குழந்த தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. துணித்தொட்டில். சுத்தமான மென் பருத்தி மல்லியப் பொட்டிஸ் தாவணித் தொட்டில். தொட்டிலிருந்து சுமார் எட்டடி தூரத்துக்கு ஒரு கயிறு. அதன் ஒரு முனை தொட்டிலோடு. இன்னொரு முனை தரையில் குப்புறப்படுத்துக் கொண்டு எழுதிக் கொண்டிருந்த இளைஞரின் இடது கையில். வலது கை மும்முரமாக வெள்ளைத் தாளில் கற்பனையைக் கொட்டிக் கொண்டிருந்தது. ஆமாம். அந்த இளைஞர் சிறுகதை எழுதிக் கொண்டிருந்தார். குழந்தை உசும்பும்போதெல்லாம் தொட்டிலை இடது கைக் கயிற்று முனையால் ஒரு இழு. …