தூயவன் — ஓர் அறிமுகம்

தூயவன் ரசிகரும் நடிகருமானவர் வரைந்த படம்
தூயவன் ரசிகரும் நடிகருமானவர் வரைந்த படம்

குழந்த தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. துணித்தொட்டில். சுத்தமான மென் பருத்தி மல்லியப் பொட்டிஸ் தாவணித் தொட்டில். தொட்டிலிருந்து சுமார் எட்டடி தூரத்துக்கு ஒரு கயிறு. அதன் ஒரு முனை தொட்டிலோடு. இன்னொரு முனை தரையில் குப்புறப்படுத்துக் கொண்டு எழுதிக் கொண்டிருந்த இளைஞரின் இடது கையில். வலது கை மும்முரமாக வெள்ளைத் தாளில் கற்பனையைக் கொட்டிக் கொண்டிருந்தது. ஆமாம். அந்த இளைஞர் சிறுகதை எழுதிக் கொண்டிருந்தார். குழந்தை உசும்பும்போதெல்லாம் தொட்டிலை இடது கைக் கயிற்று முனையால் ஒரு இழு. குழந்தையும் தொட்டில் அசைவதன் பொருட்டு தொடர்ந்து அழாமல் உறங்கிப் போனது.

அந்த இளைஞரின் பெயர் அக்பர். ஆனால்  1960-களில் இலக்கிய உலகிலும் 70-களில் சினிமா உலகிலும் தூயவன் என்ற பெயரில் பிரபலமானவர். அவர் தொட்டிலை ஆட்டிக் கொண்டிருந்தது நாகூர் நெல்லுக்கடைத் தெருவில் இருந்த அவரது பெரியாப்பாவின் வீடு. அங்குதான் அவர் வளர்ந்தார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்.

அவர் தொட்டிலில் அவ்வப்போது ஆட்டிவிட்டுக் கொண்டிருந்த குழந்தைதான் இப்போது அவரைப் பற்றி இங்கே எழுதிக் கொண்டிருக்கிறது! ஆம். தூயவன் எனது தாய் மாமா. என் தாய்வழிப் பாட்டனாரின் தம்பி மகன்.

1960-70களின் திரைப்பட மிகவும் பிரபலமான, வெற்றியை மேலும் மேலும் பெற்றுக்கொண்டே சென்ற ஆளுமை தூயவன்.

அவர் இலக்கிய உலகில் பிரபலமானதற்கு இரண்டு காரணங்கள். 1. அவருடைய சிறுகதைகள். 2. அவருடைய நாடகங்கள்.

குமுதம், ஆனந்த விகடன், மாலை முரசு, தினந்தந்தி, ராணி, நயனதாரா போன்ற அக்காலத்தில் உலா வந்த எல்லா வார மற்றும் மாத இதழ்களிலும் அவர் கதை எழுதினார் என்றாலும், அவரை சிறுகதை உலகில் ஸ்டார் அந்தஸ்து பெற வைத்ததது ஆனந்த விகடன்-தான் என்று சொல்ல வேண்டும்.

அப்போது விகடனில் முத்திரைக் கதைகள் வந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு முத்திரைக்கதைக்கும் பரிசு 101 ரூபாய். அது ஒரு கட்டத்தில் 501 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அப்படி உயர்த்தப்பட்ட நேரத்தில் அந்த பரிசைப் பெற்ற முதல் கதை தூயவனுடையது!

உயர்ந்த பீடம்

எம்ஜியார் கையால் தங்க மெடல்
எம்ஜியார் கையால் தங்க மெடல்

அவர் எழுதிய முத்திரைக் கதையின் தலைப்பு உயர்ந்த பீடம். இந்த கதையின் தலைப்புக்குப் பின்னால் இன்னொரு கதை உள்ளது. அது ஆன்மீகத் தொடர்புடையது. தூயவன் இளைஞராக இருந்தபோதே எனது குருநாதரான ஹஸ்ரத் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் பிரியமான சீடராக இருந்தவர். வாழ்வில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற வெறியுடன் இயங்கிக் கொண்டிருந்த காலகட்டம் அது. (தூயவனின் தந்தை ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் அந்தக் காலத்திலேயே Sub-Registrar — ஆக இருந்தவர். என்றாலும் தூயவனின் கல்வி 9வது 10-வதுக்கு மேல் போகவில்லை. காரணம் தெரியவில்லை. ஆனால் கற்பனை என்பது ஆண்டவன் கொடுக்கும் வரமல்லவா? அதற்கு படிப்பு தேவையா என்ன?)

