நன்மை செய்யும் கிருமிகள்

தடுப்பூசி பற்றி சொல்லப்படுவது சரிதான். எல்லாத் தடுப்பூசிகளிலும், அது போலியோ ட்ராப் ஆனாலும், எந்த நோயைத் தடுக்க வேண்டுமோ அந்த நோய்க்கிருமிகளைத்தான் குற்றுயிரும் கொலையுயிருமாய் உடலுக்குள் அனுப்புவார்கள்.

வித்தியாசமான வைரஸ் உடலுக்குள் வந்ததும் உடலின் எதிர்ப்பு சக்தி விழிப்படைந்து அதைத்தாக்கிக் கொன்றுவிடும்.

எதிர் காலத்தில் அந்த வைரஸ் வீரியமான தாக்குதலை நிகழ்த்த வரும்போது, வந்தால், அடடே ஏற்கனவே வந்தவனாச்சே இவன் என்று அதை மீண்டும் தாக்கி அழித்துவிடும் என்பது இந்த தடுப்பூசிகளின் பின்னால் உள்ள விஞ்ஞான தத்துவம்.

ஆனால் இது தேவையற்ற வேலை. ஏனெனில் இப்போது உடலுக்குள் அனுப்பப்படும் வைரஸ் உடலுக்குப் புதுசுதானே? இவன் நம்ம ஆள் இல்லை என்று அது எப்படி அடையாளம் கண்டு கொல்கிறதோ, அதேபோல உண்மையிலேயே அந்த வைரஸ் தாக்கினாலும் அப்படித்தானே செய்யும்?

நம்முடைய உடலின் எதிர்ப்பு சக்தியை முன்கூட்டியே நாம் தயார்ப்படுத்த வேண்டிய அவசியமென்ன?

அதோடு தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், எதிர்காலத்தில் உண்மையிலேயே அந்த நோய்க்கிருமி தாக்கும்போது, அந்த உடலின் எதிர்ப்பு சக்தி, நம் தவறான வாழ்க்கை முறையின் காரணமாக, ஆற்றல் குறையுடையதாக மாறியிருக்குமானால், அப்போதும், அதாவது தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தபோதும், அந்த நோய்க்கு நிச்சயம் நாம் பலியாகிவிடுவோம்.

தடுப்பூசி தத்துவமானது உள்ளார்ந்த குறையுடையது.

நிற்க, மாஸ்க் அணிந்து கொள்வதால் எந்தக் கிருமியையும் தடுக்க முடியாது. ஏனெனில் ஒரு ஊசியின் முனையில் ஆயிரக்கணக்கான கிருமிகள் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்கும்.

பாக்டீரியாவையாவது மைக்ராஸ்கோப் வழியாகப் பார்க்க முடியும். ஆனால் ஒரு வைரஸை அப்படிப் பார்க்க முடியாது. ஏனெனில் அது அவ்வளவு சின்னது. மாஸ்க்கின் இடையில் இருக்கும் இடுக்குகள் வழியாக ஆயிரம் கிருமிகள் உள்ளே நுழையலாம்.

உதாரணமாக ஒரு போலியோ வைரஸின் குறுக்களவு 30 நானோமீட்டர்கள். அதாவது ஒரு மில்லிமீட்டரைவிட ஒரு மில்லியன் சின்னது. அதாவது பத்து லட்சம் மடங்கு சின்னது.

தும்மும்போது கிருமி பரவாமல் இருக்க வேண்டுமானால் மாஸ்க் உதவலாம். அதற்கு தும்மும்போது ஒரு கைக்குட்டையால் அல்லது கையால் மூடிக் கொண்டு தும்மினாலும் போதும்.

மாஸ்க், சானிடைசர் போன்ற சமாச்சாரங்களெல்லாம் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற எண்ணத்தை உளவியல் ரீதியாக நமக்கு ஏற்படுத்த மட்டுமே உதவும். அதுவும் மனநிலை பலவீனமானவர்களுக்கு.

உங்கள் எதிர்ப்பு சக்தி நன்றாக இருக்கும் பட்சம் கிருமிகளால் உண்மையில் நோய் பரவுவதில்லை.

பெட்டன்கோஃபர் என்ற விஞ்ஞானி லூயி பாஸ்டரின் கருத்துக்கு எதிராக, கிருமிகளால் நோய் பரவுவதில்லை என்பதை நிரூபிக்க ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஒரு பாட்டில் நிறைய காலரா பாக்டீரியாவைக் குடித்துக் காட்டினார்! ஆனால் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை! Dr Petten Kofer என்று இணையத்தில் உள்ளிட்டுப் பார்க்கலாம்.

