ஆச்சிமா பற்றி அம்பை

Thalam Coverஅக்டோபர்-டிசம்பர் தளம் கலை இலக்கிய இதழில் முதன் முதலாய் தமிழில் நாவல் எழுதிய முஸ்லிம் பெண்மணியான என் பெரியம்மா சித்தி ஜுனைதா பேகம் பற்றி எழுத்தாளர் அம்பை எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. அனுபவம் மிகுந்த ஒரு படைப்பாளியின் எழுத்து எவ்விதம் செயல்படும் என்பதைக் காட்டும் விதமாக அக்கட்டுரை அமைந்துள்ளது. அதுபற்றி நான் தளம் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தையும் இத்துடன் இணைக்கிறேன். ஒளிப்படங்களை சொடுக்கி நீங்கள் முழுக்கட்டுரையை வாசிக்கலாம்.

அன்புள்ள தளம் ஆசிரியர் அவர்களுக்கு

என் பெரியம்மா சித்தி ஜுனைதா பேகம் பற்றி எழுத்தாளர் அம்பை எழுதிய “நச்சுடை நாகங்கள் இடையே ஒரு நங்கை” என்ற கட்டுரை படித்தேன். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என் நன்றியைத் தெரிவிக்கவே இந்தக் கடிதம். என் பெரியம்மா பற்றி பல கட்டுரைகள் வந்துவிட்டன. ஆனால் இதுவரை வந்த கட்டுரைகளிலேயே இதுதான் Ambai Essay-1மிகச்சிறந்த கட்டுரை என்று சொல்வேன். அம்பை ஒரு பெண்ணாகவும், பெண்ணியம் சார்ந்த அறிவார்ந்த படைப்பாளியாகவும் இருப்பதே இதற்குக் காரணம் என்று கருதுகிறேன். என் பெரியம்மாவிடம் நானும் பல கேள்விகள் கேட்டுள்ளேன். ஆனால் அம்பை எழுப்பும் கேள்விகள் எதுவும் எனக்குத் தோன்றவில்லை. நான் ஒரு ஆணாக இருப்பதே அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். அக்கேள்விகளை நானோ அல்லது என் குடும்பத்தைச் சேர்ந்த யாராவதோ கேட்டிருந்தால், ஒரு பெரிய புதிர் அவிழ்க்கப்பட்டிருக்கலாம்.

அம்பையின் உன்னிப்பான கவனிப்பில் இதுகாறும் நான் தவறவிட்ட முக்கியமான தகவல்கள் உள்ளன. உதாரணமாக 1) எங்கள் பூட்டனார் நவாப் சாகிபு மரைக்காயர் அவர்கள் இந்திய விடுதலைப்போருக்காக  சிறை சென்றவர். 2) காதலா கடமையா நாவல் என் பெரியாம்மாவின் சின்னம்மா (சித்தி) ஹதீஜா நாச்சியார் அவர்களுக்கு (என் பாட்டனாரின் இரண்டாவது மனைவி) சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பது ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

Ambai Essay-2Ambai Essay-3”காதலா கடமையா” நாவல் உருவான விதம் பற்றிய அம்பையின் கற்பனை அற்புதம். அது சாத்தியமே என்று தோன்றுகிறது. என் மாமா, Uvesa Munnurai-1Uvesa Munnurai-2சித்தி ஜுனைதா பேகத்தின் சகோதரர் ஹுசைன் முனவ்வர் பெய்க் அவர்கள் மூலமே ஆங்கில இலக்கிய அறிவு அவர்களுக்குக் கிடைத்திருக்க அதிகம் வாய்ப்புண்டு என்று நான் கருதுகிறேன்.

சித்தி ஜுனைதா பேகத்தின் தாயார் பெயர் கதீஜா நாச்சியார் அல்ல. அது அவரின் சின்னம்மா பெயர். அவர்களது தாயாரின் உண்மையான பெயர் என்னவென்று எங்களுக்கே இன்னும் தெரியவில்லை! ”முத்துகனி” என்றுதான் அவர்களை அனைவரும் நினைவு வைத்துள்ளனர். ’முத்துகனி’ என்பது அழைக்கப்படும் பெயர். அதையே வைத்துக்கொண்டால் சித்தி ஜுனைதா பேகத்தின் தாயார் பெயர் முத்து கனியாகும், அம்பை ஆரம்பத்தில் குறிப்பிடுவதுபோல கதீஜா அல்ல. (கதீஜா தன் சிற்றன்னை என்று சித்தி ஜுனைதா தன் முகவுரையில் குறிப்பிடுவதைக் கவனிக்க).

அன்புடன்

நாகூர் ரூமி

******************************************************

About நாகூர் ரூமி

A spiritualist and a writer.
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s