நாகூர் தர்காவில் படுத்து உறங்குவது வழக்கம். (எனக்கும் அந்தப் பழக்கம் இருந்தது. குறிப்பாக பரீட்சை நாட்களில்). அப்படி ஒருநாள் உறங்கியபோது அதிகாலை நான்கு மணியளவில் — பொதுவாக காலையில் நான்கு மணிக்கெல்லாம் தர்காவில் கூர்கா பிரம்பை தரையில் அடித்து நம்மை எழுப்பிவிடுவார் — யாரோ தூயவனை எழுப்பினார்கள். கூர்க்காவாகத்தான் இருக்கும் என்று நினைத்த தூயவன் கண்ணைக் கசக்கிக் கொண்டு தன்னை எழுப்பியவரைப் பார்த்தார். எதிரே நின்ற மனிதரின் உருவம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால்  பெரிய மனிதர் என்று புரிந்து கொள்ள முடிந்தது. ’ஏன் இங்கே இருக்கிறாய், கிளம்பிப் போ, உனக்கு உயர்ந்த பீடம் காத்திருக்கிறது’ என்று சொல்லிவிட்டு அந்தப் பெரியவர் மறைந்துவிட்டார். அப்பெரியவர் நாகூர் தர்காவில் அடக்கமாகியிருக்கும் பெரிய எஜமான் என்று அழைக்கப்படும் ஞானி காதிர் வலீ அவர்கள்தான் என்பது தூயவனின் மனைவி, தூயவன் மற்றும் எனது நம்பிக்கை.

அதன் பிறகு சென்னை வந்த தூயவன் பல கஷ்டங்கள் பட்டார். ஆனால் அவரை இலக்கிய உலகில் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது 501 ரூபாய் பரிசு வாங்கிய அந்த சிறுகதைதான். அதன் தலைப்பும் உயர்ந்த பீடம்! (விகடனில் முத்திரைக்கதைகள் பலவற்றை தூயவன் எழுதி இருக்கிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக ஒருகதைகூட இப்போது அவர் மனைவி வசம் இல்லை).

சிறுகதைகள், மாத நாவல்கள் என்று எழுதிக் கொண்டிருந்த தூயவன் நாடகங்கள் எழுத ஆரம்பித்தார். பால்குடம் என்ற தலைப்பில் அப்போது பிரபல நடிகர்களாக இருந்த மேஜர் சுந்தரராஜன், ஏவிஎம் ராஜன், புஷ்பலதா ஆகியோருக்காக ஒரு நாடகம் எழுதினார். அது பெரிய வெற்றி பெற்றதன் பலனாக அது திரைப்படமாகவும் வந்தது.

 • தூயவன் கிட்டத்தட்ட 84 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார்.
 • ஏழு திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
 • ரஜினிகாந்துக்காக மட்டும் 12 படங்கள் (ரங்கா, பொல்லாதவன், அன்புக்கு நான் அடிமை போன்றவை). ரஜினிக்காக எழுதிய படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்.
 • ஜெய்ஷங்கர் நடித்தது 25க்கும் மேல் (அன்னை ஓர் ஆலயம், தாய்வீடு போன்றவை.  ஜெய்ஷங்கர் நடித்த கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன என்ற படத்துக்கு ஜனாதிபதி விருது கிடைத்தது).

தேவர் பிலிம்ஸ், முக்தா பிலிம்ஸ் போன்றவற்றின் கதை இலாகாவின் பிரதம எழுத்தாளராக இருந்தார். பல சமயங்களில் கதை இலாகா என்பதே தூயவன் ஒருவராக மட்டுமே இருந்துள்ளது! பல திரைப்படங்கள் அவர் வசனம் எழுதியும் அவர் பெயர் இல்லாமலேகூட வெளிவந்துள்ளன.

