நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு மாதிரி ’பேண்ட்’ போடுவேன். பாதத்தின் பக்கம் வரும்போது அது பெரிதாக விரிந்திருக்கும். ’பெல் பாட்டம்’ என்று அதற்குப் பெயர். ’பாபி’ படத்தில் ரிஷி கபூர் அப்படித்தான் போட்டிருப்பார். எனக்கும் ரிஷி கபூர் என்று நினைப்பு! என் வயதைக் கருத்தில் கொண்டு, அந்த முட்டாள்தனத்தை மன்னித்துவிடலாம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் இன்று வேறு வகையான ஒரு பழக்கம் மக்களிடையே தலைதூக்கி உள்ளது. ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், இளைஞிகள், கிழவர்கள், கிழவிகள், ஒல்லியானவர்கள், …