கொஞ்சம் இறைச்சியை ஒரு தட்டில் கொஞ்ச நேரம் அல்லது ஒரு நாள் காற்றுப்படும்படி வைத்தார் லூயி பாஸ்டர். அது கெட்டுப்போனது. அதற்குக் காரணம் கிருமிகள் என்று கூறினார்.

அவரது காலத்தில் வாழ்ந்த இன்னொரு விஞ்ஞானியான பிசாம்ப் (Bechamp) அதே சோதனையை மீண்டும்செய்து காட்டினார். ஒரு இறைச்சித் துண்டை காற்றுப்புகாத குடுவையிலும், இன்னொன்றை காற்றுப்படும்படி வெளியிலும் வைத்தார். இரண்டுமே கெட்டுப்போனது!

ஆனால் லூயி பாஸ்டர் ஃப்ரான்ஸ் மன்னனுக்கு வேண்டியவராக இருந்ததால் அவரது கருத்து உடனே ஏற்றுக்கொள்ளப்பட்டு பரப்பட்டது.

“ஊசி போடுதல், மாத்திரை விழுங்குதல், மருந்து அருந்துதல் போன்றவை ‘நச்சு சிகிச்சை’ என்றும், அவை ’நோயின் அடையாளங்களை நீக்கிவிடுதல்’ மட்டுமே என்றும் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூலில் தமிழ்வாணன் கூறுகிறார்.

Germs, Angels or Devils என்ற தலைப்பில் நான் மைக்ரோபயாலஜி மாணவிகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன் பவர் பாய்ண்ட் ப்ரெசெண்டேஷன் கொடுத்துள்ளேன். அதில் கிருமிகள் என்பவை உண்மையில் Angels என்பதை விஞ்ஞானப்பூர்வமாக எடுத்துக்காட்டியுள்ளேன்.

25 Bacteria Facts That Might Make You Feel Dirty என்றொரு வீடியோ யூட்யூபில் உள்ளது. போய்ப்பாருங்கள். அதில் சொல்லப்பட்டவற்றிலிருந்து கொஞ்சம்:

25. சாதாரண மேஜையில் கக்கூஸில் இருப்பதைவிட 400 மடங்கு அதிகமாம பாக்டீரியாக்கள் உள்ளன.

24. மழைநீர் பிரத்தியேகமான வகையில் வாசம் அடிப்பதற்குக் காரணம் அதில் கலந்துள்ள பாக்டீரியாதான்.

23. நாம் பயன்பத்தும் அலைபேசிகளில் நம் கழிவறையிலிருப்பதைவிட 18 மடங்கு அதிகமான பாக்டீரியா உள்ளது.

22. நம் ஒவ்வொருவரின் தொப்புளிலும் 1458 வகையான பாக்டீரியாக்கள் எப்போதும் உள்ளன!

21. நம்முடைய வியர்வை லேசான தூர்நாற்றமடிப்பதற்குக் காரணம் அதில் கலந்துள்ள பாக்டீரியாதான்.

20. சுத்தமான ஒரு பல்லில், ஆமாம் ஒவ்வொரு பல்லிலும், 1000லிருந்து லட்சம் பாக்டீரியாவரை இருக்கின்றன.

19. நம் குழந்தைகள் சாப்பிடும் சாக்லேட்டுகளில் பாக்ரீடியா உள்ளது. உண்மையில் அவை பற்சிதைவு ஏற்படாமல் காப்பாற்றுகின்றன.

18. எல்லா நீர்க்குழாய்களிலும் ஆறு மாதத்தில் பாக்டீரியாக்கள் உருவாகிவிடும்.

19. ஹேர்ஸ்ப்ரே-க்களில் ஒருவிதமான பாக்டீரியா உருவாகிறது.

18. நாம் பயன்படுத்தும் பணத்தில் — ரூபாய், டாலர் முதலியன — 3000 வகையான பாக்டீரியாக்கள் உள்ளன.

17. இது ரொம்ப முக்கியமானது. ஆமாம். நாம் முத்தமிடும்போது — அது காதல் முத்தமோ, கசமுசா முத்தமோ, பாச முத்தமோ – 10 மில்லியனிலிருந்து 01 பில்லியன் பாக்ரீரியாக்கள் உருவாகின்றன! [ஐயையோ அப்படினால் நான் இனி முத்தமிடமுடியாதா என்று யாரும் கேட்கப்போவதில்லை. கிருமியா முக்கியம் என்று காரியத்தில் இறங்கிவிடுவோம், தெரியும்!

16 – 01வரை — காஃபி கோப்பைகள், சமையலறையில் பயன்படுத்தும் ஸ்பாஞ்சுகள், கம்ப்யூட்டர் கீ போர்டு, தேன் இப்படி நாம் பயன்படுத்தும் எல்லாப் பொருள்களிலும் எண்ணிலடங்கா கிருமிகள் உள்ளன.

