தொழுகையில் அகந்தையை அழித்தல் ஒருமுறை பெருமானாரிடம் ஒருவர் வந்து, என்னால் கூட்டுத்தொழுகைக்கே செல்ல முடியவில்லை. ஏனெனில் அந்த இமாம் தொழுகையை ரொம்ப நேரம் நீட்டித்துக்கொண்டே போகிறார் என்று சொன்னார். அதைக்கேட்ட பெருமானார் மிகவும் கோபமாக அறிவுரை ஒன்றைக் கூறினார்கள். அவர்கள் அவ்வளவு கோபப்பட்டுத் தான் பார்த்ததில்லை என்று இந்த நபிமொழியை அறிவிப்பவர் கூறினார். சரி, பெருமானாருடைய உபதேசம்தான் என்ன? ’மக்களே, உங்களில் சிலர் நல்ல காரியங்களை (அதாவது தொழுகையை) அடுத்தவர் வெறுக்கும்படிச் செய்துவிடுகின்றனர். தொழுகைக்கு இமாமத் செய்யும்போது …