இசை ஞானியின் அஞ்ஞானம்

IR2மகான் ரமணரைப்பற்றி இளையராஜா பேசிய ஒரு வீடியோவை எனக்கு ஒரு நண்பர் வாட்ஸப்பில் அனுப்பியிருந்தார். அதில் ரமணர் 16 வயதிலேயே இறந்து மீண்டும் உயிர் பெற்றவர் என்று இளையராஜா கூறினார். அதில் ஓரளவு உண்மையிருக்கிறது. மரணம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பி சிறுவர் / இளைஞர் ரமணர் மூச்சடக்கிப் படுத்துவிட்டார். அந்த அனுபவத்தில் அவருக்கு ஞானம் கிடைத்தது என்கிறது அவரது வரலாறு. உண்மையில் என்ன நடந்தது என்று மகான் ரமணருக்கு மட்டுமே தெரியும்.

விஷயம் அதுவல்ல. மகான் ரமணர் இறந்து மீண்டும் உயிர் பெற்றதாகவேIR வைத்துக்கொள்வோம். ஆனால் இளையராஜா பேசும்போது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்று கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் உயிர்த்தெழவே இல்லை என்று நான் சமீபத்தில் பார்த்த ஒரு யூட்யூப் வீடியோ கூறுகிறது. எனவே உண்மையில் இறந்து மீண்டும் உயிர்த்தெழுந்தவர் ரமணர்தான், ‘உண்மையான ரிசரக்‌ஷன் நடந்தது யாருக்கு என்றால் அது பகவான் ரமண மகரிஷி ஒரே ஒருவருக்குத்தான்” என்று இளையராஜா கூறினார்.

BRஅதைக்கேட்க மனசுக்கு ரொம்ப சங்கடமாக இருந்தது. சிலுவையில் அறையப்படுமுன் ஈஸா (அலை) அவர்களை இறைவன் தன்னளவில் உயர்த்திக்கொண்டான் என்பது முஸ்லிம்களுடைய நம்பிக்கை. ஆனால் ’லகும் தீனுகும் வலிய தீன்’ (உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு) என்று முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சந்தோஷமாக உறவாடிக்கொண்டு இருக்கவில்லையா என்ன? இல்லையென்றால், இளையராஜா பற்றி பாரதிராஜா ஒரு பேட்டியில் சொல்வதுபோல, ’மதம் என்பது சட்டாம்பிள்ளைத்தனம்’ ஆகிவிடுமல்லவா?

மகான் ரமணர் இறந்து மீண்டும் உயிர் பெற்றார் என்ற உங்கள் கருத்தைச் சொன்னால் போதாதா? தேவையில்லாமல் கிறிஸ்தவ உலகின் நம்பிக்கை பொய்யென்று ஏன் இளையராஜா கூறவேண்டும்? உண்மையைச் சொல்கிறாராம்!

நான் ஒரு உண்மையைச் சொல்கிறேன். இசைஞானி என்ற இளையராஜா செத்து ரொம்ப நாளாகிவிட்டது. எப்போது அவர் தன் அடிப்படையை மறந்து, ஆன்மிக பவுடர் பூச ஆரம்பித்தாரோ அப்போதே அவரது இசை சாக ஆரம்பித்துவிட்டது. இப்போதெல்லாம் அவரது இசையில் பிறந்த பாடல்களை ‘வாயில் வைக்க முடியவில்லை’! காரணம் சமீப காலமாக அவர் எடுத்துக்கொண்டிருக்கும் ஆன்மிக அவதாரம்தான் என்பது  என் கருத்து.

GAகொஞ்ச காலத்துக்கு முன் எஸ்பிபியோடு அவர் செய்த போராட்டமும் அவருக்கு சமநிலை கெட்டுவிட்டது என்பதற்காக ஆதாரம்தான். அப்படிச் சொன்னதற்காக அவரை ஒரு டிவி நேர்காணலில் அவரை வெளுத்து வாங்கும் அவரது சகோதரர் கங்கை அமரனுக்கு இருக்கும் ’காமன் சென்ஸ்’ இளையராஜாவுக்கு செத்துப்போனது துரதிருஷ்டமே.

எப்போது இசையமைத்ததற்காக நீங்கள் பணம் வாங்கிக்கொண்டுவிட்டீர்களோ, எப்போது பாடியதற்கு பாடகர் பணம் வாங்கிக்கொண்டாரோ அப்போதே அந்த இசையோடும் பாடலோடும் உங்கள் கணக்கும் உறவும் முடிந்துவிட்டது. அது மக்கள் சொத்தாகிவிட்டது. அதுகூடப் புரியாமல் என் இசை, நான் பாடிய பாடல் என்று எப்போது குடுமிச் சண்டை போட ஆரம்பித்தீர்களோ, அப்போதே உங்கள் இசைப்பரிமாணம் செத்துவிட்டது.

ஏ.ஆர்.ரஹ்மான் மேலே மேலே போய்க்க்கொண்டிருப்பதற்குக் காரணம் அவர் பொதுவாக அதிகம் பேசுவதே இல்லை!  அப்படியே பேசினாலும் யாரைப்பற்றியும் குறை கூறுவதில்லை. எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றுதான் அடிக்கடி கூறுகிறார். அவர் புகழ் ஓங்கிக்கொண்டே இருக்கிறது. அந்த மௌனத்தில் உங்களுக்கான பாடம் இருக்கிறது முன்னால் இசைஞானி அவர்களே!

“முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்டதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே முஸ்லிம்களில் சிறந்தவர் என்று பதில் சொன்னார்கள் என்று நபிமொழிகள் உள்ளன. நாவால்கூட  அடுத்தவரை காயப்படுத்தாமல் இருப்பதை  நபிமொழிகள் வலியுறுத்துகின்றன.

