இலக்கியம், இசை என்று ஆரம்பத்தில் இயங்கிக்கொண்டிருந்த நான் கொஞ்ச காலமாக மதம் சார்ந்தும், சாராமலும் உள்ள ஆன்மிகத்தை வாசித்துக்கொண்டும் சுவாசித்துக்கொண்டும் இருக்கிறேன். இதுவே என் இறுதிவரை தொடரும் என்பதையும் உணர்கிறேன். எனக்கு அரசியலில் எப்போதுமே ஆர்வம் இருந்தது கிடையாது. ஆனாலும் கலைஞரை ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்குக் காரணம் அவரது பன்முக ஆளுமை. குறிப்பாக இலக்கிய ஆளுமை. சுட்டிச் சொல்லவேண்டுமெனில் திருக்குறளுக்கான அவரது விளக்க உரைகள். தான் கொண்ட இறைமறுப்புக் கருத்துக்கும் குந்தகம் …