முன்னுரை மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்த இறைவனுக்கே புகழனைத்தும். அக்டோபர் 2000 சிந்தனைச்சரம் இதழில் ஹெச்.பௌஜில் ஹக் ஆலிம் என்ற சகோதரர் ஒரு கடிதம் எழுதி வருத்தப்பட்டிருக்கிறார். மறைவானவற்றை இறைவன் மட்டுமே அறிவான். பெருமானார்(ஸல்) கூட அவற்றை அறிய வாய்ப்பில்லாதபோது, காயல்பட்டினத்திலிருந்து சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் புறப்பட்டதை தக்கலையில் இருந்த பீரப்பாவால் எப்படி அறிந்துகொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பி, சகோதரர் ஹெச்.ஜி.ரசூல் அவர்களுடைய வாய்மொழி வரலாற்றுப் பகுதிக்கான தனது ஆட்சேபணையையும் சொல்லி, அதற்கு ஆதாரமாக திருமறையின் ஏழாம் …