அழகப்பர் பதிப்பக வெளியீடு. அட்டை வடிவமைப்பு என் நண்பரும் கவிஞருமான யாழன் ஆதி. அட்டையில் உள்ள நிழல் படம் என் வீட்டு மாடியிலிருந்து நான் எடுத்தது. ஏற்கனவே கிழக்கு வரம் வெளியீடாக வந்த நூல்தான். ஆனால் அதன் தலை0ப்பு நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் என்று அவர்கள் வைத்திருந்தார்கள். அது “நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா” என்ற முட்டாள்தனமான பாடலின் வரிகளிலிருந்து வைக்கப்பட்டவை. அதில் ஆண்டவா என்பதை நான்தான் வேண்டாம் என்று சொல்லி நிறுத்தினேன்.

இப்போது தலைப்பு என் விருப்பத்துக்கு நானே வைத்தது. முந்தையை நூலில் பெரிய எஜமான் அவர்களின் அற்புதங்களைப் பற்றி எழுதவில்லை. பின்பு ’கன்ஜுல் கராமாத்’தை முழுமையாகப் படித்துவிட்டு அதிலிருந்து சலித்து எடுத்து இதில் கொடுத்துள்ளேன். இது நாகூர் ஆண்டகை பற்றிய முழுமையான வரலாற்று நூலாக அமைந்துவிட்டது. நாகூர் ’ஹந்திரி’ சமயத்தில் இது வெளிவந்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.

Nagore Bk Mun Attai-2நூல் நாகூரில் ஹஸன்  குத்தூஸ் சாபு அவர்களிடம் கிடைக்கும்.   அவரது எண் 9789350177. நாகூர் கடைகளிலும் இது நாளையிலிருந்து கிடைக்கும்.

காரைக்குடி அழகப்பர் பதிப்பக நாராயணம் மூலமும் வாங்கலாம்.

அவரது எண் 9443492733

இதே நூல் ஆங்கிலத்தில் தயாராகிக்கொண்டிருக்கிறது. தமிழ் நூலிலிருந்து ஒரு சாம்பிள் உங்களுக்காக:

பின் அட்டை வாசகங்கள்

நாகூர் நாயகம், நாகூர் ஆண்டகை, நாகூர் ஆண்டவர், காதிர் வலீ, மீரான் சுல்தான், ஷாஹுல் ஹமீது, பாதுஷா நாயகம் என்றெல்லாம் அறியப்படும் மகான் தோன்றியது 16ம் நூற்றாண்டில். தோற்றம், மறைவு இரண்டும்  எப்படி இயற்கையோ, அப்படியே மறைந்து வாழ்தலும் மகான்களின் இயல்பாகும். ஆமாம். நாகூராரை நாடி வ்ருபவர்களின் நாட்டங்கள் நிறைவேறுகின்றன. பிரச்சனைகள் தீருகின்றன. காரணம் நாகூர் ஆண்டகையின் அற்புத ஆற்றல். அவருக்கு அரசனும் ஆண்டியும் ஒன்றே. அவரிடம் முஸ்தபா கேட்டாலும் கிடைக்கிறது. முனியாண்டி கேட்டாலும் கிடைக்கிறது. மத நல்லிணக்கத்துக்கும், மனித நேயத்துக்கும் மகத்தான கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்த எடுத்துக்காட்டு. உலகெங்கிலும் புகழ் பெற்ற நாகூர் தர்கா. நாகூர் ஆண்டகையின் ஆதாரப்பூர்வமான, விரிவான,  அற்புத வரலாறு. நாகூர் ரூமியின் எளிய நடையில் உங்களுக்காக.

14. நாகூர் நாயகத்தின் நல்லுபதேசங்கள்

 hதேவையான பொருளொன்றை வாங்க கடைவீதிக்குச் சென்று ஒரு கடைக்குள் நுழைகிறோம். வேண்டிய பொருள் அங்கே இருக்கிறது. அது குறித்து நாம் யாரிடம் பேசுவோம்? கடைக்காரரிடம்தான் பேசுவோம். அந்தப் பொருளிடம் பேசமாட்டோம். அப்படியிருக்க, எல்லாவற்றையும் படைத்துப் பாதுகாத்து வருகின்ற அல்லாஹ்வை நெருங்க முடியாமல் அவனது அற்பப் படைப்புகளிடமே உதவி கோருவதும் ஆதரவு வைப்பதும், புகல் கேட்பதும் எப்படிச் சரியாகும்?

 

Nagore Bk Pin Attai-1நம்மை மிகவும் நெருங்கியிருக்கிற அல்லாஹ்வை முட்டாள்தனமான செயலாலும் எண்ணத்தாலும் நாம்தான் தூரமாக்கிக் கொள்கிறோம். ஞானத்தாலும் அன்பாலும் அவனை நெருங்கிச் செல்கிற புத்திசாலிகளை அணைத்துக்கொள்ள அவன் காத்திருக்கிறான்.

பிரபஞ்சத்தின் அதிபதியே நம்மை ஆலிங்கனம் செய்து கொண்டுவிட்டபின், அவனது படைப்புகள் நமக்கு ஏன் தலைவணங்கி நிற்காது?

இஸ்லாத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று அகம், மற்றது புறம். அகத்தைச் சுத்தமாக வைத்துக் கொண்டு புறத்தை அழுக்கடையச் செய்தீர்களானால், நீங்கள் இஸ்லாத்தைப் பேணியவர்களாகமாட்டீர்கள். புறத்தை கவனித்துக்கொண்டு அகத்தை மறந்தாலும் அப்படியே.

இரண்டு பக்கங்களைக் கொண்ட இஸ்லாம் என்ற உடலுக்கு தொழுகையே உயிர். எக்காரணம் கொண்டும் தொழுகையை அலட்சியம் செய்ய வேண்டாம்.

