நான் எழுதிய உமர் கய்யாமின் ருபாயியாத் என்ற நூல் சமீபத்தில் வெளியானது. அதில் ’பாரசீகத்திலிருந்து தமிழில்’ என்று முன் அட்டையில் போடப்பட்டுள்ளது. அதையொட்டி சிலர் என்னிடம் எனக்கு பாரசீகம் தெரியுமா என்று கேட்டனர். இதற்கு நேர்மையான பதில்கள் இரண்டு. ஒன்று தெரியும். இன்னொன்று தெரியாது. வரும் ஆனால் வராது என்பது போன்ற இந்த பதில் எப்படி நியாயமான பதிலாக, உண்மையான பதிலாக இருக்க முடியும்?! கேள்வி சரிதான். எனக்கு அரபி தெரியுமா, உர்து தெரியுமா என்ற கேள்விகளும் …