இது கண்களுக்கு அல்ல, மனசுக்கு

 

Book Release by KMkநாகூர் ஜஃபருல்லா நானாவின் ”இது kannகண்களுக்கு அல்ல மனசுக்கு” என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா கடந்த 16.08.15 அன்று நாகூர் தமிழ்ச்சங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அதற்கு மூலகாரணமாக இருந்தவர்கள் நண்பர்கள் (புரவலர்) எம்ஜிகே மாலிம், அவர் தம்பி முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஜிகே நிஜாம், நண்பர் நூர் சாதிக் போன்றோராவர். முஸ்லிம் லிக் தமிழ்நாடு கிளையின் தலைவர் பேரா. கே எம் காதர் மொஹிதீன் சார், கேரள தங்கள் அவர்களின் மகனார், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான், கவிஞர் கய்யூம், கவிஞர் காதிர் ஒலி, வி, சாதிக், எழுத்தாளர் ஹிலால் முஸ்தபா அண்ணன், எழுத்தாளர் ஹதீப் சாஹிப், மற்றும் நாகூர் வாழ் மக்கள், முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

My Erpuraiஜஃபருல்லா நானாதான் குழந்தை மாதிரி ஆகிவிட்டிருந்தார். பின் சீட்டில்தான் உட்காருவேன் என்று அடம்பிடித்துக்கொண்டார். அவருக்குத் துணையாக நானும் அமர்ந்துகொண்டேன். அவர் பேச்சை எங்களாலும் எங்கள் பேச்சை அவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் கண்களால் பார்க்கும் விஷயங்களுக்கும் மனிதர்களுக்கும் மட்டும  அவரால் சரியான எதிர்வினை அல்லது வினையாற்ற முடிகிறது.

உதாரணமாக பேரா கேஎம்கே சார் வந்தபோது எழுந்து நின்று மரியாதை செய்து அவருக்கு பொன்னாடை போர்த்தினார். ஹிலால் முஸ்தபா அண்ணனைப் பார்த்தவுடன் அருகில் அழைத்துக்கொண்டார். மற்றபடி யாருக்கோ விழா நடந்துகொண்டிருப்பதைப் போலத்தான் அமர்ந்துகொண்டிருந்தார்.

MGk Malim Speakingஅவரைப் புகழ்ந்து பலரும் பேசினார்கள். நண்பர் எம்ஜிகே மாலிம் பேச்சை நான் முதல் முறையாகக் கேட்டேன். அசத்திவிட்டார். ஜஃபருல்லா நானாவுக்குப் பிடித்தது பிடிக்காதது என்று இரண்டு விஷயங்களைக் கூறினார். பிடித்தது தமிழும் முஸ்லிம் லீகும். பிடிக்காதது பணம் சம்பாதிப்பது, சூரியனைப் பார்ப்பது என்று அவர் சொன்னபோது எழுந்த சிரிப்பலை முழுக்க முழுக்க உண்மை சார்ந்தது.

இன்றுதான் நண்பர் நூர்சாதிக் அனுப்பிய  சிடி கிடைத்தது. விரைவில் அதை வெட்டி, ஒட்டி யூட்யூபில் இடுகிறேன்.

விழாவின் சுவையான சில விஷயங்களை மட்டும் உங்கள் பார்வைக்கு இங்கே வைக்கிறேன்:

MGK Nizam MLA Speakingமுட்டாள் தனம் / முட்டாள் தனம் என்கிறார்கள் உண்மைதான். முட்டாள்களிடம் தானே தனமிருக்கிறது என்று கேலிசெய்யும் ஜஃபருல்லா நானாவின் கவிதை ஒன்றை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்ஜெகே நிஜாம் எடுத்துக்காட்டி அதைக்குறித்த தன் கருத்துக்களை முன்வைத்தார். பணக்காரர்களெல்லாம் முட்டாள்கள் என்று கவிதை சொல்வதாக எடுத்துக்கொண்டு கொஞ்சம் மன வருத்தத்துடன் பேசியதாகப் பட்டது எனக்கு. அந்தக் கவிதையை முன்னுரையில் எடுத்துக்காட்டிய என்னுடைய ‘புத்திசாலித்தன’த்தையும் சாடினார்! (நான் என் ஏற்புரையில் அது ஜஃபருல்லா நானாவின் கருத்து மட்டுமே என்று பதில் சொன்னேன்).

KMK Sir Speaking-2அது அப்படியல்ல, எதையும் முட்டி மோதி சமாளிக்கின்ற ஆள்களைத்தான் அவர் முட்டும் ஆள் என்ற அர்த்தத்தில் ’முட்டாள்’ என்று சொல்லியிருக்கிறார் என்று ஒரு கூறி சபைக்குக் களிப்பூட்டினார் பேரா. கேஎம்கே சார்!

இறுதியாக நண்பர் கய்யூம் ஒரு கவிதை சொன்னார் ஜஃபருல்லா நானா பற்றி. அது உங்களுக்காக இங்கே: (ஆடியோ கொஞ்சம் விளங்கவில்லை. முடிந்தவரை கணித்திருக்கிறேன்).