உண்மைகள் முக்கியம்தான். ஆனால் உணர்வுகள் அதைவிட முக்கியம். ஒருவர் முட்டாளாக இருக்கலாம். ஆனால் பலர் முன்னிலையில் நீ ஒரு முட்டாப்பய என்று அவரைத்திட்டிவிட்டு, நான் உண்மையைத்தானே சொன்னேன் என்று சொல்வது நாகரீகமாகுமா?

இதைநான் ஒரு உதாரணத்துக்காகத்தான் சொல்கிறேன். உண்மையில் முட்டாள் என்று ஒரு பிரிவோ, அறிவாளி என்று ஒரு பிரிவோ உலகில் கிடையாது. எல்லாருமே முட்டாள்தான். எல்லாருமே அறிவாளிதான். ஒவ்வொரு துறையில். எல்லாவற்றிலும் எல்லாரும் அறிவாளியாகவோ முட்டாளாகவோ இருப்பதில்லை.

இன்னொரு மதத்தினரின் நம்பிக்கை முட்டாள்தனமானது, அதில் உண்மையில்லை என்று சொல்லும் ஒருவர் எப்படி அறிவாளியாக இருக்க முடியும்?

’அறிவாளி’ என்பதற்கும் ’அறிவிலி’ என்பதற்கும் இடையில் உள்ள தூரம் மிகமிகக் குறைவுதான்! முன்னாள் இசைஞானி இளையராஜாவின் இந்த வீடியோ பதிவு அதற்கு நல்ல உதாரணம்!

Oh Lord, forgive them, for they know not what they do.

 

 

This entry was posted in Articles /கட்டுரை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to இசை ஞானியின் அஞ்ஞானம்

 1. Pingback: இசை ஞானியின் அஞ்ஞானம் – TamilBlogs

 2. கோபால் மனோகர் says:

  இளையராஜாவின் கருத்தை விமர்சிக்கலாம். சரிதான். ஆனால் அதைத் தாண்டி உங்கள் எழுத்தில் மோசமான துவேசமும் தனிப்பட்ட வெறுப்பும் கொப்பளிக்கிறதே ! ‘தன் அடிப்படையை மறந்து’என்றால் என்ன பொருள் ?அவர் பிறப்பை பற்றிய விமர்சனமா ? ‘ இசைஞானி என்ற இளையராஜா செத்து ரொம்ப நாளாகிவிட்டது’ என்பது உங்களுடைய இன்னொரு கேவலமான கமெண்ட். ‘நாவால் கூட அடுத்தவரை காயப்படுத்தக் கூடாது’ என்பது இதுதானோ ???? ‘கற்றபின் நிற்க அதற்கு த் தக’ என்று வள்ளுவர் சொன்னது உங்களை போன்ற அறிஞர்களுக்குத் தான் !

  ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் ரூமி அவர்களே. இளையராஜா தன் இசையால் எவரும் எட்ட முடியாத உயரங்களை தொட்டு விட்டவர். என்னைப்
  போல எத்தனையோ கோடி சாமானிய மனிதர்களுக்கு ஒவ்வொரு நாளும் அவர் இசையுடனே தொடங்குகிறது, அவர் இசையுடனே முடிகிறது !

  எவராலும் அவருடைய சாதனைகளை சிறுமைப் படுத்திவிட முடியாது. அப்படியான முயற்சிகளில்இறங்கி உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள் !

  • நாகூர் ரூமி says:

   அன்பு மனோகர் அவர்களுக்கு, நானும் இளையராஜாவின் ரசிகன்தான். யாருடைய பிறப்பப் பற்றியோ ஜாதி பற்றியோ பேசுகின்ற அளவுக்கு நான் என்றுமே மோசமாக சிந்திக்கமாட்டேன். அவரது அடிப்படை இசை. அதைவிட்டுவிட்டு அவர் ஆன்மிகம் என்று கூத்தடிப்பதுதான் அவரை ஒரு காமடியனாக்கி, அவரது இசையை சாகடித்துவிட்டது. இன்று அவர் இசையமைக்கும் பாடல்களை யாராலும் ரசிக்க முடியவில்லை. இசைஞானி என்ற இளையராஜா நிச்சயமாக கடந்த காலத்துக்கு உரியவரே. இதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அவரை நான் சிறுமைப்படுத்தவில்லை. அவரே அக்காரியத்தைச் செய்துகொள்கிறார்! ரசனை உங்களை அறிவை மழுங்கடித்துவிட்டது என்று நினைக்கிறேன்.

 3. கோபால் மனோகர் says:

  நன்றி ஐயா. நலமே சூழட்டும்.

 4. நாகூர் ரூமி says:

  மெட்டி ஒலி காற்றோடு,பூ மாலையே தோள் சேரவா போன்ற பாடல்களை இனி இளையராஜாவால் நிச்சயமாகக் கொடுக்க முடியுமா நண்பர் மனோகர் அவர்களே? உங்களைப் போலவே எனக்கும் வருத்தம்தான். இளைய ராஜாவுடைய பங்களிப்பு இசைக்கு எப்படிப்பட்டது என்று நான் ஏற்கனவே ஒரு விரிவான கட்டுரை எழுதியிருக்கிறேன். அதைப் படித்தால் நானும் உங்களைப்போன்ற இளையராஜா ரசிகன் தான் என்பது உங்களுக்குப் புரியும். நல்லது.

 5. Nahvi says:

  Do men gather grapes of thorns, or figs of thistles?
  Every good tree will bear the good fruits.
  By the fruits Ye shall find them.
  Matthew 7:16

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s