தியானம் செய் என்றார் குரு நான்தான் கவிதை எழுதுகிறேனே என்றேன் சினந்தார் எனக்கு தியானம் புரிந்த அளவுக்கு அவருக்கு கவிதை புரியவில்லை! (கவிஞர் நாகூர் இஜட்.ஜபருல்லா) தியானம் பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மை ஒன்று உண்டு. அது இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அது என்ன? தியானம் என்றால் என்னவென்று புரிந்து கொள்ளாமல் வாழ்வில் வெற்றி கிடைக்காது. ஆமாம், இதுதான் அந்த உண்மை. எனவே தியானம் பற்றிய சரியான புரிந்து கொள்ளலலை ஏற்படுத்திக் கொள்வது …