பாட்பூரி — 07

கொஞ்சம் ’லைட்’ ஆக எழுதி ரொம்ப நாளாகிறது. இது ஒரு ரிலாக்சேஷனுக்காக. உங்களுக்கும். எனக்கும்.

 • facebook-evolution-640முகநூல் பஞ்ச்: முகநூல் வந்ததுதான் வந்தது, பலபேருடையமுகத்திரைகள் கிழிகின்றன!
 • சில பேர் என்னை அது விளையாட வாருங்கள், இது விளையாட வாருங்கள் என்று முகநூலில் அழைப்பு விடுத்தவண்ணம் இருக்கிறார்கள். இந்த விளையாட்டெல்லாம் என்னோடு வேண்டாம் என்று அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்!
 • சாப்பிடுவதையெல்லாம் ஃபோட்டோ பிடித்து முகநூலை நிரப்பி விடுகின்றார்கள். இதோடு நிறுத்திக்கொள்வது நல்லது. சாப்பாட்டின் விளைவுகளையும் காட்டிவிடப் போகிறார்கள்!
 • நண்பர் ஞானி அவர்களுக்கு அறுபது ஓட்டுகள் – அல்லது நூறுக்கும் கம்மியாக – விழுந்ததாக ஒரு டிவி செய்தி சொன்னது! ’ஆம் ஆத்மி’ என்றால் ’சாதாரண மனிதன்’ என்று அர்த்தம். ஒரு ’ஞானி’ எப்படி ’ஆம் ஆத்மி’யாக இருக்க முடியும்?!
 • ’வாரணாசி’ என்பதை ’வாராணசி’ என்று மிகச்சரியாக தினமணி குறிப்பிடுவதாக நண்பர் பத்ரி முகநூலில் எழுதியிருந்தார். இருக்கலாம். ஆனால் தினமணி எப்போதுமே சரியாகத்தான் மணியடிக்கும் என்று சொல்லிவிட முடியாது. வாஜ்பாய் என்ற பெயரை எப்போது பயன்படுத்தினாலும் பயமுறுத்துவதுபோல ‘வாஜ பேயி’ என்றுதான் போடும்!
 • appalam2நடிகை எக்ஸ் ஒரு அப்பள விளம்பரத்துக்காக கையில் ஒரு அப்பளத்தை குறுந்தகடு மாதிரி வைத்துக்கொண்டு ஆடுகிறார். அதைப் பார்த்த என் ஊர் நண்பர் ஒருவர், “ம்ஹும், இந்த வீங்கிப் போன அப்பளத்துக்கு இந்த ஆட்டமா?” என்றார். அப்பளமும் பார்க்க கொஞ்சம் வீக்கமாகத்தான் இருந்தது.
 • தேர்தல்கள் முடிந்து, முடிவுகளும் வந்துவிட்டன. ரொம்ப ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்த முடிவுகள்தான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நல்ல முடிவு என்றுதான் தோன்றுகிறது. சில குறிப்பிட்ட தனி நபர்கள், உதாரணமாக ஏணி சின்னத்தில்நின்ற அப்துல் ரஹ்மான் அவர்கள், நன்றாக உழைக்கக்கூடியவர்கள் வெற்றி பெறாதது வருத்தமே என்றாலும். சரியோ, தவறோ, துணிந்து சிலபல முடிவுகளை எடுக்கக்கூடியவர் தற்போதையை தமிழக முதல்வர். அது காஞ்சியாரைக் கைது செய்வதாக இருந்தாலும் சரி, வீரப்பனை சுட்டுக் கொல்வதென்றாலும் சரி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அரசாங்க மருத்துவமனையாக மாற்றுவதென்றாலும் சரி. போகட்டும்.
 • கருணாநிதி
 • திமுக வாஷ்அவுட்-ஆகும் என்று நினைக்கவே இல்லை. (மற்ற டிவிகளெல்லாம் தேர்தல் செய்திகளை ஒளிபரப்பிக்கொண்டிருந்தபோது பாவம், கலைஞர் டிவியில் மட்டும் ஏதோ பாட்டு நிகழ்ச்சியைக் காட்டிக்கொண்டிருந்தார்கள்). ஆனால் மோடி பிரதமராகும் அளவுக்கு மற்ற மாநிலங்களின் முடிவுகள் இருக்கிறதென்பது யோசிக்கவேண்டியது. எப்போதுமே வரலாற்றை உருவாக்குபவர்கள் மக்களே. அவர்கள் இப்போது உருவாக்கியிருக்கும் வரலாறு கறுப்பு வரலாறாக மாறிவிடக்கூடாதென்ற கவலை மட்டுமே இப்போதைக்கு இருக்கிறது. பொறுமையாக இருப்போம். பொறுமையாளர்களோடு நான் இருக்கிறேன் என்று இறைவனும் கூறுகிறான்.
 • அரசியல் விமர்சனம் இனி செய்யவே மாட்டேன் என்று நண்பர் தாஜ் முகநூலில் சொல்லியிருக்கிறார். அவர் இனி கவிதைகளும் எழுதாமலிருந்தால் நல்லது என்று நண்பர் (ஆ…) சொன்னதாகவும் சொல்லி, அது முடியுமா என்று தெரியவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். அது மட்டும் முடியுமென்றால் ஆ…வில் தொடங்கி ஆஹா வரை என்று சொல்லிவிடலாம்!
 • super-singer-junior-050914சூப்பர் சிங்க ஜூனியர்-4ல் உள்ள 25 குழந்தைகளில் – பாவம் மூன்றேssj4பையன்கள் – பல பெண் குழந்தைகள் அற்புதமாகப் பாடுகின்றன. அவர்கள் பாடுவதைக் கேட்கும்போது நமக்குள் நியூரோபெப்டைட்ஸ் நிறைய சுரந்து உடலுக்கும் மனதுக்கும் நிச்சயம் நல்லது செய்யும் என்று நம்புகிறேன்.
 • viyay tv mவிஜய் டிவிக்கும் சன் டிவிக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. அது sun tv mவிஜய், இது சன் என்பதல்ல. முன்னது மயிலென்றால் பின்னது வான்கோழி. பல நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியாகவே சன் இருக்கிறது. ’சன்’னின் பலம் அதன் சீரியல்கள்தான். அதை எடுத்துவிட்டால் அவ்வளவுதான். “Hamlet” without the Prince of Denmark என்று சொல்வார்களே அதுபோல. விஜயைப் பார்த்து சூடு போட்டுக்கொள்வதை சன் நிறுத்தவே இல்லை. அங்கே சூப்பர் சிங்கர் என்றால் இங்கே கன்றாவியாக ஒரு சன் சிங்கர். ஆனால் இரண்டு டிவிகளுக்கும் இங்கே ஒரு ஒற்றுமை உண்டு. அங்கே காமெடிக்கு மனோ என்றால் இங்கே கங்கை அமரன். அதேபோல மஹாபாரதம். விஜய்யில் மேக்-அப், நடிக நடிகையர், செட்டிங், பிரம்மாண்டம் என்று தூள் கிளப்புகிறது. ஆனால் சன் டிவியின் மகாபாரதம் மகா ’கோரதம்!
 • ????????????????????????????????????????????????????????சரி. லைட்டாக ஆரம்பித்தோம். லைட்டாக முடித்துக்கொள்வோம்.divorce குறுஞ்செய்தி, வாட்ஸப் – இன்னபிற மூலமாக வந்த ஒரு ஜோக்: டைவர்ஸுக்கு என்ன காரணம்? பதில்: மேரேஜ்-தான்! குறுஞ்செய்தியா அது? மஹா செய்தி!

 

 

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s