Qayyum Poetry Recitalசிந்திக்க வைத்தவர் சாக்ரடீஸ்

சிரிக்க வைத்தவர் நஸ்ருத்தீன் முல்லா

சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தவர்

நம் கவிஞர் இஜட் ஜஃபருல்லா

இவரது ஒவ்வொரு கவிதையும்

கல்கட்டா ரசகுல்லா

நல்லதோர் வீணை செய்து அதை

நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ

சுடர் மிகும் அறிவுடன் பிறந்துவிட்ட இந்த

சொல் வித்தகருக்கு

வல்லமை தர வல்லோனை இறைஞ்சுகின்றேன்

Seeni Shanmugam Sir Speakingநாடறிந்த கவிஞனாய் நடைபோட வேண்டியவர்

நான்கு சுவருக்குள் அடைபட்டுப்போனது

நாகூரின் துர்பாக்கியம்

குன்றிலிட்ட விளக்காய் இருக்கவேண்டியவர்

குடத்திலிட்ட விளக்காய் போனது நம் துரதிருஷ்டம்

மாற்றி யோசித்ததாலேயே இவர்

போற்றிப் புகழவேண்டிய பெருமை பெற்றார்

V Sadik speakingமீசை முளைத்தவனெல்லாம் பாரதியாகிவிட்ட

இந்த பேசும் காலத்தில்

நம் ஆசைக்கவிஞனாய் இதய ஆசனத்தில் அமர்ந்தவர்

உறங்கவேண்டிய நேரத்தில் விழித்திருந்து

விழித்திருக்கும் நேரத்தில் உறக்கம் கொண்டு

உறங்கிக்கொண்டிருந்த சமுதாயத்தைத் தட்டி எழுப்பிய

பட்டிமன்றப் பேச்சாளர் இவர்

Thangal son speakingசூனியம் உண்டா இல்லையா என்ற

சூடான விவாதம் கொழுந்துவிட்ட நேரத்தில்

சூனியம் உண்டென்று எனை நம்ப வைத்த சூனியக்காரர் இவர்

ஆம், வார்த்தைகளில் வசியம் பண்ணத் தெரிந்த

வார்த்தைச் சித்தர்

மோனை எதுகைகளை முறைப்படுத்தத் தெரிந்த

மோடி மஸ்தான்

எழுத்துக்களுக்கு செய்வினை செய்து

இலக்கண வட்டத்துக்குள் இழுந்துவந்த

ஏர்வாடி நாயகர்

vlcsnap-2015-10-18-00h37m35s249இவர் வந்தாரை வாழவைக்கும்

சிங்கார நாகூரின் சின்னக் கலைவாணர்

இவர் வங்கக் கடல் தாளாளும்

வரலாற்றுப் புகழ் நாகூரில்

வாரியார் என்றால் மிகையில்லை

இவரின் இந்தக் கவிதை நூலுக்குத் தொகையில்லை

இவர் நாகூரின் தாகூர்

காற்று வாங்க சில்லடி

கவிஞரின் பேச்சு சரவெடி

நகைச்சுவை இவருக்கு எவரெடி

இவர் யாருக்கும் கைகட்டா வணங்காமுடி

மாறுபட்ட சிந்தனை

வேறுபட்ட கண்ணோட்டம்

கூறுபட்ட சமுதாயம் ஒன்றுபட உயர் நோக்கம்

இதுவே இவரது படைப்பாக்கம்

இவரின் ’இறைவா’ கவிதைகள்

மனதை நிறைவாய் ஆக்கும்

இவர் ஆன்மிக வாதியா, சீர்திருத்த வாதியா

தர்க்க வாதியா, குதர்க்க வாதியா

நானறியேன்

என்னைப் பொறுத்தவரை இவர் ஒரு தீவிரவாதி

இந்த அரங்கத்தையே அதிரவைக்கும்

ஆர்டிஎக்ஸ் கவிஞரிவர்

இவர் கர்வம் கொள்ளும் அழகே அழகு

இவர் ஆளுமைக்குள் ஒளிந்திருக்கு ஆணவம்

நம்மை இவர்பால் ஈர்க்கும்

கவிஞனுக்கே இயல்பான அகங்காரம்

இவர் கவிதைக்கு அணி சேர்க்கும் அலங்காரம்

காயிதே மில்லத்தின் காதலர்

சிராஜுல் மில்லத்தின் சிஷ்யர்

முனீருல் மில்லத்தை மோகிப்பவர்

இந்திய முஸ்லிம் லீகின் எழுச்சி வாளாய்

இந்த மாநிலத்தை வலம்வந்த காலம்

வரலாற்றின் பொற்காலம்

பணத்தை யாசிக்கத் தெரிந்த உலகில்

மனத்தை நேசிக்கத் தெரிந்த மாமனிதர்

நீடூழி வாழ்க, நெஞ்சார வாழ்த்துகிறேன்

இறுதிக்குறிப்பு: பொற்கிழியாக எட்டு பவுன் தங்கக்காசுகள் ஜஃபருல்லா நானாவுக்கு வழங்கப்பட்டது. இதில் நண்பர் எம்ஜேகே மாலிமின் பங்கு / முயற்சி அதிகம். அவருக்கும், தம்பி நிஜாமுக்கும் நண்பர் நூர் சாதிக்குக்கும் நன்றிகள். இந்த கவிதை நூல் வெளியிட ஆன செலவுகளை ஏற்றுக்கொண்ட என் தம்பி சிங்கை முஹ்யித்தீன் அப்துல் காதருக்கும் என் நன்றிகள்.

 

 

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

2 Responses to இது கண்களுக்கு அல்ல, மனசுக்கு

 1. அன்புள்ள அய்யா,

  வணக்கம். எனது வலைத்தளம்: மணவை

  என்னுடைய வலைத்தளத்தைப் பார்வையிட்டுத் தங்களின் மேலான கருத்துகளைப் பின்னூட்டமிட அன்புடன் வேண்டுகிறேன்.

  வலைத்தள முகவரி: manavaijamestamilpandit.blogspot.com
  இமெயில் முகவரி: manavaijamestamilpandit@gmail.com

  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.

  • நாகூர் ரூமி says:

   அன்பு ஜேம்ஸ் உங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட்டேன். நன்றாக உள்ளது. கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s