அதிகமாக உறங்க வேண்டாம். மந்த நிலையை ஏற்படுமாறு அதிகமாக உண்ண வேண்டாம். தொடர்ந்து நோன்பு நோற்று வருவது தீய எண்ணங்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.

அறிஞர்களையும் பெரியவர்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிபடுகிறவனுக்கு மற்ற வஸ்துக்கள் வழிபட விரும்பும்.

நஃப்ஸ் (கீழான இச்சைகள் / மனது ) கட்டுப்பட்டுவிட்டால் மற்ற யாவும் எளிதாகிவிடும்.

நான் உங்கள் ஆன்மாவில் இருக்கிறேன். ஆனாலும் நீங்கள் என்னைக் கவனிப்பதில்லை என்றும் கூறுகிறான். உங்கள் அகத்தை தன் இருப்பிடமாக இறைவன் வைத்திருக்கிறான் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனாலும் இது சத்தியமானதாகும். எனவேதான் யார் தன்னை அறிந்து கொண்டாரோ, அவர் தன் நாயனை அறிந்து கொண்டார் என்று நபிகள் நாயகமும் கூறினார்கள்.

ஒரு மனிதன் தன் கண்களை மூடிக்கொண்டு, காதுகளை அடைத்துக் கொண்டு, ஆட்டம் அசைவின்றி படுத்திருந்தாலும்கூட தானிருப்பதை உணர்கிறான். இவ்வாறு எது உணரப்படுகிறதோ அதுவே மனிதனுடைய அகமாக இருக்கிறது. அகத்தில்தான் ‘ரூஹ்’ எனப்படும் ஆன்மா இருக்கிறது.

ஒவ்வொரு விஷயத்திலும் சிலருக்கு இறைவன் நிபுணத்துவத்தைக் கொடுத்திருக்கின்றான். இறைவனைப் பற்றிய ஞானத்தை அடைய வேண்டுமானால் அவனுடைய பாதையில் ஏற்கனவே சென்றுள்ள மெய்யடியார்களைத் தேடியடைவதுதான் உங்களுக்குச் சரியான பாதையாகும்.

பாதுஷாக்களும், மன்னர்களும் மதத்தின் பெயரால் மனித இரத்தத்தைச் சிந்தாதீர்கள். உங்களுடைய அதிகார ஆசைகளுக்கு ஆண்டவனின் பெயரைச் சூட்டாதீர்கள்.

சமூகத்திலும் மார்க்கத்திலும் குழப்பத்தை உண்டாக்கும் கூட்டத்தினரோடு சேரவேண்டாம். மார்க்க சட்டதிட்டங்களும், ஆன்மிகப் பாதையும் ஒன்றோடொன்று முரண்பட்டதோ, வேறு வேறானதோ அல்ல.

நல்லடியார்களின் சமாதிகளை தரிசனம் செய்வதால் உங்களின் சகல காரியங்களும் நேர் பெறும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

மனிதனுக்குள்ளே இருக்கும் ரகசியம்தான் இறைவன்.

உங்களுடைய குருநாதரின் தோற்றத்தில்தான் உங்களுக்கு சத்தியம் வெளியாகும்.

ஞானமானது உங்கள் நீண்ட அங்கியிலோ, ஜபமாலையிலோ இல்லை.

மனிதன் தனக்கு நன்றி செலுத்துவதை இறைவன் எதிர்பார்க்கிறான். ஆனால் மனிதனால் இறைவனுக்கு எப்படி நன்றி செலுத்த முடியும்? தொடக்கத்தில் இறைவனின் ரகசியமாக மனிதன் இருந்தான். இன்றோ இறைவன் மனிதனின் ரகசியமாக உள்ளான். நம்மில் அவனை பகிரங்கப் படுத்துவதே நாம் அவனுக்குச் செய்யும் நன்றியாகும்.

உண்மையையும் பொய்யையும் பிரித்தறிவிக்கும் பொருட்டு இறைவன் என்னை இந்தியாவில் தோன்றச் செய்துள்ளான்.

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

6 Responses to நாகூர் நாயகம் அற்புத வரலாறு

 1. Magesh says:

  Excellent messages & condensed wisdom.
  Thank you very much for another great wisdom pack….in line with Adutha vinadi, Alpha Meditation, Sufi Vazhi, Indha Vinadi, Islam an Introduction Mandhira Chavi etc..Waiting eagerly to read the full book.Thank you for the inspiring post sir – Magesh

 2. Mohamed Riyas Faizee says:

  மன பள்ளங்களை மேவி செல்லும் ஆழமான நாகூர் நாயகத்தின் வரிகளை நான்கு சுவருக்குள்(சதுர பக்கங்கள்) அடைக்க முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

 3. ABDUL LATHEEF says:

  GREAT WORK RUMI SIR…IN NAGORE GREAT SAINT IS BEEN BURIED ITS ALL ALLAH’S BLESSINGS TO US…ONLY PROBLEM NOW IS WHO IS THE GREAT SAINT AT PRESENT TIME HOW TO FIND HIM

 4. nawshad says:

  நாகூர் மஹானின் சந்நிதி சென்று உளம் கனிந்து அழ மனம் துடிக்கின்றது. நீங்கள் அந்த மண்ணில் பிறக்கப் பாக்கியம் பெற்றீர்கள் இங்கு இலங்கையிலிருந்து நாம் எங்கே…?>

  • நாகூர் ரூமி says:

   இன்ஷா அல்லாஹ் நிய்யத் வையுங்கள். நடக்கும்

 5. வடக்கு மாங்குடி அப்துல் முத்தலிப் says:

  உங்களின் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s