பெங்களூரு அனுபவங்கள்

Award to Hr Baskarஞாயிறன்று (05.07.15) பெங்களூரில் நடக்க இருந்த ஹீலர் பாஸ்கரின் நிகழ்ச்சிக்காக நான், என் மனைவி, மாமியார் மூவரும் காலை ஐந்தரைக்குக் கிளம்பி எங்கள் மாருதி வேகனாரில் சென்றுகொண்டிருந்தோம். வழக்கம்போல பாதுகாப்புக்காக ஓதிக்கொள்வதை ஓதிக்கொண்டேன். காலை ஏழு மணி இருக்கும். ஹோசூர் தாண்டியிருப்போம். முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரி சட்டென்று நின்றதால் அதன் பின்னால் சென்றுகொண்டிருந்த பொலிரோ காரும் நின்றது. அதிலிருந்து ஒரு 30 அடி பின்னால் நாங்கள். ட்ரைவர் பிரேக் போட்டார். ஆனாலும் பிரேக் சாலையைத் தேய்க்கும் சப்தத்தோடு 80-90 கிமீ வேகத்தில் எங்கள் கார் சென்று பொலிரோவின் பின்னால் மோதியது! மோதப்போகிறது என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை.

அல்லாஹ்வின் பெருங்கருணையால் எங்களில் யாருக்கும் எந்த அடியும் படவில்லை. ஆனால் மாமியாருக்கு மட்டும் காலில் லேசாக ரத்தம் கட்டிக்கொண்டது. காரை நிறுத்தி முன்னால் போய் பார்த்தேன். பார்க்கவே பயமாக இருந்தது. அவ்வளவு மோசமாக நசுங்கி, உடைந்து, பானட் உள்ளேபோய் ’ஜாம்’ ஆகியிருந்தது!

திரும்பி விடலாமா என்று மாமியாரிடம் கேட்டேன். வேண்டாம் பெங்களூருக்கே போய்விடலாம் என்றார். எனக்கது ஆச்சரியம்தான். அவர்களைப்பற்றி எனக்குத் தெரியும். அவர்களைப் பற்றித்தான் நான் கவலை கொண்டிருந்தேன். ஆனால் என் மனைவி வழக்கம்போல என்னைப் பற்றிக் கவலை கொண்டிருந்தாள். நேரத்தை வீணாக்காமல், போலீஸ் கேஸாக்காமல், காரை எடுக்கச் சொன்னேன். கார் போகாது என்று நினைக்கிறேன் என்றார் ட்ரைவர். போகும் எடுங்கள் என்றேன் நான். நான் சொன்னபடியே காரும் ஒத்துழைத்தது!

அப்படியே ஒரு 60 வேகத்தில் மட்டும் சென்று பெங்களூரை அடைந்தோம்! காரை சரி செய்ய குறைந்தது மூன்று நாளாகும் என்று ஒரு கராஜ் நண்பர் சொன்னார். (நண்பர் பெங்களூர் ப்ரேமின் நண்பர்). ப்ரேம் வீட்டில் சிறிது ஓய்வெடுத்துவிட்டு அவரது காரிலேயே நிகழ்ச்சிக்குச் சென்றோம்.

தாமதமாகச் சென்றதால் என்னால் பாஸ்கரை அறிமுகப்படுத்த முடியவில்லை! (நல்லவேளை). கர்நாடகாவுக்கு கன்னடாவை அறிமுகப்படுத்த வேண்டுமா என்ன? திருப்பதிக்கே லட்டா?! எனவே பாஸ்கர் வழக்கம்போல பேசத்தொடங்கியிருந்தார். மைக்கில் அவர் கத்துவது போலவே தோன்றியது எனக்கு.

Hr Baskar Me--04வீடியோவில் பார்த்த பாஸ்கரைவிட கொஞ்சம் குண்டாகி கொழுகொழுவென்றிருந்தார். கல்யாண களை?! ஆனால் அவரது பேச்சின் கருத்துக்களிலும் சொல்முறையிலும் நிறைய வித்தியாசம் தெரிந்தது. நகைச்சுவை அதுபாட்டுக்கு பொங்கிப் பிரவகித்துக்கொண்டிருந்தது!

