பாதி சதம் — நலம் நலமறிய ஆவல்

Nalam Nalamariyaஒருவழியாக எனது ஐம்பதாவது நூலான நலம் நலமறிய ஆவல் வெளிவந்துவிட்டது! தினமணி.காம் இல் ஒரு வருஷமாக வந்துகொண்டிருந்த ஆரோக்கியம் தொடர்பான அத்தொடர் தினமணியின் வெளியீடாகவே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. Pinnaclebooks என்ற பெயரில் அவர்களே ஒரு பப்ளிகேஷன்ஸ் டிவிஷன் தொடங்கியுள்ளனர். அதில் ஆரம்ப கட்டமாக மூன்று நூல்களை மட்டும் கொண்டு வந்துள்ளனர். ஒன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றியது. இன்னொன்று ஆச்சரியமூட்டும் அறிவியல் உண்மைகள் என்ற நூல். மூன்றாவது நான் எழுதிய இந்த நூல்.

இந்த நூலை உருவாக்க நான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எனக்கே வியப்பூட்டுகின்றன. என் மூலமாக மனித சமுதாயத்துக்கு, குறிப்பாக தமிழ் சமுதாயத்துக்கு என் மூலமாக வெளியான ஒரு சேவை என்றே இதை நான் கருதுகின்றேன். இறைவனின் நாட்டம் அப்படி இருந்துள்ளது. இதைப்படித்துப் பயன்பெறும் ஒவ்வொரு ஆன்மாவின் இதயமும் எனக்காகப் பிரார்த்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் நானும் நண்பர் காசிம் அவர்களும் சென்று நேரில் சில பிரதிகளைப் பெற்றுக்கொண்டோம்.

20180530_175143தினமணியின் ஜென்ரல் மேனேஜர் அவர்களையும் சந்தித்தோம். Pinnaclebooks.in என்ற வலைத்தளத்திலும் சென்று நூல்களைப் பெறலாம். ஆனால் நான் போய்ப்பார்த்ததில் வலைத்தளம் இப்போதுதான்  உருவாகிக்கொண்டிருக்கிறது. ஜெயலலிதா பற்றிய நூல் ஒன்றை மட்டும்தான் இப்பொது அதன் மூலமாக வாங்க முடியும் என்று தெரிகிறது. இன்னும் அது update ஆகவில்லை. வெகு விரைவில் ஆகிவிடும் என்று நினைக்கிறேன்.

20180530_180926நலம் நலமறிய ஆவல் புத்தகம் சென்னையின் எல்லா முக்கியமான புத்தகக் கடைகளிலும் கிடைக்கும் என்று தினமணி டாட்காமின் ஆசிரியர் நண்பர் திரு பார்த்தசாரதி சொன்னார்.

இதுவரை ஐம்பது நூல்கள் ப்ரிண்ட்டிலும் 15 நூல்கள் EBook வடிவிலும் வந்துள்ளன. அல்ஹம்துலில்லாஹ்.

நலம் நலமறிய ஆவல் தொடரை வெளியிட்டு நூலாகவும் கொண்டுவந்துள்ள நண்பர்  தினமணி டாட்காமின் ஆசிரியர் திரு பார்த்த சாரதி அவர்களுக்கும், படித்து விட்டு எனக்கு அவ்வப்போது தன் எழுத்துக்களாலும் பேச்சாலும் உற்சாகமூட்டிய துணை  எடிட்டர் சகோதரி உமா சக்திக்கும், காதல் கோட்டை படத்தின் பாடலை தலைப்பாக வைக்க ஆத்மார்த்த அனுமதி கொடுத்த நண்பர் காதல் கோட்டை பய இயக்குனர் நண்பர் அகத்தியன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

அன்புடன்

நாகூர் ரூமி

This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

1 Response to பாதி சதம் — நலம் நலமறிய ஆவல்

  1. Pingback: பாதி சதம் — நலம் நலமறிய ஆவல் – TamilBlogs

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s