கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி அலைபேசியில் அழைத்தார். அவர் எப்போதாவதுதான் -- முக்கியமான விஷயமாக இருந்தால் மட்டும் -- அழைப்பார். என்னவென்று கேட்டேன். வாழ்த்துச் சொன்னார். நல்லி திசை எட்டும் 2009-க்கான மொழியாக்க விருதுகள் பெற்ற பத்து பேரில் நானும் ஒருவன் என்றும், நான் தமிழாக்கம் செய்த ஹோமரின் இலியட் காவியத்துக்காக அந்த விருது என்றும் சொன்னார். கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் இரவு பகல் பாராமல் செய்த வேலை அது. அதற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பது குறித்து சந்தோஷம்தான். …