அவர் வசனமெழுதிய முக்கியமான திரைப்படங்கள் (என் ஞாபகத்தில் இருந்து)

 • ஆட்டுக்கார அலமேலு
 • பொல்லாதவன்
 • கங்கா யமுனா காவேரி
 • புதிய பாதை
 • மனிதரில் மாணிக்கம்
 • திக்குத் தெரியாத காட்டில்
 • ஜப்பானில் கல்யாண ராமன்

Thooyavan

Bagyaraj and Thooyavan

அவர் சொந்தத் தயாரிப்பில் உருவான படங்கள்:

1. விடியும்வரை காத்திரு — பாக்யராஜ், சத்யகலா ஆகியோர் நடித்தது. பாக்யராஜுக்கு வில்லன்தனமான வேடம். இது ST கம்பைன்ஸ் தயாரிப்பு. எஸ் என்பது தேவரின் சின்ன மருமகன் சக்திவேலையும், ட்டி என்பது தூயவனையும் குறிக்கும்.

நிற்க, பாக்யராஜை பாரதிராஜாவிடம் அறிமுகப்படுத்தியதே தூயவன் தான். ஈரோடு முருகேசன், ஜான் போன்றவர்களையும் தூயவனே திரைப்படத்துறைக்கு அறிமுகப்படுத்தினார்.

2. கேள்வியும் நானே பதிலும் நானே — கார்த்திக் நடித்தது.

3. அன்புள்ள ரஜினிகாந்த் — ரஜினி, மீனா நடித்தது. மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதும் தூயவனின் இப்படத்தின் மூலமாகத்தான். இப்படத்துக்காக தூயவனுக்கு சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது, சினிமா க்ரிட்டிக் விருது, சாந்தோம் விருது போன்ற  விருதுகள் கிடைத்தன. இப்ப்டம்  உருவான விதம் பற்றி தயாரிப்பாள் நண்பராக இருந்த தமிழ் மணி சொல்வதைக் கேட்க இங்கே செல்லவும்.

4. தலையாட்டி பொம்மைகள் — கவுண்டமணி, வினுச்சக்கரவர்த்தி போன்றோர் நடித்த நகைச்சுவைப் படம்.

5. வைதேகி காத்திருந்தாள் — விஜயகாந்த், ரேவதி நடித்த படு ஹிட்டான படம். விஜயகாந்த்-துக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்த படம்.

6. நானே ராஜா நானே மந்திரி — விஜயகாந்த, ஜீவிதா நடித்தது.

7. உள்ளம் கவர்ந்த கள்வன் — பாண்டிய ராஜன், ரேகா ஆகியோர் நடித்தது. இப்படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது பாதியில்தான் தூயவன் காலமானார். ஹிந்தியில் ஹிட்டாக இருந்த அமோல் பலேகர், ஜரினா வஹாப் நடித்த ’சிச்சோர்’தான் இது.

இதல்லாமல் குங்குமச்சிமிழ் என்ற படத்தயாரிப்பில் அவர் பார்ட்னராகவும் இருந்துள்ளார். படத்தின் தலைப்பு அவருடைய முத்திரைக்கதைத் தலைப்புகளில் ஒன்றுதான்.

1978-ம் ஆண்டு பலப்பரீட்சை என்ற திரைப்படத்துக்காக (முத்துராமன், சுஜாதா நடித்தது) சிறந்த வசனகர்த்தாவுக்கான தமிழக அரசின் விருதை — ஆறு பவுனுக்கு மேல் இருந்த உண்மையான தங்கப்பதக்கம் — அப்போதைய முதல்வராக இருந்த எம்ஜியார் கையால் தூயவன் பெற்றுக்கொண்டார். எம்ஜியாரின் அன்புக்கும் பாத்திரமானார். (தூயவன் இறந்த பிறகு அவர் உடல் அடக்கஸ்தலம் செல்லும்வரை பாண்டிபஜார் சாலையை traffic free யாக  வைக்க எம்ஜியார் உத்தரவிட்டார் என்றும், சென்னையில் வைத்த மையித் செலவுகளை பாக்யராஜ்தான் செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. நான் இதுபற்றி தூயவன் மனைவிடம் கேட்டு உறுதி செய்யவில்லை).