மனிதர் காலையில் 9 மணி தொடங்கி மாலை 5 வரை பேசினார்! அசுரன்! நான் அதிகபட்சமாக நான்கு மணி நேரம் பேசியிருக்கிறேன். பாஸ்கரை என்னால் ‘பீட்’ பண்ணவே முடியாது. அப்படிச் செய்யவும் நான் விரும்பவில்லை!

லஞ்ச் ப்ரேக்கில் என்னை வைத்து அவருக்கான விருதைக்கொடுக்கச் சொன்னார்கள். என் நூல்கள் சிலவற்றையும் பரிசளித்தேன். (இந்த விநாடி நூல் மட்டும் நான் கொண்டுபோயிருந்தேன். வேறு மூன்று நூல்களை நண்பர் ப்ரேமே கொடுத்தார்)!

The Happy Zen Premப்ரேம் நல்ல நண்பர், சீடர். கவனிப்பதிலும் உதவி செய்வதிலும் அவருக்குப் போட்டியாக அவரது மனைவியும் அம்மாவும், அப்பாவும் இருந்தனர்! அவர்கள்  வீட்டு சாப்பாடும் வெகு சுவை! அல்லாஹ் அவருக்கும் குடும்பத்தாருக்கும் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வழங்கவேண்டும். ’அதிதி தேவோ பவ’ என்று நினைப்பவர்கள்! வாழ்க வளமுடன்!

ப்ரேமின் நண்பர்களும் – அதில் பலர் என் ஆல்ஃபா சீடர்கள் – அவரைப் போலவே உதவிக்குணம் கொண்டவர்கள்! The Happy Zen என்ற அவர்களது குழுவின் சேவை போற்றத்தக்கதாக இருந்தது.

Hr Baskar Me--02பாஸ்கர் பேசி முடித்துவிட்டு இரவு ப்ரேம் வீட்டில்தான் தங்க வந்தார். நாங்களும் அங்குதான் இருந்தோம். அவரோடு தனியாக நிறைய பேசினோம். மனிதர் வெகு எளிமையும், நேர்மையும், பணிவும் கொண்ட அற்புதமான மனிதர். என் (உடல்) பிரச்சனை ஒன்றுக்கு அற்புதமானதோர் காரணத்தைச் சொன்னார். தீர்க்கும் வழியையும் சொன்னார். அல்லாஹ் பெரியவன். என்மீதுதான் அவனுக்கு எவ்வளவு அன்பு!

மறுநாள் அதிகாலை கிளம்பி நாங்கள் ஆம்பூர் வங்தது பாஸ்கரின் காரில்! என் காரை பெங்களூரிலேயே ப்ரேமின் பொறுப்பில் விட்டுவிட்டோம். அதைச் சரிசெய்த பிறகு ஆம்பூர் கொண்டுவர ஏற்பாடு செய்யவேண்டும். எங்கள் வீட்டிலேயே எங்களை இறக்கிவிட்ட பாஸ்கருக்கு நன்றிகள். அவருக்கு என் மனைவி சடசடவென அடுப்பங்கரைக்குள் புகுந்து தோசை ஊற்றிக் கொடுத்தாள். நானும் அவரும் சேர்ந்து சாப்பிட்டோம். தோசையும் டீயும் மிக நன்றாக இருந்ததாக புகழ்ந்தார். ’உண்டாகி’ இருக்கும் என் மகள்களுக்கு ஆரோக்கிய டிப்ஸ் கொடுத்தார். ஒன்பது மணி வாக்கில் வேலூர் கிளம்பிவிட்டார். அடுத்த நாளிலிலிருந்து மூன்று நாட்களுக்கு விஐடி பண்பலையில் அவரது நிகழ்ச்சி உள்ளது! எங்கள் கல்லூரிக்கும் அழைத்துள்ளேன். வருவதாகச் சொல்லியுள்ளார்.

