ஹீலர் பாஸ்கர் அவர்கள் என் நண்பர். ஆங்கிலத்தில் eye-opener என்று சொல்வார்களே அந்த வகையைச் சேர்ந்தவர். மிகமிக எளிமையானவர். திறந்த மனதுக்குச் சொந்தக்காரர். மனித உடலின் மகத்துவம் பற்றி அனாடமிக் தெரபி என்ற பெயரில் பல உண்மைகளை எளிமையாகப் புரிய வைத்தவர். (இந்த பெயரில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறுவிஷயம். இதற்கு ‘செவி வழி தொடு சிகிச்சை’ என்று சொதப்பலான தமிழாக்கம் வேறு!).
ஆண்டவன் படைத்த உடல் எவ்வளவு அறிவுப்பூர்வமாகச் செயல்படுகிறது, எப்படி ஒரு நோயை அதுவே தீர்த்துக்கொள்கிறது, அதற்கு உதவி செய்யும் பொருட்டு நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், மருந்துகள் மாத்திரைகள், உடல் உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் நீக்குதல் போன்ற செயல்கள் நம் உடலுக்கு எப்படி எந்த அளவுக்கு ஊறு விளைவிக்கும், உடலே உடலை எப்படி குணப்படுத்திக்கொள்கிறது – இப்படிப் பல விஷயங்களை அவர் தனது ஆடியோ வீடியோக்கள் மூலம் உலக மக்களுக்கு அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார்.
எல்லாமே அவரது அனுபவம் சார்ந்தவையாகவும் இருப்பது அவற்றின் சிறப்பு. அவரது எல்லாக் கருத்துக்களையும், எல்லாச் செயல்பாடுகளையும் நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்று சொல்ல முடியாது. சில விஷயங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதேபோல என் கருத்துக்களிலும் அவருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் நாங்கள் அனைவருமே உண்மை என்று உணர்ந்து கொண்டதைத்தான் எழுத்து மூலமாகவும் பேச்சு மூலமாகவும் மக்கள் மத்தியில் பகிர்ந்துவருகிறோம்.
சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்த்துக்கொள்வது எப்படி என்று ஒரு நிகழ்வை அவர் நிறைவேற்ற இருந்ததை அறிந்துகொண்ட அலோபதி உலகம் தொடர்ந்து அப்படி நடக்குமானால் அது தங்களது வணிகத்தை பாதிக்கும் என்பதால் முறையான தகுதி இல்லாமல் அவர் அக்காரியத்தில் இறங்கியுள்ளதாகச் சொல்லி அவரைக் கைது செய்ய வைத்துள்ளனர்.
கைது செய்யப்படுபவர்களெல்லாம் தவறு செய்தவர்களுமல்ல. சுதந்திரமாக உலவிக்கொண்டு இருப்பவர்களெல்லாம் உத்தமர்களும் அல்ல என்பது நமக்குத் தெரியும்.
அதோடு தடுப்பூசி போடுவதைத் தடுக்கிறார்கள் என்ற குரலும் எழுந்துள்ளது. தடுப்பூசி கட்டாயமில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். தடுப்பூசி கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்பு பிறந்த குழந்தைகளெல்லாம், நம் தாத்தா பாட்டிகளெல்லாம், நம்மைவிட ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்பதுதான் நிஜம். போகட்டும்.
கைது செய்யத் தூண்டியவர்கள் அல்லது அதன் பின்னால் இருந்தவர்கள் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்த்ததால் ஏற்பட்ட ஒரு சில மரணங்களைக் காரணம் / உதாரணம் காட்டுகிறார்கள். ஆனால் மருத்துவமனைகளில் எத்தனையோ பிரசவ மரணங்கள் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன. அதற்காக எந்த மருத்துவரும் இதுவரை கைது செய்யப்பட்டதில்லையே?! ‘அம்மாவையோ அல்லது குழந்தையையோ, இருவரில் ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும்’ என்று எத்தனை திரைப்படங்களில் சீரியல்களில் நாம் ’டயலாக்’கைக் கேட்டிருக்கிறோம்!
