ஒவ்வொரு மொழிக்கும் அதற்கேயுரிய மரபுத்தொடர்கள் மற்றும் சொற்றொடர்கள் உண்டு. ஆங்கிலத்தில் அவற்றை idioms and phrases என்று கூறுவர். அவற்றை நன்கு அறிந்திருப்பது ஒரு மொழியின்மீது நமக்குள்ள ஆளுமையின் வெளிப்பாடாக இருக்கும். ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்ள அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தபோது சில வியப்புகள் எனக்கு ஏற்பட்டன. அந்த வியப்பை ஒரு புத்தகமாகக் கொடுப்பதன் மூலம் ஒருவரது ஆங்கில அறிவும் தமிழறியும் பெருகும், ஆழமாகும் என்பதால் இந்த விஷயத்தையே நாம் ஒரு நூலாக ஏன் எழுதக்கூடாது என்று எனக்குத் …