சீர்காழி தாஜ் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது மறைந்த கவிஞர் ஜஃபருல்லாஹ் நானா. இந்த அறிமுகம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று நினைக்கிறேன். பின்னர் தாஜ் எனக்கு மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவராகிப் போனார். ஒன்று சீர்காழியில் நான் அவர் வீட்டுக்குப் போவேன். அல்லது அவர் திருமுல்லைவாசலுக்கு என் மனைவி வீட்டுக்கு வருவார். (அது நான் வேலை தேடிக்கொண்டு மனைவி வீட்டில் இருந்த காலம்)! ஒரு ஃபோன் செய்தால் போதும் நாகூருக்கும் வந்து என்னைப் பார்ப்பார். அவ்வளவு …