வீட்டிலேயே மருத்துவம் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லைதான். ஆனால் அதற்காக அப்படிச் செய்வது குற்றம் என்று என்னால் சொல்லமுடியவில்லை. அவசர காலத்தில் இன்றைய ஆங்கில மருத்துவ உலகத்தின் உதவி உயிரைக் காப்பாற்றக் கூடியதாக உள்ளதை நான் மறுக்கவில்லை. எல்லா விஷயங்களைப் பற்றிய தெளிவு இருந்தால் மட்டுமே ஒருவர் ஆங்கில மருத்துவ உதவியை நாடாமல் இருக்க முடியும். ஒரு குழந்தை சீரியஸான நிலையில் இருக்கும்போது ஒரு ஹீலரை அழைத்து ’டச்’ கொடுக்கலாம் என்று எந்த தாயும் / தகப்பனும் நினைக்க முடியாது.
ஒரேயடியாக ஆங்கில மருத்துவ உலகின் உதவி தேவையே இல்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் மாத்திரை மருந்துகள் ஊசிகள் அறுவை சிகிச்சைகள் எதுவும் தேவையில்லை என்பதுதான் என் கருத்தும்.
ஆங்கில மருத்துவம் தோன்றாத, வளராத ஒரு காலகட்டம் இருந்தது. அதில் வாழ்ந்தவர்களெல்லாம் நம்மை விட ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். மருந்து மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருள்கள் உடலுக்கு நன்மை செய்வதே இல்லை, மாறாகப் பெரும் தீங்கைத்தான் விளைவிக்கின்றன என்று உலகப்புகழ் பெற்ற மருத்துவர்களான டாக்டர் பி.எம்.ஹெக்டே, டாக்டர் தீபக் சோப்ரா போன்றவர்களே விலாவாரியாகப் பேசியும் எழுதியும் உள்ளனர்.
ஐந்து ஆண்டுகள் ஆங்கில மருத்துவக் கல்லூரியில் படித்துவிட்டு ஒரு ஆண்டு மருத்துவமனை அனுபவம் பெற்றுவிட்டால் மனித உடலை முற்றிலுமாக அறிந்துவிட்ட ஒரு மருத்துவ ஞானியாக, ஒரு ஹிப்பாக்கிரேடஸாக, ஒரு இப்னு சீனாவாக யாரும் மாறிவிடுவதில்லை. மாறாக நமக்கு மருந்துகளைக் கொடுத்து பரிசோதித்து பரிசோதித்துத்தான் அவர்கள் அனுபவம் பெறுகிறார்கள்! இதுதான் நிதர்சனம்.
எனவே ஹீலர் பாஸ்கரை கைது செய்ய வைத்தது தொழில் ரீதியான பொறாமையின் விளையேயன்றி வேறில்லை. இன்று ஆயிரக்கணக்கான ஹீலர்கள் வந்துவிட்டார்கள். டாக்டர் என்று சொல்லப்படுவதையே வெறுப்பதனால்தான் அவர்கள் தங்களை ஹீலர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்!
மனசாட்சியும் விபரமும் தெரிந்த மனிதர்கள் ஹீலர் பாஸ்கருக்கு உதவட்டும். அவர் விரைவில் வெளிவந்து தன் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்.
உண்மை சார். எது சரி, எது நல்லது, எவை ஆரோக்கியம் தரும் செயல்கள், எதெல்லாம் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என தெரியாமல் தடுமாறும், அலைபாயும் மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக பல நல்ல தகவல்களை இவர் போல பலர் தந்து கொண்டு உள்ளனர்.
“பல நல்ல விஷயங்களை அவர் தனது ஆடியோ வீடியோக்கள் மூலம் உலக மக்களுக்கு அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார்.”