தூயவனின்  சில கதைகளை அவர் மனைவியும் எழுத்தாளருமான தூயவள் என்கிற ஜெய்புன்னிஸா மாமி அவர்கள் என்னிடம் கொடுத்துள்ளார். தூயவன் விகடனில் எழுதிய முத்திரைக் கதைகளின் பிரதியைப் பெற முயற்சி செய்கிறேன். இனி அடுத்தடுத்த பதிவுகளின் (நான்) தேர்ந்தெடுத்த சில கதைகளை ஒவ்வொன்றாக இடுகிறேன்.

மாமியும் நானும்சி
மாமியும் நானும்

ஒரு வகையில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. என் மாமா ஒரு பிரபலமான, அதே சமயம் தரமான இலக்கிய கர்த்தா. (ஒரு ரசிகர் அவரை தத்ரூபமாக வரைந்திருக்கிறார். அந்தப்படம் இன்னும் அவர் வீட்டில் உள்ளது). அவரிடமிருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. உதாரணமாக, அவருடைய கதைகளில், அனேகமாக எல்லாக் கதைகளிலுமே, O Henry Twist மாதிரியான ஒரு விஷயம் முடிவில் இருக்கும். அதேபோல, ஒரு திரைப்படத்தன்மையையும் அவர் கதைகளில் என்னால் காண முடிகிறது.

கட்டுப்பாடற்ற குடிப்பழக்கம் மட்டும் இல்லாமலிருந்தால் தூயவன் மாமா நீண்டகாலம் வாழ்ந்திருப்பார் என்றே நினைக்கிறேன். (நாகூர் வீட்டுக்கு வந்த அவரை இறுதியாக உயிரோடு நான் பார்த்தபோது மரத்தொட்டியில் உட்கார்ந்த அவர் அதில் வைத்த சிகரட் பாக்கட்டை எடுக்கக்கூட தெம்பில்லாத அளவுக்கு அவர் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது).

திருமணத்தின்போது
திருமணத்தின்போது

தூயவன் — சில குறிப்புகள்

இயற்பெயர் — எம். எஸ். அக்பர்.

புனைபெயர் — தூயவன்

பிறப்பு — 22 – 01 – 1947 நாகூரில்

தந்தையார் பெயர் — ஷாஹ் வலியுல்லாஹ் B.A. (Sub Registrar and Hon’ble Magistrate for 3 Years)

தாயார் பெயர் — ஃபாத்திமா ஜொஹ்ரான்

மனைவி — ஜெய்புன்னிஸா (தூயவள் என்ற பெயரில் நிறைய கதைகள் எழுதியவர், தொடர்ந்து எழுதி வருபவர்)

திருமணம் — 27 – 09 – 1968 கோவையில் (அவர் மனைவி ஜெய்புன்னிஸா அவருடைய ரசிகை. அவர் கஷ்டப்பட்ட காலத்தில் (அது பற்றி ஒன்றும் தெரியாமலே, ஆனால் உள்ளுணர்வால் உந்தப்பட்டு) தூயவனுக்கு பணம் அனுப்பியவர்).

குரு —  மறைந்த ஞானி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள்.

இறப்பு — 11 – 07 – 1987.

மனைவியும் மகளும்
மனைவியும் மகளும்

தூயவனுக்கு இக்பால் (பாபு), யாஸ்மின் ரோஷனாரா பேகம் (பேபி) என்ற இரண்டு குழந்தைகள். பாபு தொலைக்காட்சியில் சீரியல்கள் எடுப்பதில் ஆரம்பத்தில் ஈடுபட்டிருந்தார். இப்போது தனியாக தொழில் செய்து கொண்டிருக்கிறார். பாபு, பேபி இருவருக்குமே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். தூயவள் தற்போது தி நகர் டேனியல் தெருவில் உள்ள தூயவன் இல்லத்தில் வசித்து வருகிறார். (எனக்கு கிடைத்த கதைகளையும் புகைப்படங்களையும் கொடுத்து உதவியர் ஜெய்புன்னிஸா மாமி). கூடுதல் தகவல்களையும் சில திருத்தங்களையும் கொடுத்து உதவியவர்கள் தூயவனின் மகன் பாபு, மற்றும் மகள் பேபி. அவர்களுக்கும் என் நன்றி.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற பழமொழிக்கு ஏற்பத்தான் நான் என் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் நடந்து கொண்டுள்ளேன். என் பாட்டனார் ஷரீஃப் பேக் அவர்களின் அழகான ஆங்கிலத்தை அவர் வாழ்ந்த காலத்தில் நான் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளத் தவறினேன். என் பெரியம்மா சித்தி ஜுனைதா பேகம் அவர்களின் எழுத்து ஆற்றலை அவர்களோடு பழகிய, அவர்கள் வாழ்ந்த காலத்தில் முற்றிலும் புரிந்து கொள்ளாமல் இருந்தேன். என் மாமா தூயவனோடு சென்னையில் நானிருந்த காலங்களிலெல்லாம் நான் அவரைப் பற்றி எதுவுமே தெரிந்துகொள்ளவில்லை. சென்னை எல்டாம்ஸ் சாலையில் அப்போது அவர் இருந்த வீட்டுக்கு வந்த ஸ்ரீதேவியை மட்டும் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்துவிட்டேன்!

