GLOBAL SPIRITUAL GARDEN (GSG) ஓர் அறிமுகம்

GLOBAL SPIRITUAL GARDEN (GSG) ஓர் அறிமுகம்

ben-lee-global-shift-consciousness1எனக்கு 58 வயதாகிறது. இன்னும் எத்தனை காலம் இந்த உலகில் இந்த உடலோடு இருக்கப் போகிறேன் என்று தெரியாது. நான் இந்த உலகை விட்டுப் பிரிந்து போவதற்குள் என்னால் முடிந்த சேவையை சகமனிதர்களுக்குச் செய்ய வேண்டுமென்ற ஆசை எனக்கு. அதனால்தான் எனக்குத் தெரிந்த தியான முறைகளையும், உண்மையை அறிந்துகொள்ளவேண்டும் என்ற தேடல் கொண்டவர்களுக்கான உதவிகளையும் நான் என்னால் முடிந்தவரை இவ்வளவு காலமாகச் செய்து வருகிறேன்.

இப்போது அதை உலக அளவில், அல்லது குறைந்த பட்சமாக இந்திய அளவில் கொண்டுபோகவேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகிவிட்டது. அதன்காரணமாக, எனக்குத் தெரிந்த, ஆன்மிகப் பணியிலும் தேடலிலும் என்னோடு இருந்த சிலர், ஆன்மிகத்தில் ஏற்கனவே ஆர்வமும் முயற்சியும் பயிற்சியும் பெற்ற இன்னும் சிலரின் உதவியோடு GSG தொடங்க இருக்கிறது.

இது நல்லவிதமாக வளர்வது உங்கள் கையில்தான் உள்ளது.

 • இதில் எந்தவிதமான பொருளாதார நோக்கமும் கிடையாது.
 • இது முழுக்க முழுக்க இலவசமானது.

இதன் மூலம் ஆரம்ப கட்டமாக கீழ்க்கண்ட சேவைகளைச் செய்ய எண்ணம்:

 1. ஆன்மிகத் தேடல் கொண்டவர்களுக்கு உரிய பயிற்சிகள் கொடுப்பது / Spiritual Practices to Seekers of Truth
 2. உளவியல் ரீதியான பிரச்சனைகள் கொண்டவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் கொடுப்பது / Psychological Counselling
 3. உடல் ரீதியான பிரச்சனைகள் கொண்டவர்களுக்கு (Healing without medicine)

அ) ஓதிப்பார்த்து குணப்படுத்துவது (Healing through recitations), அவர்கள் வெளிநாட்டில் இருந்தாலும் சரி, அல்லது  மயக்கத்தில் இருந்தாலும் சரி (Distance Healing and for Unconscious Patients too)

ஆ) மருந்தில்லா மருத்துவம் மூலமாக எப்படி குணமடைவது என்று சொல்லிக்கொடுப்பது (Teaching Medicineless Treatment for Cure)

இ) தேவைப்பட்டால் அவர்களை அக்யூ ஹீலர்களிடம் அனுப்புவது / Sending them to Acu Healers or Touch Healers (இதற்கு இலவச சேவை செய்ய விரும்பும் அக்யூ ஹீலர்கள் / தொடு சிகிச்சை நிபுணர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்).

 1. வாட்ஸ் அப்பில் Global Spiritual Garden என்ற பெயரில் ஒரு குழு தொடங்கியுள்ளோம். அதிலும் இதில் நாட்டமுள்ளவர்கள் உங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளலாம்.

இது ஒரு தொடக்கம்தான். இது பல்கிப் பெருகி விரிய உங்கள் ஆதரவு தேவை. இதற்குத் தேவையான அலுவலகம், வலைத்தளம், பத்திரிக்கை ஆகியவற்றையும் உருவாக்க எண்ணம் கொண்டுள்ளோம். இந்த சேவையில் நீங்களும் பங்கு கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள்

9994767681 (நாகூர் ரூமி)

9385055666 (திரு ராஜேஷ்)

9444881208 (திரு ஃபெரோஸ்கான்) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

அலைபேசி அழைப்பைத் தவிர்க்கவும்.

குறுஞ்செய்தி அனுப்பலாம்.

அல்லது வாட்ஸ் அப்பில் சொல்லலாம்.