20150706_091855ஹஸ்ரத் மாமா சொன்ன செய்திகளுக்கும் பாஸ்கரின் சில பயிற்சிகளுக்கும் தொடர்புள்ளது. எனக்கு அது ரொம்ப சந்தோஷம் கொடுத்தது. அவர் எனது நூல்களை ஏற்கனவே படித்துள்ளார். என் ஆல்ஃபா வகுப்புக்கு அவரது ஊழியர் ஒருவரையும் அனுப்பி வைத்துள்ளார். உங்கள் ரசிகன் நான் என்று அவர் என்னிடம் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஆச்சரியங்கள் தொடரட்டும். ஆரோக்கியம் மலரட்டும். அற்புதங்கள் நிகழட்டும். எல்லாம் நன்மைக்கே.

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

6 Responses to பெங்களூரு அனுபவங்கள்

 1. பாதுகாப்புக்காக ஓதினது பாதுகாப்பு கொடுக்காதது ஏன்? அப்ப ஓதினதில் குழப்பம் இல்லை டிரைவரிடம் குழப்பம் இருக்கிறது. வண்டி ஓட்டுகிறவர் வண்டியுடைய கண்டிஷன், ரோட்டின் கண்டிஷன், முன்னால் பின்னால் போகும் வண்டியின் தனமை நம் வண்டிக்கும் முன்னால் போகும் வண்டிக்கும் இடையிலுள்ள இடைவெளி போகும் வேகத்தின் அளவு இவை அனைத்திலும் இருக்கிறது. வரும்போது ஏன் ஆக்ஸிடெண்ட் ஆகவில்லை? அவர் என்ன ஓதிக்கிட்டு வந்தார்? அடுத்து, 80/90 மைல் வேகத்தில் சென்றோம் என்கிறீர்கள், அதாவது மணிக்கு 150 கி.மீ வேகம். அவ்வளவு வேகம் போக நம் நாட்டில் சாலையே இல்லை. மூன்றாவது மாருதி வேகனர். அது 4 வீல ட்ரைவ் வண்டி அல்ல, தீ பெட்டி மாதிரி கொஞ்சம் பெரிய வண்டி. அதில் இத்தனை வேகத்தில் போனால் பறக்கும், ரோட்டை அலசும். இத்தனை குறைபாடுகளையும் வைத்துக்கொண்டு ஓதிக்கிட்டு போனேன் என்று சமாதானம் சொல்லாதீர்கள்.

  • நாகூர் ரூமி says:

   அன்பு ஹமீத் ஜாஃபர். 80/90 என்பது மணிக்கு எத்தனை கிமீ போகும் என்ற வேகம்தான். தவறாக மைல் என்று எழுதியிருக்கிறேன் போலும். அடுத்தது, ஓதிக்கொண்டு போனது காருக்கு எதுவும் ஆகக்கூடாது என்பதற்காக அல்ல. மனிதர்களுக்கு எதுவும் ஆகக்கூடாது என்பதற்காகத்தான். எனக்குத் தெரியும். ஓதலின் மகிமை. அதுதான் எங்களைக் காப்பாற்றி இருக்கிறது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்று சொல்வார்களே, அந்த மாதிரி எங்களுக்கு எதுவும் ஆகாமல் பெரிய எஜமானின் ’இஸ்ம்’ எங்களைக் காப்பாற்றி இருக்கிறது. அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. திரும்பி வரும்போதும் நான் ஓதிக்கொண்டுதான் அமர்ந்தேன்! அதனால்தான் ஒன்றும் ஆகவில்லை. நாம் கவனமாக ஓட்டவேண்டும் என்பது சரிதான். அதையும் மீறி ஏதாவது நடக்கும்போது நமக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடுகள். உங்கள் வருத்தம் இஸ்மின் மீதா ட்ரைவரின் மீதா என்று எனக்குத்தான் குழப்பமாக உள்ளது! எல்லாம் இருக்கட்டும். உங்கள் அன்புக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அல்ஹம்துலில்லாஹ்.

 2. mohanbabupt says:

  Dear sir,
  It is pleasure that you met him. I was thinking and wishing for long time (3 years )that you both meet and talk and share each other.. it happened now. I have told about you and your book to Baskar long back.

 3. நாகூர் ரூமி says:

  Thank u Mr Mohan. It was a nice experience for both of us.

 4. viji says:

  Nagore roomi sir how to contact you? Pl drop yr accessible mail i.d. is it possible to meet you?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s