ஈமானும் அசுத்தமும் மதினாவின் ஒரு தெரு வழியாகப் பெருமானார் வந்துகொண்டிருந்தார்கள். அப்போது நபித்தோழர் அபூ ஹுரைரா அவர்களும் அவ்வழியாக வந்துகொண்டிருந்தார். ஆனால் பெருமானார் தன்னைப் பார்க்காதவாறு அவர் வேறு வழியாகச் சென்றுவிட்டார். ஏன்? ஏனெனில் அவர் மனைவியோடு கூடிவிட்டு குளித்துச் சுத்தமடையாமல் இருந்தார். அந்த நிலையை அரபியில் ’ஜுனூப்’ நிலை என்று கூறுகிறார்கள். அந்த நிலையில் பெருமானாரைச் சந்திக்க அவர் விரும்பவில்லை. திரும்பி வந்தபோது அவரைப் பார்த்துப் பெருமானார் கேட்டார்கள், ‘ஓ அபூ ஹுரைரா, எங்கிருந்தீர்கள்?’. ’நான் …