கடவுளுக்கு அடுத்தபடியாக எங்கும் நிறைந்திருப்பது கிருமிகள் மட்டுமே.

கிருமிகள் என்ன செய்கின்றன?

மனிதர்களுக்கு மரம் என்ன செய்கிறதோ அதைத்தான் கிருமிகளும் செய்கின்றன. நாம் வெளிவிடுவதை எடுத்துக்கொண்டு, நமக்கு வேண்டியதைக் கொடுக்கின்றன. கெட்டுப்போனவற்றையெல்லாம் recycle செய்து சுத்தப்படுத்துகின்றன.

இட்லி மாவு புளித்துப் போவது, பால் தயிராவது எல்லாவற்றுக்கும் காரணம் கிருமிகள்தான்.

இந்தப் பிரபஞ்சம் உருவானபோது கார்பண்டை ஆக்சைடு மட்டும்தான் இருந்தது. அதை ஆக்ஸிஜனாகவும் கார்பனாகவும் மாற்றியது கிருமிகள்தான்.

கிருமிகளில் 85 லட்சம் வகையானவை உள்ளன. அவற்றில் ஐந்து மட்டும்தான் கெட்டவை என்று கூறப்பட்டுள்ளது!

நமது உடம்பில் சுமார் 90 ட்ரில்லியன் கிருமிகள் உள்ளன. நம் உணவு செரிப்பதற்குக்கூட அவைதான் உதவுகின்றன.

டெங்கு, மெட்ராஸ் ஐ போன்ற பிரச்சனைகள் வந்தபோது அது எல்லாருக்கு வந்ததா? இல்லை. சிலருக்கு மட்டும் வந்தது. ஏன்? அவர்களது எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தது. அதனால்தான்.

ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நோய் பரவுவதில்லை. சில ஒட்டகங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போனபோது, ஒரு ஒட்டகத்திடமிருந்து இன்னொரு ஒட்டகத்துக்கு நோய் பரவிவிட்டதாக சொல்லப்பட்டபோது முஹம்மது நபி (ஸல்), ‘அப்படியானால் அந்த உடல் நிலை கெட்டுப்போன அந்த முதல் ஒட்டகத்துக்கு நோய் எங்கிருந்து வந்தது?’ என்று கேட்டார்கள்.

அதாவது நோய் தொற்றியது என்ற கருத்தை மறுத்துள்ளார்கள்.

மஞ்சள் காமாலை, டெங்கு, காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் நீரில் உள்ள கிருமிகளால் பரவுவதாக சொல்லப்பட்டது. அப்படியானால் நம் எதிரி நாடுகளுக்கு ராணுவத்தை அனுப்புவதற்கு பதிலாக அங்கே போகும் நதிகளில் நோக்கிருமிகளை அனுப்பி அவர்களை அழித்துவிடலாமே!

எனவே சும்மா எதற்கெடுத்தாலும் அஞ்சவேண்டாம். கிருமிகள் நமக்கு நன்மைதான் செய்கின்றன.

About நாகூர் ரூமி

A spiritualist and a writer.
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

1 Response to நன்மை செய்யும் கிருமிகள்

 1. Senthil Kumar says:

  அருமை! அருமை!! அருமை!!! கிருமிகள் பற்றிய அற்புதமான பதிவு 👌
  உன்மையை பதிவிட்டதற்கு நன்றி ஐயா 🙏

  உங்கள் புத்தகங்கள் அனைத்து அருமை. “அடுத்த வினாடி” புத்தகம் ஒரு பொக்கிஷம். அடுத்த வினாடி புத்தகத்தை போன்ற ஒரு அற்புதமான புத்தகத்தை நான் என் வாழ்க்கையில் கண்டதில்லை.

  “நான் அடுத்த வினாடி புத்தகத்தின் கருத்துகளை அனைத்தும் தொடர்ந்து என் வாழ்க்கையில் பின்பற்றி வருகிறேன்”

  உங்கள் அற்புதமான எழுத்துக்கள் அனைத்தும் என்னைப் போன்றவர்களுக்கு வாழ்க்கையின் கலங்கரை விளக்காக அமைந்துள்ளது.
  உங்கள் எழுத்துப் பணி மென்மேலும் சிறப்பாக தொடர வேண்டும்.

  உங்களுடைய ஆழ்மன பயிற்சி வகுப்பு எப்பொழுது நடக்கும் என்று தெரியப்படுத்துங்கள் ஐயா

  செந்தில் குமார் கா
  சென்னை.
  93 808 95 768

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s