இதுவரை இவர் செய்திகளால் பலர் நன்மைகள் பெற்றதைத்தான் கேள்விப்பட்டுள்ளோமே தவிர பாதிப்படைந்ததாக இல்லை. திருவள்ளுவரையும் திருமூலரையும் முன்னோர்கள் வைத்தியத்தையும் சுட்டி காட்டி கூறப்படும் தகவல்களில், குற்றம் குறை கூற வாய்ப்பு தேடாமல், நல்லவைகளை கண்டு கடைப்பிடிப்பதில் தவறென்ன!
“நாங்கள் அனைவருமே உண்மை என்று உணர்ந்து கொண்டதைத்தான் எழுத்து மூலமாகவும் பேச்சு மூலமாகவும் மக்கள் மத்தியில் பகிர்ந்துவருகிறோம்”
“கைது செய்யப்படுபவர்களெல்லாம் தவறு செய்தவர்களுமல்ல. சுதந்திரமாக உலவிக்கொண்டு இருப்பவர்களெல்லாம் உத்தமர்களும் அல்ல”
“மனசாட்சியும் விபரமும் தெரிந்த மனிதர்கள் ஹீலர் பாஸ்கருக்கு உதவட்டும். அவர் விரைவில் வெளிவந்து தன் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்”.
மக்களை முட்டாள்களாகவே வைத்துக் கொண்டு மாத்திரை மருந்து வியாபாரம்செய்து கொள்ளையடிக்கும் ஆங்கில மருத்துவ ஏகாதிபத்தியத்தின் சதி வலையிலிருந்து ஐயா பாஸ்கர் நிச்சயம் மண்டு வருவார்
திரு நாகூர் ரூமி அவர்களுக்கு என் நன்றிகள் .நானும் ஹீலர் பாஸ்கர் அவர்களின் அனைத்து காணொளிகளையும் பார்த்துள்ளேன்.ஹீலர் பாஸ்கர் குறித்த வினவு தளத்தின் அறியாமையோடு கூடிய கட்டுரைகளுக்கு என் மறுப்பை தொடரந்து தெரிவித்து வருகிறேன் . உங்களை போன்ற ஹீலர் பாஸ்கரின் நண்பர்கள் இவ்வேளையில் அவருக்கு உதவ வேண்டுகிறேன்.
என் வலைப்பூவின் முகவரி: http://saravananmetha.blogspot.com/2018/07/blog-post_27.html
(வினவு இணையத் தள கட்டுரைக்கு மீண்டும் என் மறுப்புரை)
எனக்கு தற்போது நாற்பத்தி இரண்டு வயதாகிறது.
1980 – 1986 கால கட்டத்தில் எங்கள் குடும்பம் என் தந்தையின் பணி நிமித்தமாக மணப்பாறை நகரத்தில் குடியிருந்தது.
அப்பொழுது நான் 5-ம் வகுப்பு படிக்கும் போது மஞ்சள்காமாலை நோயால் பாதிக்க பட்டேன்.
என் தந்தை என்னை ஆங்கில மருத்துவர் திரு லட்சுமி நாராயணன் அவர்களிடம் அழைத்து சென்றார்.
அவர் மருந்து சீட்டை எழுதி தந்தபின் சாப்பாட்டில் (எண்ணெய் சேர்க்காமல்) இருக்க வேண்டிய கட்டுப்பாடுகளை சொன்னார்.
பின்பு என் தந்தை , மருத்துவரிடம்
டாக்டர் இந்த கீழாநெல்லி இலையை மஞ்சள்காமாலைக்கு
தரலாமின்னு சொல்ராங்களே ?
உங்க கருத்து என்ன டாக்டர் என்று கேட்டபோது ,
தாராளமா கொடுங்க! இந்த மாத்திரையே அந்த கீழா நல்லியில் இருந்து தயாரிச்சதுதான் என்றார்.
அய்யா! அவர் MBBS படிச்ச ஆங்கில மருத்துவர் தான்.
மருத்துவத்தை சேவையாய் செய்த மாமனிதர்.
அதனால்தான் உண்மையை வெளிப்படையாக கூறினார்.
மணப்பாறையை ஒட்டியுள்ள பல பட்டிதொட்டிகளுக்கு (குக்கிராமங்களுக்கு) மணப்பாறைதான் சிட்டி.
அந்த ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவே வைத்தியம் பார்த்த மாமனிதர் அவர்.
என் தந்தை போன்ற (அரசு பணியாளர்) நடுத்தர வர்க்கத்திடம் மட்டும் மிக குறைவாக 5 ரூபாய் வாங்கிக்கொள்வார்.
ஏழைகள் என தெரிந்தால் இலவச மருத்துவமே.
மக்கள் பணியே மகேசன் பணி என வாழ்ந்த அவர் தற்போது “மருத்துவமாமணி” என்ற பட்டதோடு மார்பளவு சிலையாக மாரியம்மன் கோயில் அருகில் இருக்கிறார்.
ஆங்கில மருத்துவர் திரு லட்சுமி நாராயணன் கீழாநெல்லி தருவதை அறிவியலுக்கு புறம்பானது என்று தீர்ப்பிடவில்லை.
ஹீலர் பாஸ்கர் அவர்கள் சொல்வது அனைத்தும் அறிவியல் அடிப்படையே.
உடல் கூற்றியல் நூல்களின் சாரத்தையே தன் சொற்பொழிவாக மக்களுக்கு தந்துள்ளார்.
பார்க்க: https://www.dailymotion.com/search/healer%20baskar%20a
மீண்டும் மீண்டும் ஹீலர் பாஸ்கரை மூடர் என்றும், பித்தலாட்டக்காரர் என்றும் கூறுவது கண்டிப்பாக உள்நோக்கம் கொண்டதே.
ஹீலர் பாஸ்கர் சொல்லும் healing therapy ஆக இருந்தாலும் , மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் பிரசவம் ஆனாலும் தகுந்த பயிற்சி பெறாமல் செய்வது ஆபத்தில்தான் முடியும்.
திருப்பூர் சகோதரி கிருத்திகா விஷயத்தில் அவரின் கணவர் முழுமையாக
பயிற்சி பெறாமல் அரைகுறை அறிவோடு பிரசவம் பார்த்ததே சோக முடிவிற்கு காரணம்.
அந்த உடன்பிறவா தங்கையை நினைத்து என் மனம் கண்ணீர் வடிக்கிறது
இனி இதுபோல் ஒரு சோகம் நடக்க கூடாது என்பதே என் நிலைப்பாடு.
இந்த நேரத்தில் இன்னொரு கேள்வியையும் உங்கள் முன் வைக்கிறேன்.
அண்மையில் என் தந்தைக்கு பல் சொத்தை உபாதை காரணமாக பல் மருத்துவரிடம் அழைத்து சென்றேன்.
பல் பிடுங்கிய பின் அந்த மருத்துவர் சொன்னார் :
அப்பாடா ! இப்பதான் Relax ஆ இருக்கு சரவணன்!
இந்த குறிப்பிட்ட கடவாய் பல்லோட வேர்
இதய நாளங்களோட சம்பந்த பட்டது . நல்ல வேலை, நல்லபடியா முடிச்சது
பல நேரங்களில் இந்த பல்ல பிடுங்கும் போது மாரடைப்பு வந்துரும்
Now Uncle Is Safe
இதுல இருந்து என்ன தெரியுது ?
ஆங்கில மருத்துவம் என்றாலும் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் சிகிட்சையின் போது அதன் தொடர் புடைய வேறு உறுப்பு பாதிப்பு அடையலாம்.
அந்த RISK உடன்தான் வைத்தியம் நடக்கிறது. அறுவை சிகிச்சையின் போது
உறவினரிடம் கையெழுத்து வாங்குவது இதனால்தான்.
ரொம்ப நன்றி, சந்தோஷம் சரவணன்.
Jaaliya Jeyikkalam, Vaanga Students Book where can i get sir ?
kindly help
Kizhakku Pathippagam
மிக நன்றாக சொல்லி இருந்தீர்கள்…எல்லோரின் பிரார்த்தனை போல், healer பாஸ்கர் அவர்களும் வெளியே வந்து விட்டார்….மிக்க நன்றி