ஹீலர் பாஸ்கர் அவர்கள் என் நண்பர். ஆங்கிலத்தில் eye-opener என்று சொல்வார்களே அந்த வகையைச் சேர்ந்தவர். மிகமிக எளிமையானவர். திறந்த மனதுக்குச் சொந்தக்காரர். மனித உடலின் மகத்துவம் பற்றி அனாடமிக் தெரபி என்ற பெயரில் பல உண்மைகளை எளிமையாகப் புரிய வைத்தவர். (இந்த பெயரில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறுவிஷயம். இதற்கு ‘செவி வழி தொடு சிகிச்சை’ என்று சொதப்பலான தமிழாக்கம் வேறு!). ஆண்டவன் படைத்த உடல் எவ்வளவு அறிவுப்பூர்வமாகச் செயல்படுகிறது, எப்படி ஒரு நோயை அதுவே …