இப்போது நான் செய்யும் காரியங்களால் அவருடைய ஆன்மா சந்தோஷப்படுமானால் அதுவே எனக்கும் சந்தோஷம். விரைவில் அவருடைய தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பையும் கொண்டுவர எண்ணம்.

எனக்குக் கிடைக்காத பல தகவல்கள் 10 & 14.08.2007  தேதியிட்ட  தினந்தந்தியில் வெளியானது. அதைப் படிக்க ஆபிதீனின் இந்தப் பக்கத்துக்குச் செல்லவும்.

25 Replies to “தூயவன் — ஓர் அறிமுகம்”

 1. தூயவன் அவர்கள் வசனமெழுதிய இன்னொரு முக்கியமான படம், “ரங்கா” – ரஜினிகாந்த், ராதிகா, கராத்தே மணி நடித்தது. இந்த படத்தில் ஒரு காட்சியில் அவர் நடித்தும் இருப்பார்.

  இது போக, சமீபத்தில் பாக்யராஜ் அவர்கள் ஒரு விழாவில் பேசும் போது அவர் திரைக்கதையில் பெரிய ஆளாக இருப்பதாக சொல்கிறார்கள், ஆனால் அதற்கு தூயவன் போன்றோர்கள் என்னுடன் இருந்தது ஒரு காரணம் என்று பேசியிருந்தார்.

  1. அன்பு இஸ்மாயீல், ஆமாம் நான்கூட மறந்துவிட்டேன். ரொம்ப நன்றி, அந்தப் படத்தை நானும் பார்த்தேன்.

   தூயவன் பற்றி மேற்கொண்டு தகவல்களோ, அவருடைய கதைகளோ இருப்பின் அனுப்பி உதவவும்.

   அன்புடன்
   ரூமி

 2. ஊர்ல சேக்கலா நானா (சேக் அலாவுதீன் நானா) விடம் இருக்கும் என்று நினைக்கிறேன், நானா.

 3. இளந்தலைமுறையினர் பலர் கதாசிரியர் தூயவனை அறிந்திருக்க வாய்ப்பில்லை. தங்களது இந்த கட்டுரை நாகூரில் வாழ்ந்த படைப்பாளிகளின் அரிய திறமைகளை அறியும் வண்ணமுள்ளது. வாழ்த்துக்கள்.

  என் வலைத்தளத்தில் http://nagoori.wordpress.com இக்கட்டுரைக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.

 4. assalamu alaikum macchan, thank u for ur honourable services done to my father’s achievement and made him remind everyone’s heart all over the world. May allah give u a long life and dua from ur mama (akbar) May ur services continue for ever. thanking you and very much greatful to u for ever.

  from Baby

  1. Thank u Baby, Your father is an inspiration to me and he is the pride of our family. It is my duty to write about him and record his achievements for future generation to understand.

   anbudan
   Rumi

 5. Dear machan, i read the article about my father, you have written it well and also you have edited it very well the painting of my father is done by Actor marthandam, who is also an painter he is acted in several films such as chinna thambie.tc my hearty congradulation for your writing and may god bless you with all wealth and health, it is very good work from you eventhough some more information can be added to it he has written 12 films for rajinikanth and more than 25 films for jaishankar to name a few, Annai oru alayam, Thai veedu,Ranga, Anbuku Naan adimai, Pollathavan, e.tc. all of the films for rajini are super hits, His last official film as writer is Anbulla Rajinikanth for which he has won cinema express award, cinema critic award, Santhome award e.tc. His films kilakum merkum santhikindrana starring Jaishankar, Padapat Jeya lakshmi won president award.