பணம் எல்லாவற்றுக்கும் தேவையான ஒன்று என்பதில் சந்தேகமில்லை.  நாங்கள் எங்களிடம் இருப்பதைக் கொண்டு முடிந்ததையெல்லாம் செய்ய நாடியுள்ளோம். கோடி கோடியாகப் பணமிருந்தாலும் ஒரு பைசாவைக்கூட குழிக்குக் கொண்டு செல்ல முடியாது. இந்த உலகில் கிடைக்கும் சந்தோஷங்களில் மிகப்பெரியது கொடுப்பதுதான். அது பணமாக, அன்பாக, ஆதரவாக, ஒரு புன்னகையாகக் கூட இருக்கலாம். கொடுப்பவரே அதிகமாக பெற்றுக்கொள்வார் என்பதும் ஓர் ஆன்மிக உண்மையாகும்.

இதைப் புரிந்துகொண்டால் கொடுப்பதில்கூட ஒரு சுயநலம் இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்! கொடுக்காமல் வைத்துக்கொள்கிற சுயநலத்தைவிட இது கோடி மடங்கு உயர்வானது அல்லவா!

எனவே கொடுக்கின்ற மனம் கொண்டவர்கள் தாராளமாகக் கொடுக்கலாம். நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.

நாங்கள் GSG பெயரில் ஒரு கணக்கு தொடங்கும்வரை பொறுத்திருக்கலாம்.

எனது இந்த வலைத்தளத்தில் தொடர்ந்து இதுபற்றிய தகவல்களை நான் இடுவேன். அதைப் பார்த்துவிட்டு தொடர்பு கொள்ளலாம்.

பணம்தான் தரவேண்டும் என்பதில்லை.

உங்களால் முடிந்த எந்த உதவியும் செய்யலாம்.

நீங்கள் மருத்துவராக இருந்தால் இலவச மருத்துவம் பார்க்கலாம். பத்திரிக்கையாளராக இருந்தால் உங்கள் பத்திரிக்கையில் இதுபற்றிய செய்திகளை வெளியிடலாம்.

நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் அது சார்ந்த உதவிகளைச் செய்யலாம்.

சேவைக்கு எல்லையோ முடிவோ கிடையாது.

இது மனிதர்களுக்கான அமைப்பு. எல்லா மனிதர்களையும் இணைக்கும் அமைப்பு. எல்லா மனிதர்களும் இதில் பங்கு கொள்ளலாம்.

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to GLOBAL SPIRITUAL GARDEN (GSG) ஓர் அறிமுகம்

 1. Jemima says:

  Very Good effort Nana all the Very best

 2. faizy says:

  இன்ஷாஅல்லாஹ்.நிச்சயமாக என்னால் முடிந்ததை செய்ய தயாராக உள்ளென்

  • நாகூர் ரூமி says:

   உங்கள் அலைபேசி எண்ணை உங்கள் பெயருடன் எனக்கு அனுப்பவும். .

   என் எண் 9994767681

 3. V K Raman says:

  Noble initiatives. Would like to be a member and support with in my resources.

 4. MANIKANDAN.K says:

  யாக்ஞவல்கியன்
  அலைபேசி எண்: 9790612927

  • நாகூர் ரூமி says:

   நன்றி யாக்ஞவல்கியன். இன்றே இணைத்துக்கொள்கிறேன்.

 5. A.M.N.AMEEN says:

  BEST WISHES !

  AMEEN
  00971 55 8182171

 6. SIVANANDHAN says:

  Great job ,best wishes

 7. Mrs.syrabhanu says:

  அஸ்ஸலாமு அலைக்கும்.கு.சாயிராபானு.9443184377.குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலராக பணி புரிந்து வருகிறேன்.மாற்றுமுறை மருத்துவத்தில் ஆர்வமும்…ஈடுபாடும் உண்டு.இன்ஷாஅல்லாஹ்.நிச்சயமாக என்னால் முடிந்ததை செய்ய தயாராக உள்ளேன்.

  • நாகூர் ரூமி says:

   அலைக்கும் ஸலாம் சகோதரி. உங்களை GSG-ல் இன்று இணைத்துவிட்டேன். வாட்ஸ் அப்பில் உங்கள் கருத்துக்களை, ஆடியோ, வீடியோக்களையும் பகிரலாம். அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக, ஆமீன்.

 8. A.Abuthalif says:

  A.Abuthalif 9865722775,
  I am doing students motivation counselling and also giving training to speak in english .I want to join with you sir.

 9. BENAZIR says:

  Assalamu alaikkum. BENAZIR . Nan Malaysia la irukken .yengayum inanity kill a mudiyuma.0060183786612.

  • நாகூர் ரூமி says:

   அலைக்கும் ஸலாம். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லை. தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதவும்.

 10. Mohideen Abdul kader says:

  KADER
  9994430535
  8248578734

 11. Rajesh Kannan says:

  M.Rajesh kannan,
  9786846757

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s