சரியான நேரம் எது பெருமானார் எங்களுக்கு ஏதாவது மார்க்கம் பற்றியோ வேறு விஷயங்கள் பற்றியோ எடுத்துச்சொல்ல வேண்டுமெனில் தகுந்த நேரத்தில் சொல்லுவார்கள். எங்களுக்கு அலுப்பு சலிப்பு ஏற்படாத வண்ணம் வசதியான ஒரு நேரத்தில்தான் சொல்லுவார்கள். எல்லா நேரத்திலும் எங்களிடம் மார்க்கம் பற்றி விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என்று இப்னு மசூத் அறிவிக்கிறார்கள். (புகாரி, எண் 68) இது ரொம்ப முக்கியமானது. எதையும் நாம் உகந்த நேரத்தில் செய்யவேண்டும். நேரம், காலம் பார்க்காமல் ஒரு காரியத்தை நாம் செய்யும்போதுதான் …