  His life history has published in Thinathanthi in Varalatru Chuvadugal

  with warm regards

  Iqbal@babu

 6. macchan, in ur arcticle my father”s film “ULLAM KAVARINTHA KALVAN” u have mentioned that pandiarajan and jarina wahab, its not jarinawahab its Rekha(tamil) in hindi only jarina wahab.by baby

 7. dear macchan, when i was young my father expired, on that time i did’nt know my father’s popularity but little bit. now only i can realise that he was a best and popular writer, becse after his death everyone would have forgot. for an ex: a battery, charger and a cell, if cell is not charged means v can’t use it, like that for past 20 yrs my father’s fame become chargeless cell. now u r like an adapter came from nagore after some years, and recharged my father as a pokkisam. can u tell me any other word for that meant “Nandri” only three letter word can’t make me satisfied. by baby.

  1. Dear Baby, U love ur father just as I do. My mother loved him very much and took care of him. That’s why he had a great love for my mother and me. I love him as my uncle and as a meritorious writer. I have asked Ananda Vikatan people to give me copies of his Muthira Kadhaigal published in the 60s, They have immediately responded and asked me to come and search their archive after Deepavali. If u want u can also come with me and search. Babu also can come. But I don’t know if they will permit three or two. But we can try. Or I will go myself and collect copies of all his stories available with Vikatan. Insha Allah I shall publish his stories as a book.

   anbudan Rumi Machan

 8. Dear Baby, U love ur father just as I do. My mother loved him very much and took care of him. That’s why he had a great love for my mother and me. I love him as my uncle and as a meritorious writer. I have asked Ananda Vikatan people to give me copies of his Muthira Kadhaigal published in the 60s, They have immediately responded and asked me to come and search their archive after Deepavali. If u want u can also come with me and search. Babu also can come. But I don’t know if they will permit three or two. But we can try. Or I will go myself and collect copies of all his stories available with Vikatan. Insha Allah I shall publish his stories as a book.

  anbudan
  Rumi Machan

 9. dear machan, what a co-insidy! for past 3 days i thought of making my father’s story as a book, this is my duty but i dont know what and how to do? but i can cooperate with u, if u collect the stories not only stories but also his lifehistory from “DAILY THANTHI” and make them to publish as a book. I will b very happy, for past twenty years i dont have any idea about this after i met u i understood that its duty of me and babu. but v never care about this, and v r doing our own family duty and forgot everything. its very nice of u to do this sort of things. if u want any help i can do it. that means anything regarding writings or to make spell check etc. ok bye. thank u . by baby

 10. என்னுடைய மாணவப்பருவத்தில் கதாசிரியர் தூயவன் அவர்களின் நல்ல கதைகளைப் படித்து மகிழ்ந்திருக்கிறேன். அவரின்மேல் எனக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பும் உண்டு. அவரைப் பற்றிய செய்திகளை படிக்கும்போது என்னுள் ஒரு பரவசமும் ஆத்ம திருப்தியும் ஏற்படுகிறது. எனக்கு குருவைப் போன்றவர் அவர்.

  பிரியமுடன்
  திருச்சி சையது
  Ex. Cashier, Jamal Mohamed College, Trichy.

 11. தூயவன் அவர்களின் நல்ல கதைகளை படித்தால் தூய்மையாகும் மனசு!

  பிரியமுடன்
  திருச்சி சையது.

 12. ரபி , குடும்ப உறுப்பினர்களே இப்படி மாற்றி மாற்றி தூயவன் சார் மீது பாசத்தை பொழிவது
  ஒரு கதை போலல்லவா இருக்கு ஆஹா அருமை இப்படி தனிருக்கணும். உண்மையில் படிக்கும் போதே மெய் சிலிர்க்குது. கூடிய விரைவில் இது போன்ற பாசங்கள் நிறைந்த கதையை கூட உங்களிடமிருந்து எதிர் பார்க்கலாம் போலிருக்கு. என்ன மாதிரி ஒரு எழுத்துக்களால் பாசங்களை தடவி பேசி – இல்லையில்லை – எழுதிக்கொள்கிறீர்களோ- உங்கள் பாசையில் சொன்னால் “சொறி” .

  அன்புடன்
  அப்துல் காதர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: