சகோதரர் மொழிப்பிரியன் அவர்களது மகனார் அக்ரம் இருநூறு மொழிகளில் அறிந்து வைத்திருக்கிறார், அம்மொழிகளில் டைப் செய்யவும் அவரால் முடியுமென்பதை நான் நேரில் சென்று அறிந்துகொண்டேன். அவரைப் பற்றிய பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் யூட்யூபில் காணக்கிடைக்கின்றன. மொழிப்பிரியனின் வீட்டுக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது, எப்போதிலிருந்து மகனுக்கு மொழிகள் பற்றிய அறிவை ஏற்படுத்த முயன்றீர்கள் என்று கேட்டபோது அவர் அம்மாவின் வயிற்றில் இருந்தபோதே என்று அவர் சொன்னது எங்களுக்கு ஆனந்தமான ஆச்சரியம் கொடுத்தது. கருவில் இருக்கும் குழந்தை மிக விரைவாகக் கற்றுக்கொள்ளும் …